உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

TNPSC குரூப்-4 தேர்வுக்கான தரிவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம் - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

  • ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-4 தொகுதிக்குள் அடங்கிய பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
  • இந்தப் பட்டியலின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. 
  • குரூப் 4 தொகுதிக்கு உள்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களும் கணக்கில் சேர்க்கப்பட்டு விண்ணப்பதாரரின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி, காலிப் பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள தேர்வர்களின் தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
  • இந்த பட்டியலின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந் தாய்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவர். அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது., இதற்கான அழைப்புக் கடிதத்தை தேர்வர்கள் இணையதளத்திலி ருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 
  • இதுகுறித்த மேலும் விவரங்களை www.tnpsc.gov.in என்ற வலை தளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

2 comments:

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.