உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
 • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனி சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன், பள்ளிக்கல்வித் துறை செயலர் தீரஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த மார்ச் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அத் தேர்வில் சில மாணவர்கள் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தேர்வு எழுதச் செல்ல முடிய வில்லை என்ற விவரத்தை என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதை பரிசீலித்து, கடந்த மார்ச் 24-ம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறு ஒரு நாளில் தனியாக தேர்வு நடத்த வும் இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அனைத்து பள்ளிகள் இயங் காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது. இதனால், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாண வர்களால் இறுதித்தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருதியும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர, தேநீர் (டீ) கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழகம் முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்க மார்ச் 25-ம் தேதி (நேற்று) மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறையும் 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு நடைமுறையும் அமலில் உள்ளன. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் பிளஸ் 1 வகுப் புக்கு 3 பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முழு மையாக தள்ளி வைக்கப்பட்டது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுகின்றனர். எனவே, நடப்பாண்டு அசாதாரண சூழல் கருதி 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்ய தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் மற்றும் பொது மக்கள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை கருத்தில் கொண்டு தற்போது இந்த அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

இதேபோல புதுச்சேரியிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TN CENTRAL COOP BANK RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.04.2020.

 • TN CENTRAL COOP BANK  RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவியாளர் .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1383 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.04.2020.
 • இணைய முகவரி : www.slmdrb.in
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 1383 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. கடந்த வாரம் சில மாவட்ட பணியிடங்கள் பற்றி பார்த்தோம். இங்கு மேலும் சில மாவட்டங்களில் வாரியான பணியிட விவரம்:

சேலம் - 166, தர்மபுரி - 119, திண்டுக்கல்-111, கன்னியாகுமரி- 40, அரியலூர் -25, பெரம்பலூர்- 28, சிவகங்கை -37, தேனி -20, மதுரை -136, தூத்துக்குடி -96, திருச்சி -181, திருநெல்வேலி - 70, திருவண்ணாமலை -127, விழுப்புரம் -108, விருதுநகர் -119. மொத்தம் -1383 பணியிடங்கள் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள், கிளைகள் வாரியான காலியிட விவரங்கள், இட ஒதுக்கீடு அடைப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு படித்தவர்கள், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள், ராணுவத்தில் பணி செய்து, பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அப்போது புகைப்படம், கையொப்பம், சாதிச் சான்று, கூட்டுறவு பட்டய பயிற்சி சான்று, பட்டப்படிப்பு சான்று, கட்டண ரசீது உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளையும் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒருசில மாவட்ட கூட்டுறவு வங்கி பணிகளுக்கு ஏற்கனவே கடந்த 2019, ஆகஸ்டு, செப்டம்பர் காலங்களில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

சேலம் மாவட்ட பணிகளுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.slmdrb.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இது போல ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு பணிக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி மாறுபடுகிறது. அதிகபட்சமாக மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏப்ரல் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.‘

இதுபற்றிய விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கி இணையதள பக்கத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கள உதவியாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.

 • TANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : கள உதவியாளர்  .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2900 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 19.03.2020.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.
 • இணைய முகவரி : www.tangedco.gov.in
 • விளம்பரம் : CLICK HERE

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

UGC-NET, CSIR-NET தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு. ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

UGC-NET, CSIR-NET தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியது. www.nta.ac.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது | UGC NET - CLICK HERE | CSIR-NET CLICK HERE

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித் தேர்வர்கள் மார்ச் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் மார்ச் 30 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள் ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

தொடக்கக் கல்வி பட்டய தேர்வு (இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வு) ஜூன் 3-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி முடிவடை கிறது. இத்தேர்வுக்கு தனித்தேர் வர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறையின் இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

அத்துடன் ஏற்கெனவே தேர் வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல் களையும் இணைத்து தங்கள் இருப் பிடத்துக்கு அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறு வனத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் வெப்-கேமரா வசதி இருப்பதால் அங்கேயே புகைப் படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து தேர்வுக் கட் டணத்தையும் செலுத்திவிடலாம்.

தேர்வுக் கட்டணம் ஒரு பாடத் துக்கு ரூ.50, மதிப்பெண் சான்றி தழ் (முதல் ஆண்டு) ரூ.100, மதிப் பெண் சான்றிதழ் (2-ஆம் ஆண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50.

ஆன்லைன் விண்ணப்பங்களை மார்ச் 30 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். தபால் வழியாக பெறப்படும் விண்ணப் பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப் படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.

 • NLC RECRUITMENT 2019 | NLC  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 315 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.
 • இணைய முகவரி : www.nlcindia.com
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 315 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 259 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங், ஜியாலஜி, நிதி, எச்.ஆர். போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக மெக்கானிக்கல் பிரிவில் மட்டும் 125 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 75 இடங்களும் உள்ளன.

பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஜியாலஜி, நிதி, சி.ஏ., சி.எம்.ஏ., முதுநிலை படிப்புடன் எச்.ஆர். டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 1-3-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.854 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ரூ.354 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 18-ந் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. ஏப்ரல் 17-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இதற்கான தேர்வு மே 26, 27-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி இண்டஸ்ட்ரியல் டிரெயினி (நிதி) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு சி.ஏ., ஐ.சி.ஏ.ம்.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 26-ந் தேதியாகும்.

இது பற்றிய விவரங்களையும் மேற்குறிப்பிட்டு உள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.

 • DISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவியாளர் .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.
 • எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020
 • இணைய முகவரி : http://www.cuddrb.in
கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.

 • SSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
மத்திய அரசு துறைகளில் 1355 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி. அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் பேஸ்-8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லேப் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் என்ஜினீயர், சயின்டிபிக் அசிஸ்டன்ட், பீல்ட் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபீசர், டயட்டீசியன், டெக்னிக்கல் சூப்பிரன்டென்ட், டெக்ஸ்டைல் டிசைனர், பமிகேசன் அசிஸ்டன்ட், லேப் அட்டன்ட், லைபிரரி இன்பர்மேசன் அசிஸ்டன்ட், லைபிரரி கிளார்க், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.

ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள், ஒவ்வொரு துறையில் உள்ள காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். மொத்தம் 1355 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. பல பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்வித் தகுதி

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆபரேட்டர், லைபிரரி கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்களுக்கு லேப் அசிஸ்டன்ட், பமிகேசன் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கும் ஏராளமான பணியிடங்கள் உள்ளன.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி.) ஜூன் மாதம் 10,11,12-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssc.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த் தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த் தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப் படி அதிகரித்து வழங்கப்படு கிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்.

தற்போது மத்திய அரசு ஊழியர் களுக்கு 17 சதவீதம் அகவிலைப் படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடப்பு பருவத் துக்கு அகவிலைப்படியை எத்தனை சதவீதம் உயர்த்து வது என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலை மையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச் சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அகவிலைப்படி உயர்வால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர் களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர் களும் பயன் அடைவர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 1.13 கோடி குடும்பங்கள் பயன் அடையும்.

இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.14,595 கோடி செலவாகும். கடந்த ஜனவரி 1-ம் தேதி முன்தேதியிட்டு இந்த அக விலைப்படி உயர்வு வழங்கப் படும். மேலும், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 780 கிலோமீட்டர் தூரத்துக்கு தேசிய பசுமை நெடுஞ்சாலைத் திட்டம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.7,660 கோடி செலவில் இந்த பசுமை நெடுஞ்சாலைத் திட்டம் உ.பி., இமாச்சலபிர தேசம், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் அமைய வுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று பெயர் மாற்றம் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் பெயர் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று மாற்றப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. அவர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துப் பேசினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

1,575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக, ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும்.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே உள்ள திறமைகளை, பிறருடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும், மாணவர்களின் நலனுக்காக பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.12.84 கோடி செலவில் தோற்றுவிக்கப்படும்.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் வளர்ச்சியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும். சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒலி வடிவில் பாடநூல்கள் தயாரித்து வழங்கப்படும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் கல்வி அறிவையும், அவர்களது உடல் மற்றும் மனவலிமையையும் மேம்படுத்தும் வகையில், சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் உடல் இயக்க வல்லுநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பயிற்சியை மேம்படுத்த, நவீன கற்றல் மற்றும் உடல் இயக்க உபகரணங்கள் வழங்கப்படும். டி.பி.ஐ. வளாகத்தில் நூலகம் அமைக்கப்படும்.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்திய மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாணவர்களிடையே வாசிக் கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஆசிரியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். குடியிருப்பு வளாகங்களில் சமுதாய நூலகம் அமைக்கப்படும்.

மத்திய மற்றும் மாநில அரசின் விருது பெற்ற தமிழ் நூல்களை நூலகங்களுக்கு வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தையல், இசை மற்றும் ஓவியம் ஆகிய பாடங்களை பயிற்றுவிக்க தேவையான உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில், மாணவர்களின் பெயருடன் பெற்றோர்களின் பெயர்களை அச்சிட்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளையும், தனித்துவமான கலைத்திறன்களையும் வளர்க்கும் வண்ணம் கலை, இலக்கியப் போட்டிகளும் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்க பாரம்பரிய உணவுத்திருவிழாவும் நடத்தப்படும்.

மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவுத் திறன் தேர்விற்கான மாதிரி வினாவிடை கையேடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஏற்ப மேல்நிலைப்பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு முதன்மைப்பாடங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் விதமாக, பாடத்தொகுப்புகள் மேம் படுத்தப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்படும் கணினி வழி தேர்வுகளை வலுப்படுத்திட ஐ.ஐ.டி., எம்.ஐ.டி. போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு உடல் கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மற்றும் சாகச விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

தேசிய மாணவர்படை மாணவர்களின் பயிற்சிக்காக துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் மேலக்கோட்டையூரில் அமைக்கப்படும். தென் மாவட்ட தேசிய மாணவர்படை மாணவர்கள் விமானப்படை பயிற்சி பெற ஏதுவாக மதுரை மாவட்டத்தில் தேசிய மாணவர் படையின் விமானப் படை அணி நிறுவப்படும்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு மையம் அமைக்கப்படும். கல்லூரி செல்லும் விளையாட்டு மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு விடுதி வசதிகள் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் பெற்றோர் பெயர் இடம்பெறும் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் பெற்றோர்களின் பெயர்களும் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட் டுத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற் றது. அதன்பின் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் விவரம்: நடப்பு கல்வியாண்டில் சிறை கைதிகளுக்கு அடிப்படை எழுத் தறிவு கல்வித்திட்டம் அமல்படுத்தப் பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு அடுத்ததாக 3-ம் வகுப் புக்கு நிகரான சமநிலை கல்வித் திட்டம் ரூ.20.33 லட்சத்தில் நிறை வேற்றப்படும்.

வாசிப்பு பழக்கத்தை ஊக்கு விக்க ஒரே குடும்பத்தில் அதிகபட் சம் 5 உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி குடும்பத்தை சார்ந்த ஒருவர் ரூ.100 செலுத்தி உறுப்பின ராகி ஒரேசமயத்தில் 5 நூல்களை பெறலாம். இதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெற்றோர் பெயரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் 2, 3-ம் வகுப்புகளில் பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைதீர் கற்றல் பயிற்சி புத்த கங்கள் வழங்கப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மேம்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உரை வடிவில் திருக் குறளை அச்சிட்டு அதை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும். அதேபோல், பணிக்காலத்தில் இயற்கை எய்தும் நூலக பணியாளர்களுக்கு, இனி நூல் இழப்புக்கான அபராத தொகை முழுவதும் ரத்து செய்யப்படும்.

தேசிய மாணவர் படை மாணவர்கள் பயிற்சிக்காக ரூ.90 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் அமைக்கப்படும். தென்மாவட்டங் களில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள் விமான பயிற்சி பெற ஏதுவாக மதுரையில் 1.20 கோடியில் விமானப்படை அணி நிறுவப்படும் என்பன உட்பட மொத்தம் 48 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள் விமான பயிற்சி பெற ஏதுவாக மதுரையில் 1.20 கோடியில் விமானப்படை அணி நிறுவப்படும்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி...வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வு விடைத்தாள்கள் மண்டல அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வருகிற 31-ந்தேதி முதல் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதியுடன் இதற்கான பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து, அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மதிப்பெண் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பின்னர், இந்த தேர்வுக்கான முடிவு அடுத்த மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

அதேபோல், கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தனித்தேர்வர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடத்தப்பட்டு, 24-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும்.

வழக்கமான மாணவர்களுக்கு அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவு மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல், புனித வெள்ளி(அடுத்த மாதம் 10-ந்தேதி), தமிழ் புத்தாண்டு(அடுத்த மாதம் 14-ந்தேதி), மகாவீர் ஜெயந்தி(அடுத்த மாதம் 6-ந்தேதி) ஆகிய நாட்களிலும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.

 • TNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 252 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.
 • இணைய முகவரி : www.tnpcb.gov.in
 • விரிவான விவரங்கள் | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.