உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி...வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வு விடைத்தாள்கள் மண்டல அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வருகிற 31-ந்தேதி முதல் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதியுடன் இதற்கான பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து, அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மதிப்பெண் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பின்னர், இந்த தேர்வுக்கான முடிவு அடுத்த மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

அதேபோல், கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தனித்தேர்வர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடத்தப்பட்டு, 24-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும்.

வழக்கமான மாணவர்களுக்கு அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவு மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல், புனித வெள்ளி(அடுத்த மாதம் 10-ந்தேதி), தமிழ் புத்தாண்டு(அடுத்த மாதம் 14-ந்தேதி), மகாவீர் ஜெயந்தி(அடுத்த மாதம் 6-ந்தேதி) ஆகிய நாட்களிலும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.