உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி: மே இரண்டாவது வாரத்தில் தொடங்க ஆலோசனை

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குவது குறித்து பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மூலமாக பிளஸ் -2 விடைத்தாள்களைத் திருத்தும் பணியை தொடங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுப் பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலத்தில் ஆசிரியர்களுக்கு இந்தப் பணி வழங்குவதையும் அந்தப் பகுதிகளில், விடைத்தாள் திருத்தும் மையம் தொடங்குவதையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தம் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்றி, அமர்ந்திருக்க வேண்டும். வீட்டிலிருந்து விடை திருத்தும் மையத்துக்கு வந்து செல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுமதிச் சீட்டு வழங்கப்படவேண்டும்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு முன்பும், பின்னரும், சோப்பு அல்லது கிருமி நாசினியால், ஆசிரியர்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வசதிகள், மையத்தில் செய்யப்பட வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விரிக்கப்பட உள்ளன.

Read More News - Download

2 comments:

  1. ஆசிர்யர்களிடம் விடைத்தாளைக் கொடுத்து வீட்டில் திருத்தச்சொல்வதுதான் சிறந்த வழி. மையத்திருத்தம் என்பது பல சிக்கல்களை உருவாக்கும்.மாவட்ட கல்வி அதிகாரியின் மூலம் பள்ளித்தலைமை ஆசிரியர்களிடம் கொடுத்து அவர்கள் ஆசிரியர்களிடம் எளிமையாக கொடுத்து விடுவார்கள்.பின் மாவட்ட வாரியாக் மதிப்பெண்களை அப்லோடு செய்யலாம். மதிப்பெண்களில் பாதிப்பு எனில் ஆசிர்யர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலிலே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தாலுகா வாரியாக மதிப்பீட்டு மையம் அமைத்து கொடுக்கலாம்

      Delete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.