உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை

🔲ஜூலை 1 முதல் 31 வரை நடப்புக் கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை நடத்தலாம்! 

🔲கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

🔲கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு 1.7.20 தொடங்கி 16.7.20ல் முடிவடைகிறது - UGC COMMITTEE தகவல்

🔲இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சியால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை


Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஊரடங்கு உத்தரவை சமாளிக்க பி.எஃப் பணத்திற்காக குவியும் மக்கள்..!

ஊரடங்கு உத்தரவு சூழலை சமாளிக்க பிஎஃப் கணக்கிலிருந்து 3,200 கோடி ரூபாய் வரை மக்கள் செலவிற்காக வெளியே எடுத்துள்ளனர்.

கொரோனா சூழலில் மக்களின் அவசிய செலவினங்களை கருத்தில் கொண்டு பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட தொகையை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இதற்கு வசதியாக பிஎஃப் அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது முடக்க சூழலால் பாதிக்கப்பட்ட சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் பிஎஃப் கணக்கிலிருந்து 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் மத்திய அரசின் இபிஎஃப்ஒ அமைப்பில் இருந்து மட்டும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் சேமிப்பு பணத்தை ஒரு மாதத்தில் எடுத்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர தனியார் பிஎஃப் அறக்கட்டளைகளில் இருந்தும் 80 ஆயிரம் பேர் சேமிப்பு பணத்தை எடுத்துள்ளனர்.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி: மே இரண்டாவது வாரத்தில் தொடங்க ஆலோசனை

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குவது குறித்து பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மூலமாக பிளஸ் -2 விடைத்தாள்களைத் திருத்தும் பணியை தொடங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுப் பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலத்தில் ஆசிரியர்களுக்கு இந்தப் பணி வழங்குவதையும் அந்தப் பகுதிகளில், விடைத்தாள் திருத்தும் மையம் தொடங்குவதையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தம் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்றி, அமர்ந்திருக்க வேண்டும். வீட்டிலிருந்து விடை திருத்தும் மையத்துக்கு வந்து செல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுமதிச் சீட்டு வழங்கப்படவேண்டும்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு முன்பும், பின்னரும், சோப்பு அல்லது கிருமி நாசினியால், ஆசிரியர்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வசதிகள், மையத்தில் செய்யப்பட வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விரிக்கப்பட உள்ளன.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மேகாலய அமைச்சர்கள், அதிகாரிகளின் 50% ஊதியம் பிடித்தம் செய்ய அரசு முடிவு.

மாநில அமைச்சர்கள், உயர் அதி காரிகளின் ஊதியத்தில் 50 சதவீத ஊதியத்தைப் பிடித்தம் செய்ய மேகாலய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் ஊதியம், அடுத்தடுத்த மாதங்களில் விடுவிக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலர் எம்.எஸ்.ராவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கரோனா பாதிப்பால் ஏற்பட் டிருக்கும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அமைச்சர்கள், ஐஏ எஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதி காரிகளின் ஊதியத்தில் 50 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

மேலும், அயல் பணியில் வந்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஊதி யத்திலும் இந்தப் பிடித்தம் செய்யப்படும். பிடித்தம் செய்யப்பட்ட ஏப்ரல் மாத ஊதியத்தின் பாக்கியை மேமாதத்திலும், மே மாத ஊதிய பாக்கியை ஜூன் மாதத்தி லும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அனைத்துத் துறை குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகளின் ஊதியத்தில் 35 சதவீதமும், குரூப்-சி அதிகாரிகளின் ஊதியத்தில் 25 சதவீதமும் பிடித்தம் செய்யப்பட்டு, தாமதமாக வழங்கப்படும்.

அதே நேரம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மாநில உள்துறை குரூப்-சி ஊழியர்கள், நக ராட்சி வாரியங்களில்பணிபுரியும் குரூப்-சி ஊழியர்கள், அனைத் துத் துறை குரூப்-டி ஊழியர்க ளின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய தாரர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் எதுவும் இருக்காது என தலைமைச்செயலர் தெரிவித்துள்ளார். 
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடிக்க அவசர சட்டம் கேரள மந்திரிசபை முடிவு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் நிதி தேவைக்காக, கேரள அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 5 மாதங்களுக்கு பிடித்தம் செய்ய அம்மாநில அரசு ஆணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆணையை செயல்படுத்த கேரள ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், நேற்று கேரள மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு இல்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு 2010-ல் அரசாணை வெளியிட்டது. இது 2013-ல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், வேலூர் சிஎம்சி உள்ளிட்ட சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள், நீட் தேர்வுக்கு எதி ராக அந்தந்த மாநில உயர் நீதி மன்றங்களில் மனு தாக்கல் செய் தன.

இதையடுத்து மத்திய அரசு தரப்பிலும், இந்திய மருத்துவ கவுன் சில் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த வழக்குகள் அனைத்தையுமே உச்ச நீதிமன்றத் துக்கு மாற்ற வேண்டும் எனவும், அந்த வழக்குகளை மாற்றி ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், கோரப்பட்டது. இதை யடுத்து கடந்த 2012-ம் ஆண்டு அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்குகள் மீது விசார ணைகள் நடந்தபோதும் நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வில்லை. இதையடுத்து, 2016-க்கு பிறகு நீட் தேர்வு அடிப்படை யில்தான் சேர்க்கை நடைபெறும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தில் நடைபெற்ற வழக்கில், சிறு பான்மையினரின் கல்வி நிறுவனங் கள் சார்பில் வாதிடும்போது, தங்க ளுடைய உரிமைகள் பறிக்கப்படு வதாகவும், இதனால் நிர்வாக ரீதி யிலான சிக்கல்கள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத் தையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் தீர்ப்பை கடந்த ஜன வரி 22-ம் தேதிக்கு ஒத்தி வைத் திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன் றம் நேற்று வழங்கியது. தீர்ப்பில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் ராம், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:

நீட் தேர்வு என்பது சிறுபான் மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகை யில் இல்லை. இதில் எந்த விதிமீறலையும் மத்திய அரசு செய்யவில்லை.

எனவே சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வை அனைத்து மருத்துவக் கல்லூரி களும் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். -பிடிஐ
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் யுஜிசி அறிவிப்பு

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. பள்ளி பொதுத்தேர்வு, கல்லூரிகளின் பருவத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும். கடைசி பருவத் தேர்வு ஜூலையில் நடத்தப்படும். முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு செப்டம்பரில் வகுப்புகள் தொடங்கப்படும். ஊரடங்கு காலத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களின் பயண விவரங்களை பல்கலைக்கழகங்கள் பதிவு செய்ய வேண்டும். வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகளை நடத்தலாம். எம்பில், பிஎச்டி மாணவர்களுக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். அவர்களின் வைவா தேர்வை காணொலி காட்சி மூலம் நடத்தலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மாணவர், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி மத்திய உள்துறை உத்தரவு

ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு மாநில அரசுகள் அனுமதிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பேருந்து, ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால், பல மாநிலங்களிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெளி மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்திரீகர்கள், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதுபோன்று வெளி மாநிலங்களில் தவிப்பவர்களை கணக்கெடுத்து அவர்களை பேருந்துகளில் அனுப்புவது மற்றும் வரவழைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களிடையே விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பேருந்துகளை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும். பேருந்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வந்தபின் அதற்கென உள்ள மையங்களிலோ அல்லது வீடுகளிலோ தனிமைப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களது உடல்நிலையை கண்காணிக்கும் வகையில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

ஒரு மாநிலத்தில் குழுவாக தவிக்கும் மக்கள், அந்த மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்ல விரும்பினால், அவர்களை அனுப்புவது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களும் ஆலோசனை செய்து பரஸ்பர ஒப்புதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தனியார் பள்ளி வாகன தகுதி சான்றிதழ் புதுப்பித்தலை ஓராண்டு நீட்டிக்க கோரிக்கை .

தனியார் பள்ளிகளின் வாகனங்களுக்கான தகு திச் சான்றிதழ் புதுப்பிக் கும் தேதியை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங் கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து தனியார் பள்ளிகளின் சங்கங்க ளின் கூட்டமைப்பினர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிப் பேருந் துகளின் முடிவடைந்த தகுதிச் சான்றிதழ் செல் லுபடியாகும் காலத்தை ஒரு வருடத்துக்கு நீட்டித்து உத்தரவிட வேண்டும்.

தனியார் கல்வி நிறுவ னங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணங்களை மின்சார வாரியம் முந்தைய கணக்கீட்டின் படி செலுத்த அறிவுறுத்தியுள் ளது. பள்ளி இயங்காத காரணத்தால் குறைந்த அளவே மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பயன்படுத்திய அளவுக்கு மட்டுமே மின் கட்டணம் செலுத்த ஆவன செய்ய வேண்டும். கடந்த கல்வி ஆண்டான 2019-2020க்கு பெற்றோர் தங்கள் மாணவர்களுக்காக செலுத்த வேண்டிய கல்விக் கட்ட ணம் சுமார் 25 சதவீதம் நிலுவை யில் உள்ளது.

தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில், அரசாணை 199ன்படி, பெற்றோரிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் 2020-2021க்கான கல்வி கட்டணத்தையும் கடந்த கல்வி ஆண்டுக்கான நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத் தையும் இந்த கல்வி ஆண்டில் வசூலிக்ககூடாது என்று அரசு அந்த ஆணை யில் தெரிவித்துள்ளது. இத னால் ஆசிரியர்கள், பணி யாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசிடம் இருந்து வர வேண்டிய 2018-2019ம் ஆண்டுக்கான கல்விக் கட் டணம் மே மாதம் கிடைத்தாலும் அது குறைந்த அளவாக இருக்கும் என்பதால் ஊழியர்களின் ஊதியத்தை முழுமையாக கொடுக்க முடியாது.

எனவே தனியார் பள்ளிகளின் சிரமங்களை கருத் தில் கொண்டு கல்விக்கட்ட ணம் செலுத்த தகுதியுள்ள பெற்றோரிடம் இருந்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் மேற் கண்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டு கிறோம். அண்டை மாநிலத்தில் தனியார் பள்ளிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த அரசு நடை முறைப்படுத்தியுள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பாடப்புத்தகத்தில் கொரோனா விழிப்புணர்வு - கல்வியாளர்கள் கோரிக்கை.

தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா உள்ளிட்ட வைரஸ்களின் விழிப்புணர்வு தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ள னர். இது குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூறியதாவது: தற்போது கொரோனா வைரஸ் உலகையே பாதிப்புள்ளாக்கி முடக்கியுள்ளது.

மக்கள் இடையே இந்த வைரஸ் தொற்று பற்றிய புரிதல், தெளிவு குறைவாக உள்ளது. இதற்கான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளும் மக்களுக்கு தெரியவில்லை. அவை புதியதாகவும் இருக்கின்றன. தன்னைத் தானே மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், நோய்க்கான ஊரடங்கு போன்றவை நமது சாதாரண குடிமக்களுக்கு முற்றிலும் புரியவில்லை.

கொரோனா மட்டும் அல்லாமல் இதுபோன்ற பல பெருந்தொற்று காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை கல்வி யானது மாணவர்களுக்கு கட்டாயம் அளிக்கப்பட வேண்டிய ஒன்று. இது காலத்தின் கட்டாயம். ஊடகங்கள் மூலம் மிக அதிகமான விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் நமது இளைய தலைமுறை பெறுகின்ற அடிப்படைக் கல் வியிலேயே இதற்கான விழிப்புணர்வை தர வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பை கருத்தில் கொண்டு இனி வருகின்ற காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பில் கொரோனா, பெருந்தொற்று ஆகியவை பற்றிய பாடங்களை அவசியம் சேர்க்க வேண்டும்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது; | கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.

முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஒவ்வொரு மாவட் டங்களிலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள ஆசிரியர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கொடுக்கப் பட்டுள்ளது.

மத்திய , மாநில அரசுகள் கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பிறகு முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும். பள்ளிகள் திறக்கும் போது பாடப்புத்தகங்கள், ஷூ, ஷாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது போல் கலை, அறிவியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு யுஜிசிக்கு முன்னாள் துணைவேந்தர் குழு பரிந்துரை.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது போல் கலை, அறிவியல் படிப் புக்கு நுழைவுத் தேர்வு நடத்த யுஜிசிக்கு முன் னாள் துணைவேந்தர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கு நாடுமு ழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் மார்ச் 16ம் தேதியே மூடப்பட்டன.பல் கலைக்கழகம் மானிய குழு (யுஜிசி), கொரோனா கார ணமாக கல்வி நிறுவனங்களில் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளை எப்போது தொடங்கலாம். அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்களை தொடங்கலாம் என்று ஆராய குழு அமைக்கப்பட்டது.

அரியானா பல்கலைக்கழகமுன்னாள் துணை வேந்தர் ஆர்.சி.குஹாட் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. மற்றொரு குழு ஊர டங்கு நேரத்தில் எப்படி ஆன்லைனில் பாடங்களை கற்பிக்கலாம் என்பது குறித்து ஆராய, இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாகேஸ் வர ராவ் தலைமையில்கு குழு அமைக்கப்பட்டது. இரண்டு குழுக்களும் தங்களது ஆய்வு அறிக் கையை சமர்ப்பித்த நிலை யில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான வகுப் புகளை ஜூலை மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதத் தில் இருந்து தொடங்கலாம் என்று பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு ஆய் வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

சமீபத்திய அறிக்கைகளின்படி, 'பல்வேறு பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பாடத்திட்டங்களில் சேருவதற்கு, பொதுவான நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். குழு முன் வைத்த பரிந்துரைகள் அர சாங்கத்தால் வெளியிடப் பட்ட ஆலோசனைகளுக்கு எந்த வகையிலும் தடை யாக இல்லை. கொரோனா பரவலால், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பயண வரலாறு குறித்து பல்கலைக்கழகங்கள் முழுமையான சோதனை நடத்த வேண்டும். கல்வி யாண்டு அட்டவணையை பொருத்தவரை 2020 மே முதல் வாரத்திற்குப் பிறகு இயல்புநிலை திரும்பினால், 2019-20ம் கல்வியாண்டின் வகுப்புகளின் இழப்பை ஈடுசெய்ய முடியும். கல்வி யாண்டு அட்டவணையை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.

அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கைகளை 2020 ஆகஸ்ட் 1 முதல் தொடங்கி 2020 ஆகஸ்ட் 31 வரை முடிக்க வேண்டும். ஏற்கனவே முதல் மற் றும் இரண்டாம் ஆண்டில் படிக்கும் மாணவர்களுக் கான வகுப்புகள் ஆகஸ்ட் 1, 2020 முதல் தொடங்கலாம். அதேநேரத்தில் புதிய மாண வர்களுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கலாம். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசி ரியர்கள் மற்றும் பிற கல்வி ஊழியர்களை நியமிப்பதற் கான குறைந்தபட்ச தகுதி குறித்த யுஜிசிவிதிமுறைகள் மற்றும் குறைந்தபட்ச கற் பித்தல் நாட்கள் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பை பொறுத்தவரையில் அந் தந்த கல்லூரிகள் தனித்த னியாக அவர்களுக்கான இடங்களை நிரப்பி கொள் வதற்கான கலந்தாய்வுகள் நடத்துகின்றன. ஒருசில கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தும் முறை கூட இல்லாமல் மாணவர் களை நேரடியாக சேர்க் கும் சூழல் நிலவுகிறது.

ஒவ்வாரு கல்லூரிக்கும் மாணவர்கள் தனித்தனி யாகவிண்ணப்பிக்கவேண்டிய சூழல் நிலவி வருகிறது. மாணவர்கள் இரண்டு கல்லூரிக்கோ அல்லது ஒரு கல்லூரிக்கோ விண்ணப் பித்தால் எந்த கல்லூரியி லும் அவர்களுக்கு இடம் கிடைக்காத சூழல் நிலவுகி றது.இதனால், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்துவதைப்போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்திமாணவர்களை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன் னும் நடைமுறைப்படுத் தப்படவில்லை .

இந்நிலையில், மருத் துவ படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது போல், கலை, அறிவியல் படிப்புகளுக் கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்த யுஜிசிக்கு அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளையும் மனித மனித வளத்துறை ஆய் வு செய்து வருவதாகவும், இதை விரிவாக வல்லுநர்களிடம் கலந்தாய்வு செய்து அறிவிப்புகளை விரைவில் மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அடுத்த கல்வி ஆண்டுக்கான காலண்டர் யுஜிசி நாளை வெளியிடுகிறது..

அடுத்த கல்வி ஆண்டுக் கான காலண்டரை யுஜிசி நாளை வெளியிடுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பதை செப்டம்பர் மாதம் வைத்துக்கொள்ளலாம் என இரண்டு வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்திருந்தது.

அதன் பேரில் செப்டம்பர் மாதம் திறக்கலாம் என்று யுஜிசி தெரிவித்து இருந்தது. இது தொடர்பான ஆலோ சனை கூட்டம் நேற்று முன் தினம் யுஜிசியில் நடந்தது. இதையடுத்து, செப் டம்பர் மாதம் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் திறப்பதற்கான காலண்டர் மற்றும் வழிகாட்டு நெறிமு றைகளை வெளியிட யுஜிசி திட்டமிட்டுள்ளது.

இந்த காலண்டர் நாளை வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. யுஜிசி சார்பில் நியமிக்கப்பட்ட குஹத் தலைமையிலான குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்களில், ஆகஸ்ட் மத்தியில் இருந்து செப்டம்பர் மாத தொடக்கத்தில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை தொடங்கலாம் என்று பரிந் துரைத்து இருந்தது.

அதே குழு, இப்போ தைய கல் வியாண்டில் படித்து வரும் மாணவர் களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் அல்லது வழக்கம் போல எழுத்து தேர்வுகள் வைத்தும் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. இவற்றை ஊரடங்கு முடிந்த பிறகு நடத்த வேண்டும் என்று தெரி வித்திருந்தது. ஊரடங்கு குறித்த அறிவிப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அடுத்து என்ன செய்வது என்று யுஜிசி ஆலோசித்து வருகிறது.

இருப்பினும் அடுத்த கல்வியாண்டுக்கான காலண்டரை யுஜிசி நாளை வெளியிடும் என்று பல்கலைக் கழகங் கள் எதிர்பார்க்கின்றன. நேற்று முன்தினம் நடந்த வீடியோகான்பரஸ் கூட்டத்தில் சிறப்பு குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை எழுத்து பூர்வ மாக தெரிவிக்க வேண்டும் என்று யுஜிசிகேட்டுள்ளது. யுஜிசியின் தலைவர் டி.பி. சிங், அந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து முடிவு செய்து வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

என்சிஇஆர்டி புத்தகங்களை அந்தந்த விற்பனை நிலையங்களில் இருந்து மாணவர்கள் வாங்கிக் கொள்ள ஏற்பாடு ..

என்சிஇஆர்டி புத்தகங்களை அந்தந்த விற்பனை நிலையங்களில் இருந்து மாணவர்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் என்சிஇஆர்டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

சிபி எஸ் இ என்னும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்க ளில் நடந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் சில தேர்வுகள் நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டன.

அதன்படி சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு மொத்தம் 12 பாடங்களுக்கான தேர் வுகள் இன்னும் நடக்க வில்லை .) இந்நிலையில் ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்பியவுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேற்கண்ட 12 தேர்வுகளும் நடக்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல நீட் மற்றும் ஜெஇஇ போன்ற போட்டித் தேர் வுகள் நடப்பது ஒத்திப் போகலாம் என்ற நிலை இருந்தது.

ஏற்கெனவே மே மாத இறுதி வாரத்தில் இந்த தேர்வுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் கொரோனா பாதிப்பை அடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின்னரே நடக்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே என் சிஇஆர்டி அச்சிட்டுள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களில் உள்ள விற்பனை நிலையங்க ளில் இந்த புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது அத்தியாவசிய தேவை என்ற அடிப்படையில் வைக்கப்பட்டு, விற்பனை நிலையங்களில் புத்தகம் விற்க என் சிஇஆர்டி ஏற்பாடு செய்துள்ளது. அதனால் மாணவர்கள் தயக் கம் இல்லாமல் விற்பனை நிலையங்களில் இருந்து பாடப்புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கோடை காலத்திலும் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு

தேசிய ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கோடை விடுமுறையிலும் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மாநில கல்வி அமைச்சா்களுடன் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: தற்போதைய ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளி மாணவா்களுக்கு போதிய சத்தான உணவை வழங்குவதற்காக மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பொருள்கள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளின் கோடை விடுமுறை நாட்களிலும் தொடா்ந்து மதிய உணவு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு கூடுதலாக சுமாா் ரூ. 1,600 கோடி செலவாகும். ஏற்கெனவே, மதிய உணவுத்திட்டத்தின் கீழ் முதல் காலாண்டுக்கு ரூ. 2,500 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆகக்கூடிய செலவு, அதாவது, பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெய், மசாலா மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்காக அளிக்கப்பட்ட தொகையான ரூ. 7,300 கோடி, தற்போது ரூ. 8,100 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இது 10.99 சதவீதம் அதிகமான தொகையாகும்.

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தோ்வுகளின் விடைத் தாள்கள் திருத்தும் பணிகளை மாநில கல்வித்துறை தொடங்க வேண்டும். அதேபோல, அந்தந்த மாநிலங்களில் பயிலும் சிபிஎஸ்இ பள்ளி விடைத்தாள் திருத்தும் பணிக்குத் தேவையான வசதிகளை மாநில கல்வித்துறை அமைச்சா்கள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கேந்திரீய வித்யாலயங்கள் மற்றும் நவோதயா பள்ளிகள் ஆகியவற்றை தொடங்கிட அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், அவற்றுக்கு தேவையான நிலம் வழங்கிட வேண்டும்.

மேலும், அவற்றை விரிவுபடுத்த தேவைப்படும் நிலத்தையும் ஒதுக்கீடு செய்து தர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பயனடைய முடியும் என்றாா்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜூலை 31 வரை ஐ.டி. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்: மத்திய அரசு

கரொனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 31 வரை (நிறுவனம் அனுமதித்தால்) தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், அனைத்து மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அமைச்சர் கூறியதாவது, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற ஏப்ரல் 30ம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், இந்த அனுமதி ஜூலை 30 வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்பம் என்றில்லாமல், அனைத்து மாநில அரசுகளும், இணையம் வழியாக பல்வேறு அரசுப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்று காரணமாக, பல்வேறு பணிகளின் பாணியே மாறிவிட்டது.

சுமார் 80% தொழில்கள் வீட்டில் இருந்தே செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது. எனவே, மக்களின் வசதிக்காக, பாரத் நெட் மூலம் இணையச் சேவையை பலப்படுத்துவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும் அவர் தெரவித்தார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: சிபிஎஸ்இ தகவல்

ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கண்டிப்பாக தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் உள்ள பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்தப்படும் என்று கூறியிருந்தது.தொடர்ந்து, இந்தியவரில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஊரடங்கு சில பகுதிகளில் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிபிஎஸ்இ, பொது ஊரடங்கு ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை, தேர்வு தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்கள் 'ஆரோக்கிய சேது' செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம்: மத்திய அரசு

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் 'ஆரோக்கிய சேது' செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று குறித்த தகவல்களை அறியவும், அருகில் உள்ள அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை? என்பதை அடையாளம் காணவும் ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களும் (ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்பட) 'ஆரோக்கிய சேது' செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் அலுவலகத்துக்குச் செல்லும்முன் செயலியில் 'safe' (பாதுகாப்பு) அல்லது 'low risk' (குறைந்த ஆபத்து) என்பதை காட்டுவதை உறுதி செய்தபின்னரே அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை, 'moderate' (மிதமான பாதிப்பு) அல்லது 'high risk' (அதிக ஆபத்து) எனக் காட்டினால் 14 நாள்கள் தன்னைத்தானே ஊழியர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மூன்று அகவிலைப்படி தவணைகள் நிறுத்தம்...ஓய்வுகால பயன்களை கணக்கிட அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை .

மூன்று அகவிலைப்படி தவணைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுகால பயன்களுக்கு இந்த அகவிலைப்படியை கணக்கில் எடுத்துக்கொள்ள இயலாது. இது பெரிய இழப்பு. குறைந்தபட்சம் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டுமாவது அந்த அகவிலைப்படி உயர்வை ஓய்வுகால பயன்களை கணக்கிட அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

LETTER NO 8234 - PAY AUTHORIZATION FOR 1564 COMPUTER INSTRUCTOR TO APRIL 2020

பள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - கணினி பயிற்றுநர் - 1564 கணினி பயிற்றுநர் நிலை-II தற்காலிக பணியிடங்கள் - ஏப்ரல் 2020 மாதத்திற்கு ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  ஏப்ரல் 2020 மாதத்திற்கு 1564 கணினி பயிற்றுநர் மாத ஊதொயம் பெறலாம்   - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

G.O NO 215 - FURNISHING OF LIFE CERTIFICATE BY THE PENSIONERS ON OCTOBER 2020 | ஓய்வூதியம் பெறுபவர்கள் LIFE CERTIFICATE னை அக்டோபர் மாதம் சமர்ப்பிக்கலாம்.

G.O NO 215 - FURNISHING OF LIFE CERTIFICATE BY THE PENSIONERS ON OCTOBER 2020 | ஓய்வூதியம் பெறுபவர்கள் LIFE CERTIFICATE னை அக்டோபர் மாதம் சமர்ப்பிக்கலாம் |After careful consideration, the Government in partial modification of the orders issued in the Government Orders first and second read above, direct that the State Government Pensioners / Family Pensioners be allowed to give their Life Certificate at any time during the months of July, August 2 and September every year for annual mustering instead of April, May and June to the Pension Disbursing Officer concerned. If any pensioner including family pensioner fails to do so, the Pension Disbursing Authority shall call for the personal appearance in October and pension / family pension will be stopped from November onwards for those pensioners including family pensioners who neither appear directly for mustering nor furnish life certificate | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் வரை ரத்து - அரசாணை வெளியீடு.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2021 ஜூலை மாதம் வரை அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைப்பதாக அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நிறுத்திவைக்கப்படுகிறது. | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு அரசாணை வெளியீடு

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு அரசாணை வெளியீடு. தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் என ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. |  Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

GPF சந்தாதாரர்களுக்கு 01.04.2020 முதல் 30.06.2020க்கான வட்டி 7.9%லிருந்து 7.1%ஆக குறைப்பு!!

GPF சந்தாதாரர்களுக்கு  01.04.2020 முதல் 30.06.2020க்கான வட்டி 7.9%லிருந்து 7.1%ஆக குறைப்பு!! The Government now direct that the rate of interest on the accumulation at the credit of the subscribers to General Provident Fund [Tamil Nadu] shall carry interest at the rate of 7.1% (Seven point one percent) with effect from 1st April, 2020 to 30th June, 2020. - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 MATHEMATICS TM A COMPLETE SPECIAL GUIDE -K.MOHANAVEL | பத்தாம் வகுப்பு கணித பாட முழுமையான சிறப்பு வழிகாட்டி- K.மோகனவேல்.


  1. CLASS 10 MATHEMATICS TM SPECIAL GUIDE -K.MOHANAVEL - K.மோகனவேல். |  பத்தாம் வகுப்பு கணித பாட சிறப்பு வழிகாட்டி- K.மோகனவேல், கணித பட்டதாரி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எடப்பாடி சேலம் மாவட்டம், | Download
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வு அட்டவணை மே மூன்றாம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் எனவும், ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.எனவே மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வது சிறந்தது.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC LATEST STUDY MATERIALS DOWNLOAD | HISTORY-POLITICS-INDIAN NATIONAL MOVEMENT STUDY MATERIALS

TNPSC LATEST STUDY MATERIALS DOWNLOAD | HISTORY-POLITICS-INDIAN NATIONAL MOVEMENT STUDY MATERIALS 
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப் 4 தேர்வு பழைய பாடத்திட்டப்படியே தேர்வை நடத்தவும் ஆலோசனை

டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக கா. பாலச்சந்திரன் அவர்களை நியமித்தது தமிழக அரசு. அவர் பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில் விரைவில் புதிய தேர்வு அட்டவணை வெளியிட முடிவு செய்யப்பட்டது. மேலும் பலரும் குரூப் 4 தேர்வுக்கு மெயின் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பழைய பாடத்திட்டப்படியே தேர்வை நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலசந்திரன் நியமனம்

டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கா.பாலசந்திரன் நேற்று நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலை வராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அருள்மொழியின் பதவிக் காலம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந் தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கா.பாலசந்திரன் நேற்று நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று மதியம் 12.30 மணியளவில் அவர் பொறுப்பேற்றார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் இணையவழிக் கல்வி வலைதளம் அறிமுகம்

அரசுப் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்றல் பணிகளைத் தொடர புதிதாக இணையவழிக் கல்வி வலைதளத்தை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை யின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 59 ஆயிரம் பள்ளி கள் இயங்குகின்றன. இதில் 1.3 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 5.7 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊர டங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை தரப்பட்டுள்ளது.தொடர் விடுமுறை யால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

நாளையுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. நாளை பிரதமர் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது தமிழகம் முழுவதும் தற்போது உள்ள அதே நிலையே தொடரும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்துக்கான அத்தயாவசிய பொருட்கள் வழங்கப்படும். தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏப்ரல் 30ந் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு நீட்டிப்பால் ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் காலை 6மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பேக்கரிகள் செயல்படலாம், பார்சல் முறையில் மட்டும் விற்பனை நடைபெற வேண்டும் பிறமாநில தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும் ஊரடங்கை தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பதால் தற்போது வாபஸ் பெறப்படவில்லை உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பின் காரணமாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மே இறுதியில் நடத்த கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் பத் தாம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாத இறுதியில் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில்பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வைத் தவிர அத்தனை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

1-ஆம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்ற தாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், கரோனா பரவலைத் தடுக்கமே 15வரைபள்ளிகளைமூட வாய்ப்பு உள்ளதால் பத்தாம் வகுப் பில் பள்ளித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய் யலாம் என தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமி ழக அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

அதேவேளையில் பள்ளித் தேர்வு களில் அந்தந்தப் பள்ளிகள் கடுமை காட்டி மதிப்பெண்ணைக் குறைத் துப் போட்டு அதன் அடிப்படை யில் தேர்வை முடிவு செய்வது சரி யல்ல என பெற்றோர் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், பொதுத்தேர்வு குறித்து முதல்வர் முடிவு செய்வார் என புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்தார்.

மேல்நிலைக் கல்வி, தொழிற்ப யிற்சி நிலையம் மற்றும் பாலிடெக் னிக்சேர்க்கை, போட்டித்தேர்வுகள், அரசுப் பணி என பலவற்றிலும் பத் தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப் பெண் முக்கியத்துவம் பெறுவதால் அந்தத் தேர்வை நிகழாண்டு ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என பள்ளிக் கல்வித்துறை வட்டா ரங்கள் தெரிவித்தன.

மேலும் கரோனா தொற்று முடிவுக்கு வரும் பட்சத்தில் கோடை விடுமுறையில் அதாவது மே மாதம் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்தப்பட்டால் அது குறித்த அட்டவணை பத்து நாள்களுக்கு முன்பாக வெளியிடப்படலாம். இது குறித்த இறுதி முடிவை முதல்வர் எடுப்பார் என அதிகாரி கள் தெரிவித்தனர்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

RTE ADMISSION 2020 | இலவச மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தள்ளி வைப்பு.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஊரடங்கு காரண மாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் நுழைவு வகுப்புகளில், 25 சதவீத இடங்களில், இலவச மாணவர் சேர்க்கைவழங்கப்படுகிறது.எல்.கே.ஜி., உள்ள பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கும்; மற்ற பள்ளி களில், ஒன்றாம் வகுப்புக்கும், அரசின் வழியே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இந்த சேர்க்கையில் அனுமதி பெறும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம். அவர்களுக்கான கட்டணத்தை, மத்திய - மாநில அரசுகள் வழங்கும்.இந்த மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும்,ஏப்ரல், 2ல் வெளியிடப்படும். தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால், நேற்று வெளியாகவிருந்த மாணவர் சேர்க்கை அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிந்த பின், புதிய தேதி அறிவிக்கப்படும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், கருப்பசாமி அறிவித்துள்ளார்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PENSION NEWS | ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள்  ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உயிர்வாழ் சான்றை சமர்ப்பித்தால் போதும் இந்த ஆண்டிலிருந்து புதிய நடைமுறை அமல்

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் உயிர் வாழ் சான்றை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக் கும் புதிய நடைமுறை இந்த ஆண்டி லிருந்து அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 30 ஆயிரம் ஓய்வூதியர்கள் தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பெறுகின்றனர். ஓய்வூ தியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூ தியர்கள் உயிர்வாழ் சான்றை ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான மாதங்களில் சமர்ப்பித்து வருகிறார்கள்.

அந்த வகையில், ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலம் கோடை காலம் என்பதாலும், தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதாலும் ஓய்வூதிய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மார்ச் 26-ம் தேதி நிதித்துறை வெளியிட்ட அரசாணையின்படி மாநில அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் அளிக்கப்படும் உயிர்வாழ் சான்றை ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலர்களிடம் ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த புதிய நடைமுறை 2020-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரு கிறது.

அனைத்து அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றை ஓய்வூ தியம் பட்டுவாடா செய்யும் அலுவலர்களிடம் அளிக்கவோ அல்லது நேரடியாக ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலர் களான ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் அல்லது கருவூல அலு வலர் அல்லது உதவி கருவூல அலுவலர் முன்னிலையில் ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங் களில் ஏதாவதொரு பணி நாளில் 2020ஆம் ஆண்டு முதல் ஒவ் வொரு வருடமும் நேர்காணலுக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மாநில அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றை ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.