உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • KALVISOLAI IT FORM 2021 - VERSION - 1.3 DOWNLOAD (Errors Rectified) | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2021 - VERSION - 1.3.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | Click Here

வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மாணவர், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி மத்திய உள்துறை உத்தரவு

ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு மாநில அரசுகள் அனுமதிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பேருந்து, ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால், பல மாநிலங்களிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெளி மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்திரீகர்கள், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதுபோன்று வெளி மாநிலங்களில் தவிப்பவர்களை கணக்கெடுத்து அவர்களை பேருந்துகளில் அனுப்புவது மற்றும் வரவழைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களிடையே விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பேருந்துகளை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும். பேருந்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வந்தபின் அதற்கென உள்ள மையங்களிலோ அல்லது வீடுகளிலோ தனிமைப்படுத்தப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களது உடல்நிலையை கண்காணிக்கும் வகையில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

ஒரு மாநிலத்தில் குழுவாக தவிக்கும் மக்கள், அந்த மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்ல விரும்பினால், அவர்களை அனுப்புவது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களும் ஆலோசனை செய்து பரஸ்பர ஒப்புதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.