உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

பாடப்புத்தகத்தில் கொரோனா விழிப்புணர்வு - கல்வியாளர்கள் கோரிக்கை.

தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா உள்ளிட்ட வைரஸ்களின் விழிப்புணர்வு தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ள னர். இது குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூறியதாவது: தற்போது கொரோனா வைரஸ் உலகையே பாதிப்புள்ளாக்கி முடக்கியுள்ளது.

மக்கள் இடையே இந்த வைரஸ் தொற்று பற்றிய புரிதல், தெளிவு குறைவாக உள்ளது. இதற்கான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளும் மக்களுக்கு தெரியவில்லை. அவை புதியதாகவும் இருக்கின்றன. தன்னைத் தானே மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், நோய்க்கான ஊரடங்கு போன்றவை நமது சாதாரண குடிமக்களுக்கு முற்றிலும் புரியவில்லை.

கொரோனா மட்டும் அல்லாமல் இதுபோன்ற பல பெருந்தொற்று காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை கல்வி யானது மாணவர்களுக்கு கட்டாயம் அளிக்கப்பட வேண்டிய ஒன்று. இது காலத்தின் கட்டாயம். ஊடகங்கள் மூலம் மிக அதிகமான விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் நமது இளைய தலைமுறை பெறுகின்ற அடிப்படைக் கல் வியிலேயே இதற்கான விழிப்புணர்வை தர வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பை கருத்தில் கொண்டு இனி வருகின்ற காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பில் கொரோனா, பெருந்தொற்று ஆகியவை பற்றிய பாடங்களை அவசியம் சேர்க்க வேண்டும்.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.