உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • KALVISOLAI IT FORM 2021 - VERSION - 1.3 DOWNLOAD (Errors Rectified) | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2021 - VERSION - 1.3.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | Click Here

தனியார் பள்ளி வாகன தகுதி சான்றிதழ் புதுப்பித்தலை ஓராண்டு நீட்டிக்க கோரிக்கை .

தனியார் பள்ளிகளின் வாகனங்களுக்கான தகு திச் சான்றிதழ் புதுப்பிக் கும் தேதியை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங் கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து தனியார் பள்ளிகளின் சங்கங்க ளின் கூட்டமைப்பினர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிப் பேருந் துகளின் முடிவடைந்த தகுதிச் சான்றிதழ் செல் லுபடியாகும் காலத்தை ஒரு வருடத்துக்கு நீட்டித்து உத்தரவிட வேண்டும்.

தனியார் கல்வி நிறுவ னங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணங்களை மின்சார வாரியம் முந்தைய கணக்கீட்டின் படி செலுத்த அறிவுறுத்தியுள் ளது. பள்ளி இயங்காத காரணத்தால் குறைந்த அளவே மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பயன்படுத்திய அளவுக்கு மட்டுமே மின் கட்டணம் செலுத்த ஆவன செய்ய வேண்டும். கடந்த கல்வி ஆண்டான 2019-2020க்கு பெற்றோர் தங்கள் மாணவர்களுக்காக செலுத்த வேண்டிய கல்விக் கட்ட ணம் சுமார் 25 சதவீதம் நிலுவை யில் உள்ளது.

தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில், அரசாணை 199ன்படி, பெற்றோரிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் 2020-2021க்கான கல்வி கட்டணத்தையும் கடந்த கல்வி ஆண்டுக்கான நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத் தையும் இந்த கல்வி ஆண்டில் வசூலிக்ககூடாது என்று அரசு அந்த ஆணை யில் தெரிவித்துள்ளது. இத னால் ஆசிரியர்கள், பணி யாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசிடம் இருந்து வர வேண்டிய 2018-2019ம் ஆண்டுக்கான கல்விக் கட் டணம் மே மாதம் கிடைத்தாலும் அது குறைந்த அளவாக இருக்கும் என்பதால் ஊழியர்களின் ஊதியத்தை முழுமையாக கொடுக்க முடியாது.

எனவே தனியார் பள்ளிகளின் சிரமங்களை கருத் தில் கொண்டு கல்விக்கட்ட ணம் செலுத்த தகுதியுள்ள பெற்றோரிடம் இருந்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் மேற் கண்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டு கிறோம். அண்டை மாநிலத்தில் தனியார் பள்ளிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த அரசு நடை முறைப்படுத்தியுள்ளது.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.