உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு இல்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு 2010-ல் அரசாணை வெளியிட்டது. இது 2013-ல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், வேலூர் சிஎம்சி உள்ளிட்ட சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள், நீட் தேர்வுக்கு எதி ராக அந்தந்த மாநில உயர் நீதி மன்றங்களில் மனு தாக்கல் செய் தன.

இதையடுத்து மத்திய அரசு தரப்பிலும், இந்திய மருத்துவ கவுன் சில் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த வழக்குகள் அனைத்தையுமே உச்ச நீதிமன்றத் துக்கு மாற்ற வேண்டும் எனவும், அந்த வழக்குகளை மாற்றி ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், கோரப்பட்டது. இதை யடுத்து கடந்த 2012-ம் ஆண்டு அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்குகள் மீது விசார ணைகள் நடந்தபோதும் நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வில்லை. இதையடுத்து, 2016-க்கு பிறகு நீட் தேர்வு அடிப்படை யில்தான் சேர்க்கை நடைபெறும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தில் நடைபெற்ற வழக்கில், சிறு பான்மையினரின் கல்வி நிறுவனங் கள் சார்பில் வாதிடும்போது, தங்க ளுடைய உரிமைகள் பறிக்கப்படு வதாகவும், இதனால் நிர்வாக ரீதி யிலான சிக்கல்கள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத் தையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் தீர்ப்பை கடந்த ஜன வரி 22-ம் தேதிக்கு ஒத்தி வைத் திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன் றம் நேற்று வழங்கியது. தீர்ப்பில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் ராம், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:

நீட் தேர்வு என்பது சிறுபான் மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகை யில் இல்லை. இதில் எந்த விதிமீறலையும் மத்திய அரசு செய்யவில்லை.

எனவே சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வை அனைத்து மருத்துவக் கல்லூரி களும் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். -பிடிஐ
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.