உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

அடுத்த கல்வி ஆண்டுக்கான காலண்டர் யுஜிசி நாளை வெளியிடுகிறது..

அடுத்த கல்வி ஆண்டுக் கான காலண்டரை யுஜிசி நாளை வெளியிடுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பதை செப்டம்பர் மாதம் வைத்துக்கொள்ளலாம் என இரண்டு வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்திருந்தது.

அதன் பேரில் செப்டம்பர் மாதம் திறக்கலாம் என்று யுஜிசி தெரிவித்து இருந்தது. இது தொடர்பான ஆலோ சனை கூட்டம் நேற்று முன் தினம் யுஜிசியில் நடந்தது. இதையடுத்து, செப் டம்பர் மாதம் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் திறப்பதற்கான காலண்டர் மற்றும் வழிகாட்டு நெறிமு றைகளை வெளியிட யுஜிசி திட்டமிட்டுள்ளது.

இந்த காலண்டர் நாளை வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. யுஜிசி சார்பில் நியமிக்கப்பட்ட குஹத் தலைமையிலான குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்களில், ஆகஸ்ட் மத்தியில் இருந்து செப்டம்பர் மாத தொடக்கத்தில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை தொடங்கலாம் என்று பரிந் துரைத்து இருந்தது.

அதே குழு, இப்போ தைய கல் வியாண்டில் படித்து வரும் மாணவர் களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் அல்லது வழக்கம் போல எழுத்து தேர்வுகள் வைத்தும் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. இவற்றை ஊரடங்கு முடிந்த பிறகு நடத்த வேண்டும் என்று தெரி வித்திருந்தது. ஊரடங்கு குறித்த அறிவிப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அடுத்து என்ன செய்வது என்று யுஜிசி ஆலோசித்து வருகிறது.

இருப்பினும் அடுத்த கல்வியாண்டுக்கான காலண்டரை யுஜிசி நாளை வெளியிடும் என்று பல்கலைக் கழகங் கள் எதிர்பார்க்கின்றன. நேற்று முன்தினம் நடந்த வீடியோகான்பரஸ் கூட்டத்தில் சிறப்பு குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை எழுத்து பூர்வ மாக தெரிவிக்க வேண்டும் என்று யுஜிசிகேட்டுள்ளது. யுஜிசியின் தலைவர் டி.பி. சிங், அந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து முடிவு செய்து வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.