உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்
  • TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

CEO Promotion and Transfer | 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு. கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலராக கே.கிருஷ்ணபிரியா நியமனம்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதா வது:

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 5 பேர் தற்காலிகமாக முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கே.கிருஷ்ணப்பிரியா கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலராகவும், சேலம் (ஊரகம்) மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.மதன்குமார் ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலராகவும்,, மண்டபம் (ராமநாதபுரம்) மாவட்ட கல்வி அதிகாரி கே.பாலதண்டாயுதபாணி தேனி முதன்மைக் கல்வி அலுவலராகவும், பதவி உயர்வில் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பி.மகேஸ்வரி, லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.அறிவழகன் ஆகியோருக்கு தொடக்கக் கல்வி துணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இததவிர, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பூபதி ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும், அப்பணியிடத்தில் இருந்த ச.செந்தில் முருகன் திருநெல்வேலி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.