உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவமனைகளுக்கு மனிதநேயத்தோடு தேவையான உபகரணங்களை வழங்கி உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை. சூழ்நிலை மாறும்போது எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பதை கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து ஆன்-லைன் வகுப்புகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளதா? என நிருபர்கள் கேட்டதற்கு, பொறுத்து இருந்து பாருங்கள், இன்னும் ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று அறிவிப்பேன் என்றார்.

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.