CLASS 10, 11,12 TAMIL - QUESTION PAPERS AND ANSWER KEY - PUBLIC EXAMINATION MARCH 2020.
முக்கியச்செய்திகள்
STUDY MATERIALS (NEW SYLLABUS)
DGE TIME TABLE MARCH 2020 SINGLE PAGE
CLASS 10 LATEST STUDY MATERIALS
CLASS 11 LATEST STUDY MATERIALS
CLASS 12 LATEST STUDY MATERIALS
OTHER LATEST STUDY MATERIALS
TNPSC LATEST STUDY MATERIALS
TRB LATEST STUDY MATERIALS
TET LATEST STUDY MATERIALS
NEET LATEST STUDY MATERIALS
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2019-2020
03✅KALVISOLAI JOB ALERT - WhatsApp Group || GROUP 1 || GROUP 2 || GROUP 3 ||
01✅KALVISOLAI JOB ALERT - Facebook Page
LATEST STUDY MATERIALS - ALL
கல்விச்செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
KALVISOLAI - WHAT'S APP GROUP
KALVISOLAI - TELEGRAM GROUP

செய்தி துளிகள்


  1. கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 320 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ அதிகாரிகள் (அகில இந்தியப் பணி அதிகாரிகள் உட்பட) 163 பேர் மற்றும் குரூப் பி அதிகாரிகள் 157 பேருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  2. சமூக வலைதளங்கள் பயன்படுத்துவோரின் சுயவிவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டமில்லை.
  3. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 38,02,799 ஆகும். 2018, மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 31,18,956 பணியாளர்கள் உள்ளனர். 6,83,823 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  4. பணியாளர் தேர்வு அமைப்புகளான யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி ஆகியவை நடப்பு நிதியாண்டில் சுமார் 1.34 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்களை பரிந்துரை செய்துள்ளன. மேலும் 3,10,832 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் பணியில் எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, அஞ்சல் பணி வாரியம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
  5. அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு நாட்டமறி(APTITUDE TEST) முதன்மைத் தேர்வு  ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 நடைபெறும் - இயக்குநர் செயல்முறைகள்.
  6. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியும் இடைத்தரகருமான ஜெயக்குமார் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு.
  7. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது.
  8. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் மாவட்ட முதன்மைக்ல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
  9. தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடு : ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அரசாணை எண் 323
  10. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற NCERT முடிவு :
  11. அரசு ஊழியர்களுக்கான பணப்பயன் பில்லுக்கு அன்றைய தினமே செட்டில்மென்ட் -புதிய நடைமுறை நவம்பர் முதல் நடைமுறைக்கு வருகிறது..
  12. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2019 நடைபெறும் கால அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு.
  13. ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், அரசாணையில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வி த்துறை ஆணை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி கலந்தாய்வு நடத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
  14. TRB - பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழுக்கு கல்லுாரிகளில் வசூல் வேட்டை : உயர் கல்வி துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
  15. பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான SCERT சார்பில் பயிற்சி.
  16. தேனி மாவட்ட கல்வித்துறையில் லஞ்ச வெறியாட்டம். கோட்டைவிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் - நாளிதழ் செய்தி
  17. மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு 100 விருதுகளை அள்ளிக் குவித்த ஜெயங்கொண்டத்தை அடுத்த புதுச்சாவடி அரசுப் பள்ளி ஆசிரியர் - 9 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் சாதனை - நாளிதழ் செய்தி
  18. 5 மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு உளவியல் பயிற்சி - யுனிசெஃப்- சமூகக் கல்வி நிறுவனம் தகவல்.
  19. திருவண்ணாமலையில் அக்.21, நீலகிரியில் அக்.25, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் அக்.30-ஆம் தேதி பயிற்சி முகாம்கள் நடைபெறும். அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சோந்த ஆசிரியா்கள் இதில் பங்கேற்கவுள்ளனா் என்றாா். ஒரு மாவட்டத்திற்கு தலா 50 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
  20. பொது மாறுதல் கலந்தாய்வு அரசு ஆணையை எதிர்த்து இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு. மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
  21. ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் சேர முடியாது.குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு.பொதுப்பிரிவுக்கு 50 விழுக்காடாக நிர்ணயம் - தமிழக அரசு அறிவிப்பு.
  22. NEP | மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை  வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
  23. NEET 2019 | ஓ.எம்.ஆர். விடைத்தாள் என்.டி.ஏ. இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் https://ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
  24. ஆசிரியர் பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் EMIS இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.மே இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு ஆகியவற்றால் ஜூன் இறுதி வாரத்துக்கு ஒத்திவைப்பு.
  25. EMIS ஆன்லைனில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .அதை வைத்து தான் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும். எனவே, EMIS-ல் அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  26. பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்படுத்தப்படும். விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.
  27. மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஜூனில் வழங்கப்படும்.
  28. EMIS மூலம் ONLINE TC வழங்கப்பட வேண்டும். 5 ,8 ம் வகுப்பு மாணவர்களை MIGRATE செய்ய வேண்டும்.
  29. கல்வி சேனல் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
  30. பள்ளி திறக்கும் முதல்நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.
  31. பள்ளி பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும்.
  32. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள் TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு DIET மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் TET தேர்வு ஜூன் 8 நடத்தப்படும்.
  33. மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டை விட கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். சேர்க்கப்பட்ட மாணவர்களை EMIS-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  34. 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
  35. EMIS-ல் பள்ளிக்கு தேவையான அனைத்து பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  36. TNPSC DEO RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி.
  37. தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. CBSE பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு RTE 25% மூலமாக இலவச கல்வி வழங்க நடவடிக்கை
  38. அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
  39. கோடை வெப்பம் அதிகரித்தால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன். 
  40. நல்ல கல்வியை கொடுக்கும் ஆசிரியர்கள் நடமாடும்தெய்வங்கள் என்று செய்யாறு அருகே அரசு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார். 
  41. டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக் கெடு முடிந்ததை அடுத்து, இதில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நடக்க உள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  42. தமிழ்நாட்டில் 2381 மையங்களில் மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்க அரசாணை (அரசாணை எண் -89 நாள்-11.12.2018)  வெளியிடப்பட்டுள்ளது.
  43. தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளிகளின் வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி பள்ளிகளின் விபரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
  44. உடுமலைப்பேட்டை  ஆசிரியை திருமதி.ஹேனா ஷெர்லி அவர்களின் கை மற்றும் காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு NHIS-ல் ரூ.29,000/- மட்டுமே அனுமதித்த நிலையில் NHIS தொடர்பான TNPTF-ன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டலின்கீழ் 89% தொகையாக ரூ.1,54,780/- பெற்றுத் தரப்பட்டுள்ளது.
  45. பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாகியுள்ளன  மாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள் வடிவமைக்கப்பட் டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.
  46. அரசு பள்ளிகளில் படித்து வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் மாநில செஸ் போட்டியில் சாதனை 
  47. பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த  3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் - இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை 
  48. கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 3,000 பேருக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாக தேர்வுத்துறை அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.
  49. தொடக்கக் கல்வி டிப்ளமோ ஆசிரியர் தேர்வில் 15,000 பேர் பங்கேற்றனர். முறைகேடு புகார் எதிரொலியாக ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
  50. ஆசிரியர் தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு மீண்டும் 2 சதவீத அளவுக்கு, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கக் கோரிக்கை.
  51. 4.50 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குருப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவை ஒரே மாதத்தில் வெளி யிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. மிகக் குறுகிய காலத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  52. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் 
  53. மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
  54. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களையும் பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கூடுதலாக 6,500 பேருக்கு மேல் உள்ளனர்.அவர்களுக்கும் பணி வழங்கப்படும். வட மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் விரைவில் நிரந்தரமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  55. எங்கெல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ, அங்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ., அமைச்சர்கள் உதவியுடன் 7,500 ஆசிரியர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
  56. ஜனவரி 21ல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூகே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
  57. நமது பள்ளி அமைவிடம் longitude and latitude அடிப்படையில், ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மட்டுமே ஆன்லைன் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.
  58. வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தையோ அல்லது டிஜிட்டல் உரிமத்தையோ தன்னுடன் வைத்திருக்க வேண்டும் 
  59. பள்ளிக்கு செல்லாமல் எழுதும் நேரடி 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜன.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் - தேர்வுத்துறை அறிவிப்பு.
  60. பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  61. சிறப்பாசிரியர் தேர்வு தொடர்பாக தமிழ் வழி கல்வியில் படித்த ஆசிரியர்கள், ராணுவத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், விதவை பெண்களாக தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம் சான்றிதழ் பெற்று அனுப்ப 4 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அதை அனுப்பவில்லை என்றால் பொதுப்பிரிவில் இருக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  62. ஆண்டுக்கு ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்களை தேர்வு செய்து மேலைநாடுகளின் அறிவியல், பண்பாடு, கலாசாரத்தை புரிந்து கொள்ள அங்கு அனுப்ப இருக்கிறோம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். 
  63. பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘பயோ மெட்ரிக்’ திட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமல்படுத்துகிறது. அதை அமல்படுத்த அரசிடம் நிதி இல்லை என்றாலும், தனியார் நிறுவனம் மூலம் அதை செயல்படுத்த இருக்கிறோம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  64. அறிவியல் வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் அதனை அறிந்து கொள்ள ரூ.20 லட்சம் செலவில் 671 பள்ளிகளுக்கு ‘அட்டல் டிங்கர் லேப்’ டிசம்பர் மாதம் இறுதிக்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  65. 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வகுப்பு அறைகளும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி கொடுக்கப்பட இருக்கிறது - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  66. மடிக்கணினி வழங்கும் திட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிறைவேற்றப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  67. வருகிற டிசம்பர் மாத இறுதியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  68. முதல்-அமைச்சர் ஒப்புதலோடு அடுத்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 2 வெவ்வேறு விதமான பள்ளி சீருடைகளை அறிமுகப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும்.
  69. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்து அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  70. நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நிறைய இடங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது. முறையான பயிற்சி வழங்காதது, அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  71. சரளமாக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர அடுத்த வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  72. பள்ளி கல்வித துறையில், இணை இயக்குனர் குப்புசாமி, இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராக பதவி உயர்வு. மற்றொரு இணை இயக்குனர் உஷாராணியும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குனர் நிலையில் உறுப்பினராக பதவி உயர்வு.
  73. அடுத்தாண்டு முதல் ( 2019 ) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும்- பள்ளிகல்வித்துறை அமைச்சர்
  74. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
  75. 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழித்திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதற்கான பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.
  76. அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.
  77. ஆசிரியைகள் 9 மாதம் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தடையில்லா கல்வி வழங்கப்படும்.
  78. ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம்.
  79. புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல்கள் பாதுகாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
  80. வீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்புதல்.
  81. 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது? : 20 லட்சம் பேர் காத்திருப்பு.
  82. 6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன் பள்ளிகளுக்கு புது திட்டம்.
  83. கேட்’ எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., 25ல் நடைபெறம்.
  84. TNPSC: மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. 
  85. அரசு ஊழியர் தனது பிறந்த தேதியை மாற்றம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு மாற்றம் கோரும் அரசு ஊழியரின் பிறந்த தேதியானது 10-ஆம் வகுப்பு முடித்திருக்கும் போது 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் இல்லையென்றால் பணி ஆணை இரத்தாகும் என தலைமைச் செயலாளர் அறிவுரை.
  86. பெற்றோரின் கல்வி சீர் மூலம், கோபி அருகே, ஏழூர் அரசு துவக்கப் பள்ளியில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.வகுப்பறை கட்டடங்கள் மீது விழும் மழைநீர், ஒரு துளி கூட வீணாகாமல், நிலத்தை அடைய வசதியாக, மூன்று இடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கிஉள்ளனர்.'மூன்றாண்டுகளில் மட்டும், பெற்றோர் பங்களிப்பாக, மூன்று லட்சம் ரூபாய் வரை நிதியுதவி செய்துள்ளனர்.
  87. Maharashtra Government to disburse 25% of 7th pay commission arrears soon.
  88. பொது அறிவு புத்தகங்களை பள்ளியில் படிக்க பாடவேளை ஒதுக்கீடு:- "வாசிப்பு மாதம்"எனும் திட்டம் மூலம் நடவடிக்கை.
  89. இன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2,653 பேர்.
  90. ஆசிய நாடுகளுக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கால சலுகை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஊழியர்களுக்கு விடுமுறை கால பயண சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  91. தமிழக அரசு துறையில், வன பயிற்சியாளர் பணிக்கான தேர்வு, செப்டம்பர், 23 முதல், 30 வரை நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது.
  92. தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு இன்னும் ஒரு வாரக் காலத்தில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
  93. மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 9, 10, 12ஆம் வகுப்புகள் அனைத்தும் கணினி மையமாக்கப்பட உள்ளது" என கல்வி அமைச்சர் அறிவிப்பு.
  94. அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக ஒரு ஆங்கில வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு.
  95. பிற மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் பெற்றவர் தமிழகத்தில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் இட ஒதிக்கீடு கோர முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு.
  96. கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு.
  97. ஐடிஐ தொழிற் பயிற்சிக்காக ஆக.11 வரை விண்ணப்பிக்கலாம்.
  98. அனைத்து பதிவுகளையும் படியுங்கள்.
  99. அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
  100. இன்ஜினியரிங் தொழிற்கல்வி பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  101. 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சீருடை அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
  102. தமிழகத்தில்அரசு அலுவலக நடைமுறைகள் மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் புதிய திட்டம், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடக்கம்!
  103. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இரண்டு மாதங்களில், இலவச இணையதள,'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  104. Attendance App - தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல் தற்போது ஆசிரியர்கெனத் தனித்தனியாக Login வசதி உருவாக்குதல், எந்த வகுப்பு மாணவர்களின் வருகையினை எந்த ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முடிவெடுத்தல் தொடர்பாக விரைவில் புதிய Application வெளியிடப்பட உள்ளது.

Comments