உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஜூனில் நடக்கும் என அறிவிப்பு

பல்கலை., கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக் கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் 17 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி, பல் கலைக்கழகங்களில் ஏப்ரலில் நடக்க விருந்த பருவத்தேர்வுகளும் ஒத்திவைக் கப்பட்டுள்ளன. அடுத்த கல்வி ஆண்டுக் கான வகுப்புகள் ஜூனில் தொடங்கப் பட வேண்டும் என்பதால், நடப்பு ஆண்டுக்கான பருவத் தேர்வுகள் எப் போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டது.

இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பருவத்தேர்வு கள் நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அத்துறையின் முதன்மைச் செயலர் அபூர்வா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து கல்லூரிகளுக்கும் மார்ச் 17-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் இன்னும் நடத்தப்பட வில்லை. வெளிநாடுகள், வெளிமாநிலங் களில் இருந்தும் மாணவர்கள் பலர் இங்கு வந்து கல்வி பயில்கின்றனர்.

இதை கருத்தில்கொண்டு அனைத்து பருவத்தேர்வுகளும் அடுத்த கல்வி ஆண் டின் தொடக்கத்தில் நடத்தப்படும். மேலும், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறும் போது, ‘‘கோடைவிடுமுறை முடிந்து, அடுத்த கல்வி ஆண்டு வழக்கம்போல் ஜூன் மாதத்தில் தொடங்கும். அதன் தொடக்கத்தில் இந்த ஆண்டுக்கான பருவத்தேர்வுகள் நடத்தப்படும். அதன்பின் புதிய கல்வி ஆண்டுக்குரிய பாடங்களை, ஆசிரியர்கள் நடத்துவர். தேர்வுக்கான முன்னேற்பாடுகள், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஊரடங்கு முடிந்தபின் மேற்கொள்ளப்படும். எனவே, மாண வர்கள் தேர்வு ரத்து என்ற மனப்பான்மையில் இருந்துவிடாமல் நன்கு படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும்’’ என்றார்.

Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.