1 ➤பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.
➤Name the phenomenon where the female gamete directly develops into a new organism with an avian example.
➤நிகழ்வு : கன்னி இனப்பெருக்கம்.
➤பறவையின் பெயர் : வான்கோழி.
➤Phenomenon-Parthenogenesis
➤An avian example-Turkey
2 ➤கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.
➤What is parthenogenesis? Give two examples from animals
➤அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சியடையும் செயல்.
➤எ.கா. : ஆண் தேனீக்கள் , மொழுக்கு ஈ.
➤Development of an egg into a complete individual without fertilization.
➤Example - Male Honey bees, Gall fly.
3 ➤பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?
➤Which type of reproduction is effective -Asexual or sexual and why?
➤பாலினப்பெருக்கம் மேம்பட்டது.
➤மரபியல் வேறுபாடுகள் தோன்றுகின்றன.
➤வேறுபாடுகள் பரிணாமத்திற்கு காரணமாகிறது.
➤Sexual reproduction is effective.
➤Genetical variation occurs.
➤It leads to evolution.
4 ➤காரணங்கள் கூறுக. அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன.
➤Give reasons for the following: a) Some organisms like honey bees are called parthenogenetic animals
➤கருவுறாத முட்டையிலிருந்து ஆண் தேனீக்கள் தோன்றுவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
➤The male honey bees are formed from unfertilized eggs.
5 ➤காரணங்கள் கூறுக. ஆ) ஆண்தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.
➤Give reasons for the following: b) A male honey bee has 16 chromosomes whereas its female has 32 chromosomes.
➤ஆண் தேனீக்கள் கருவுறாத முட்டைகளில் இருந்து உருவாக்குகின்றன, எனவே இவை 16 குரோமோசோம்களை (ஹேப்ளாய்டு/ஒருமயத்தன்மை) கொண்டுள்ளன.
➤பெண் தேனீக்கள் கருவுற்ற முட்டைகளில் இருந்து உருவாக்குகின்றன, எனவே இவை 32 குரோமோசோம்களை (டிப்ளாய்டு/இருமயத்தன்மை) கொண்டுள்ளன.
➤Male Honey bee develop from unfertilized eggs and are haploid (16 chromosomes)
➤Female Honey bee develop fertilized eggs and are diploid (32 chromosomes)
6 ➤இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?
➤How is the juvenile phase different from the reproductive phase?
➤இளவுயிரி நிலை என்பது ஒரு உயிரியின் பிறப்பிற்கும், இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சி காலமாகும்.
➤இனப்பெருக்க நிலை என்பது ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித்தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலமாகும்.
➤Juvenile phase/ vegetative phase is the period of growth between the birth of the individual upto reproductive maturity
➤During reproductive phase/ maturity phase the organisms reproduce and their offsprings reach maturity period.
7 ➤ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையோன வேறுபாடுகள் யாவை?
➤What is the difference between syngamy and fertilization?
➤ஒருங்கிணைவு : இரு ஒற்றை மய இனச்செல்கள் (Haploid gametes) ஒன்றிணைந்து இரட்டைமய கருமுட்டை (Diploid zygote) உருவாக்கப்படுதல்.
➤கருவுறுதல் : ஆண், பெண் இனச்செல்கள் இணைதலின் ஒட்டு மொத்த நிகழ்வு.
➤Syngamy : It is the process of fusion of two haploid gametes takes place to produce a diploid zygote
➤Fertilization : The entire process involved in fusion of male and female gamete
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||