உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNEA 2020 | என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் ஆகஸ்டு 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் .

 • 2020-21-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்பில் சேர www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 
 • விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்டு 16, 2020.
 • ரேண்டம் எண் அடுத்த மாதம் 21-ந்தேதியும், தரவரிசை பட்டியல் செப்டம்பர் 7-ந்தேதியும் வெளியிடப்படும். 
 • சேவை மையம் வாயிலாக அசல் சான்றிதழை அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை சரிபார்த்துக்கொள்ளலாம்.
 • சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலும், பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 6-ந்தேதி வரையிலும், துணை கலந்தாய்வு அக்டோபர் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையிலும், எஸ்.சி.ஏ., எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 14 மற்றும் 15-ந்தேதிக்குள்ளும் நடைபெறும். 
 • 52 சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதிலும் மாணவர்கள் சென்று பயன்பெறலாம். 
 • 2020-21-ம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கைக்காக 465 கல்லூரிகள் இதுவரை பதிவு செய்து இருக்கின்றன. 2019-20-ம் கல்வியாண்டில் 480 கல்லூரிகளில் இருந்த 1 லட்சத்து 43 ஆயிரத்து 871 இடங்களில் 62.6 சதவீதம் இடங்கள் நிரம்பின. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
TNEA 2020 | என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் ஆகஸ்டு 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் .


4 comments:

 1. ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க கோரி
  2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பில் முதல்வர் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து மனு செய்யப்பட்டு வருகிறது.

  https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_18.html

  ReplyDelete
 2. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பின் மூலமாக
  டெலகிராமில் தனிகுழு ஏற்படுத்தபட்டுள்ளது.
  பாதிக்கபட்ட2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்று பாதிக்கபட்ட ஆசிரியர் நண்பர்கள் மட்டும் இக்குழுவில் சேரவும்

  https://t.me/joinchat/T4Eo3RkaUA_ZtncV0XN-6Q

  ReplyDelete
  Replies
  1. 8825740983
   pls add my number in tel. group..i am 2013 tet passed student

   Delete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.