உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Class 12 Zoology TM March 2020 Public Exam Govt Answer Key | Download

 1. Class 12 Zoology TM March 2020 Public Exam Govt Answer Key | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Class 12 Biology Zoology TM - EM March 2020 Public Exam Govt Answer Key | Download

 1. Class 12 Biology Zoology TM March 2020 Public Exam Govt Answer Key | Download
 2. Class 12 Biology Zoology EM March 2020 Public Exam Govt Answer Key | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Class 12 Biology Botany TM March 2020 Public Exam Govt Answer Key | Download

 1. Class 12 Biology Botany TM March 2020 Public Exam Govt Answer Key | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Class 12 Physics TM March 2020 Public Exam Govt Answer Key | Download

 1. Class 12 Physics TM March 2020 Public Exam Govt Answer Key | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Class 12 Chemistry TM March 2020 Public Exam Govt Answer Key | Download

 1. Class 12 Chemistry TM March 2020 Public Exam Govt Answer Key | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Class 12 English March 2020 Public Exam Govt Answer Key | Download

 1. Class 12 English March 2020 Public Exam Govt Answer Key | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Class 12 Tamil March 2020 Public Exam Answer Key - ப.க.சுரேஷ்

Class 12 Tamil March 2020 Public Exam Answer Key - ப.க.சுரேஷ் , முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, நெரூர், கருர்.9942141963 | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 CHEMISTRY TM-EM MARCH 2020 PUBLIC EXAM ANSWER KEY TAMIL/ENGLISH MEDIUM - GEM

 1. CLASS 12 CHEMISTRY TM MARCH 2020 PUBLIC EXAM ANSWER KEY TAMIL MEDIUM - GEM | Download
 2. CLASS 12 CHEMISTRY EM MARCH 2020 PUBLIC EXAM ANSWER KEY ENGLISH MEDIUM - GEM | Download
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC TRB SOCIAL SCIENCE 1-10 STD STUDY MATERIALS - ARIVUKKADAL PATHIPPAGAM


TNPSC TRB SOCIAL SCIENCE 1-10 STD STUDY MATERIALS - ARIVUKKADAL PATHIPPAGAM | சமூக அறிவியல் (6-ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) புதிய பாடத்திட்டம் (வரிக்கு வரி எடுக்கப்பட்ட வைரவரிகள்) 17,009 கொள்குறி வினாவிடைகள் பட்டிமன்ற நடுவர், நகைச்சுவை அருவி முனைவர் தமிழ் இனியன்.எம்.ஏ. பிஎச்டி அறிவுக்கடல் பதிப்பகம், மதுரை -11.
Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

G.O. No.5, dated 21 st May 2020 | மாற்றுத்திறன் பணியாளர்கள் 31.05.2020 வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு - அரசாணை வெளியீடு

G.O. No.5, dated 21 st May 2020 | மாற்றுத்திறன் பணியாளர்கள் 31.05.2020 வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - கொரோனா வைரஸ் (Covid-19) நோய்த் தொற்றை தடுக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு நீட்டித்தது - மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு (Exemption) ஆணை - வெளியிடப்படுகிறது.
ஆணை :
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் பணியாளர்களுக்கு மட்டும் அவர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பை கருத்தில்கொண்டு, தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நாளான 18.05.2020 முதல் 3052020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து (Exemption) அரசு ஆணையிடுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
க. சண்முகம் 
அரசு தலைமைச் செயலாளர்.
Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

G.O. No.249, dated 21 st May 2020 | பொது மாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்படுகிறது - நிதி துறை அரசாணை வெளியீடு

G.O. No.249, dated 21 st May 2020 | பொது மாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிதி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்  நிர்வாக நலன் கருதி மட்டுமே மாறுதல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனமொத்த மாறுதலும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 1. அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது
 2. மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை - தமிழக அரசு
 3. சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி
 4. மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி - தமிழக அரசு
 5. அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவு
 6. கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தடை விதிப்பு
 7. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயணப்படி மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு
 8. நடப்பு நிதியாண்டுக்கான பொதுவான பணியிட மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது - தமிழக அரசு


Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

COMPUTER TEACHERS APPOINTMENT 2020 | வேலை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிரியர்கள். விரைந்து பணி நியமனம் வழங்க கோரிக்கை.

தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே  TRB போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற  824 முதுகலை கணினி ஆசிரியர்கள் இருந்த வேலையையும் விட்டு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால்  அவர்களின் வாழ்வு கேள்விக்குறி ஆகியுள்ளது.

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது நவம்பர் மாதம் 25 - ஆம் தேதி வெளியிட்டது. பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது ஜனவரி மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது ஜனவரி 11 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கின்றது. முதுகலை கணினி ஆசிரியர் அறிவிப்பாணைக்குப் பின் 12.06.2019 அன்று வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் (PGTRB) 2144 பணியிடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு கடந்த 12.02.2020 ஆம் தேதியன்று பணியில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் வழக்குகள் காரணமாக தெரிவு செய்யப்பட்ட 697 முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு எந்தவித கலந்தாய்வும் நடைபெறவில்லை. மேலும் காத்திருப்பு பட்டியலில் உள்ள 117 ஆசிரியருக்கான தீர்வும் கிடைக்கப்பெறமால் தொடர்ந்து முதுகலை கணினி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஒரு சிலர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பின் பெயரில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக ஏனைய நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடந்த ஓராண்டாக மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். அரசு மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 824 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

மேலும் தற்போது உள்ள சூழலில் மாணவர்களுக்கு கணினி வழி கல்வி (Online Class) மற்றும் இதைத் தவிர்த்து அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களின் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை கணினி ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் கல்வியாண்டு தொடக்கத்திலாவது  2019 - ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தேர்வில் வெற்றி பெற்றுள்ள 824 ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HSE VALUATION CAMP 2020 | விடைத்தாள் திருத்தும் பணி முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர உத்தரவு

HSE VALUATION CAMP 2020 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர வேண்டும் என்றும், பணிகளில் இருந்து யாருக்கும் விலக்கு இல்லை என்றும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24-ந்தேதி வரை நடைபெற்றது.

இதில் இறுதிநாள் தேர்வான வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளை சுமார் 34 ஆயிரம் பேர் தேர்வு எழுத முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் தேர்வுஎழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அவர்களுக்கான தேர்வு அட்டவணையையும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று முன்தினம் அறிவித்தார்.

அதில், அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் முடிவு அடைந்த பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும்பணி வருகிற 27-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளதாக கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த தேர்வுக்கான பணிகளில் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் விடைத்தாள் திருத்தும்பணிகள் நடைபெற உள்ளது. கட்டாயம் பணியாற்ற உத்தரவு ஒரு அறைக்கு தலைமை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 8 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முக கவசம் அணிந்து மட்டுமே ஆசிரியர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வித்துறை அனுப்பியுள்ள உத்தரவில், ‘விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது என்றும், அனைவரும் கட்டாயம் பணியாற்றிட வேண்டும் என்றும் கல்வித்துறை திட்டவட்டமாக கூறி இருக்கிறது.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .

ஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பில் நடைபெறாமல் இருக்கும் ஒரு தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும். 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும்


Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 SOCIAL SCIENCE EM 100 MARKS STUDY PLAN-M.SAKTHIVEL | Download

 1. CLASS 10 SOCIAL SCIENCE EM 100 MARKS STUDY PLAN-M.SAKTHIVEL | Download
 2. CLASS 10 SOCIAL SCIENCE EM DAY FOUR QUESTION PAPER-M.SAKTHIVEL | Download
 3. CLASS 10 SOCIAL SCIENCE EM DAY ONE QUESTION PAPER-M.SAKTHIVEL | Download
 4. CLASS 10 SOCIAL SCIENCE EM DAY THREE QUESTION PAPER-M.SAKTHIVEL | Download
 5. CLASS 10 SOCIAL SCIENCE EM DAY TWO QUESTION PAPER-M.SAKTHIVEL | Download
 6. CLASS 10 SOCIAL SCIENCE EM FULL PORTION QUESTION PAPER-M.SAKTHIVEL | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தேர்வு பணிகாலம் என்பதால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை கல்வித்துறை அறிவிப்பு

தேர்வு பணிகாலம் என்பதால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள், பள்ளி வளாகம் மற்றும் அனைத்து வகுப்பறைகளையும் 19-ந் தேதிக்குள் (இன்று) முழுமையாக சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்பட இருப்பதால் அனைத்து வகுப்புகள் மற்றும் பள்ளி வளாகம் முழுமையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் கிருமிநாசினி திரவம், சோப்பு, கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதேபோல், குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தேர்வு மையத்திற்குள் வரும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்திட வேண்டும். 20-ந்தேதி முதல் (நாளை) தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தங்களது பள்ளியை சார்ந்த அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை நாள்தோறும் பள்ளிக்கு வருகைபுரிய செய்வதோடு வருகைப்பதிவேட்டில் இருநேரமும் கையொப்பமிட செய்திட வேண்டும்.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு பணியிலும் மற்றும் மேல்நிலைக்கல்வி விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். இது தேர்வு பணிக்காலம் என்பதால் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியம் இல்லாமல் எவ்வகை விடுப்பு எடுப்பதற்கும் அனுமதி இல்லை.

அனைத்து பள்ளிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, வயது, வீட்டு கதவு எண், வார்டு எண், தெருப்பெயர், வசிக்கும் பகுதி(ஊர்) ஆகிய விவரங்களுடன் தனி பதிவேடு அவசியம் பராமரிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர் எனில், இப்பதிவேட்டில் அடையாளத்திற்காக அவரது பெயரினை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு வைத்துக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு 4-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்தநிலையில், பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதல்-அமைச்சர் ஆலோசனைபடியும், ஒப்புதலோடும் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை குறிப்பிட்ட காலத்தில் பொதுத்தேர்வு நடைபெறும்’ என்றார். இதையடுத்து அவர் சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக்கல்வி துறை செயலாளர், ஆணையர், இயக்குனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் மாயவன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CBSE EXAM 2020 | நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தோ்வு ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு அட்டவணையையும் அவர் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். அதில் தில்லி மற்றும் பிற மாநிலங்களில் சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களுக்கு என தனித்தனியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தில்லி தவிர்த்து பிற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி ஜூலை 13-ம் தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. தில்லியில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. கரோனா வைரஸ் தீநுண்மி பாதிப்பின் காரணமாக சிபிஎஸ்இ பாடத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. 

தோ்வுக்கால அட்டவணையை மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வார இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தோ்வு கால அட்டவணை திங்கள்கிழமை (மே 18) வெளியிடப்படும். சில தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் சுட்டுரையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், இன்று (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.

பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பது குறித்து அதிகாரிகளுடன், இன்று (18.05.2020) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் காரண மாக தமிழகத்தில் ஒத்திவைக்கப் பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் நோய்த்தொற்றின் தீவிரம் குறையாததால் பொதுத் தேர்வை ஒத்திவைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதேநேரம், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டிவருகிறது.

இதற்கிடையே பெரும்பாலான பள்ளிகளில் தற்காலிக மருத்துவ முகாம்கள், காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை மாவட்ட நிர்வாகம் இட மாற்றம் செய்த பின்னரே, பள்ளி களை தூய்மைப்படுத்தி தேர்வு மையங்களாக மாற்ற முடியும். அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைப்பதால் விடைத் தாள், வினாத்தாள் இடமாற்றம் உள் ளிட்ட முக்கிய பணிகளை செய்து முடிக்க குறைந்த காலஅவகாசமே உள்ளது. இவற்றை முறையாக மேற்கொள்ளாதபட்சத்தில் நோய் பரவலுக்கு வழிவகுத்துவிடும்.

மேலும், வெளிமாவட்டங்களில் இருந்துவரும் மாணவர்களில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர் களை மட்டும் தனிமைப்படுத்தி சோதனை செய்ய உத்தரவிட்டுள் ளனர். அவ்வாறு தனிமைப்படுத்தப் படும் மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாமா, தேர்வின் இடையே ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என் பன போன்ற கேள்விகளுக்கு தெளி வான வழிகாட்டுதல் இல்லை.

இதேபோல், பொதுபோக்கு வரத்து இல்லாததால் வெளிமாவட் டங்களில் இருந்து வரும் மாணவர் கள் சொந்த செலவில் பயணம் செய்ய வேண்டிய நிலையுள்ளது. இவை ஏழை மாணவர்களுக்கு கூடு தல் சுமையாகியுள்ளதாக ஆசிரியர் கள், கல்வியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தற்போதைய அசாதாரண சூழலில் பொதுத்தேர்வை நடத்து வது சவாலான காரியம்தான். எனி னும், மாணவர்கள் நலன்கருதி தேர்வை நடத்த வேண்டிய அவசி யம் உள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் தேர்வு மையத்துக்கு எளிதாக வரமுடியும்.

மேலும், வெளிமாவட்டங்களில் குறைந்த அளவிலான மாணவர் களே தங்கி உள்ளனர். அவர்களை மே 25-க்குள் இருப்பிடத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விட்டால் பொதுத்தேர்வை ஆகஸ்ட் மாதத்தில்தான் நடத்த முடியும். அதனால் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் முறையான பாதுகாப்பு வசதிகளுடன் தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டுகிறது. எனவே, மாணவர்கள் பயமின்றி தேர்வுக்கு தயாராகலாம். மேலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்.

இதற்கிடையே பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (மே 18) நடைபெற உள்ளது. இதன்முடிவில் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 18-ந்தேதிக்கு பிறகு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தேர்வை எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பஸ் வசதி செய்து கொடுக்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படும். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு 18-ந் தேதிக்கு பிறகு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பிளஸ்-2 விடைத்தாள்களை திருத்தும் பணியை புறக்கணிப்பதாக கூறி இருப்பது, அவர்களது விருப்பம். அதற்கேற்ப அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்க்கவும். மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கலெக்டருடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு​ மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையம்​​ கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியில் எழுதும் வகையில் தேர்வு மையங்களை அமைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கால் ஒத்தி வைக்கப் பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளன. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம், முறையான பாது காப்பு அம்சங்களுடன் தேர்வு களை நடத்த கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் தீரஜ் குமார், காணொலிக் காட்சி வாயிலாக, துறை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத் துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா அச்சுறுத்தலால் தேர் வின்போது தனிநபர் இடை வெளியை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். இதனால், ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்களை மட் டுமே அனுமதிக்கவும், அதற்கேற்ப மாணவர்கள் படிக்கும் பள்ளிகளி லேயே தேர்வு மையத்தை அமைக் கவும் திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களை தேர்வு மையத் துக்கு அழைத்துவர பேருந்து வசதி ஏற்படுத்தப்படும். இதற்கு மாண வர்களின் விவரங்கள் சேகரிக்கப் பட்டு வருகின்றன. இதுதொடர் பான அறிவிப்பை ஓரிரு நாட்களில் அமைச்சர் வெளியிடுவார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read More News

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும். சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிப்பு

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மே 18-ம் தேதி முதல் 50 சதவீத பணியாளர் களுடன் இயங்கும் என்றும் சனிக்கிழமை யுடன் சேர்த்து வாரத்தில் 6 நாட்கள் பணி நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சுகாதாரம், காவல், வருவாய் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளின் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மற்ற அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த மே 3-ம் தேதி ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட போது, 33 சதவீதம் பணி யாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மே 17-ம் தேதி 3-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரஉள்ளது.

இந்நிலையில், மே 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அர சாணையில் கூறியிருப்பதாவது:

மே 18-ம் தேதி முதல் 50 சதவீத ஊழி யர்களுடன், போதிய சமூக இடை வெளியை பின்பற்றி அரசு அலுவலகங் கள் இயங்கலாம். இதுவரை இழந்த பணி நேரத்தை ஈடுகட்டும் வகையில், தற்போதுள்ள அலுவலக நேர அடிப் படையில் வாரத்துக்கு 6 நாள் பணி யாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் 2 பிரிவாக பிரிக் கப்பட்டு, முதல் பிரிவினர் வாரத்தில் திங்கள், செவ்வாய் என 2 நாட்கள் பணி யாற்ற வேண்டும். அடுத்த பிரிவினர் புதன், வியாழன் ஆகிய 2 நாட்களிலும், மீண்டும் முதல் பிரிவினர் வெள்ளி, சனி என இரு நாட்களிலும் பணியாற்ற வேண்டும்.

அடுத்த வாரத்தில், திங்கள், செவ்வாய் கிழமைகளில் 2 வது பிரிவினரும் புதன், வியாழக்கிழமைகளில் முதல் பிரிவினரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் மீண்டும் 2-ம் பிரிவினரும் பணிக்கு வரவேண்டும். ஒரு வேளை கூடுதலாக பணியாளர்கள் தேவைப்படும் பட்சத்தில், எந்த நேரமும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும்.

அனைத்து குரூப் ஏ பிரிவு அதிகாரி களும், அலுவலக தலைமை அதிகாரி களும் அனைத்து வேலை நாட்களிலும் பணிக்கு வரவேண்டும். தேவைப்படும் பட்சத்தில், கோப்புகள் சமர்ப்பிப்பதில் உள்ள நடைமுறைகளில் தளர்வுகள் அதா வது குறிப்பிட்ட அதிகாரிக்கு செல்லா மலே உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு அனுப்பப்படலாம்.

தலைமைச் செயலகம், மாவட்ட நிர் வாக அலுவலகங்கள், ஆணையங்கள், வாரியங்கள், கழகங்கள், பல்கலைக்கழ கங்கள், நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். காவல், சுகாதாரம், மாவட்ட நிர்வாகங்கள், கருவூலங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கெனவே மார்ச் 24-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புப்படி தொடர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தலைமைச் செயலர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. அலுவலக பணியில் இல்லாத நாட்களில், அலுவலக பணி தொடர்பாக, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் எந்தவொரு மின்னணு முறையிலும் தொடர்பில் இருக்க வேண்டும். உரிய பேருந்து வசதிகள் செய்து தரப்படும். அரசுப் பணியாளர்கள் அனைவரும் இந்த நடைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

JD TRANSFER MAY 2020 | பள்ளிக் கல்வித்துறையில் மூன்று இணை இயக்குநர்கள் இடமாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில் மூன்று இணை இயக்கு நர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாகக்காரணங்களுக்காக இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுவதுவழக்கம்.

அந்த வகையில் தற்போது மூன்று இணை இயக்குநர்களை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள் விவரம் (ஏற்கெ னவே வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
1. சி.அமுதவல்லி- இணை இயக்குநர், கள்ளர் சீரமைப்பு, பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரப்பினர் நலத்துறை, மதுரை. (இணை இயக்குநர், இடைநி லைக் கல்வி, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை )
2. வை.குமார்- இணை இயக்கு நர், பாடத்திட்டம், மாநிலக் கல் வியியல் ஆராய்ச்சிமற்றும்பயிற்சி நிறுவனம், சென்னை (இணை இயக்குநர், கள்ளர் சீரமைப்பு, பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப் பினர் நலத்துறை,மதுரை)
3. பி.குமார்- இணை இயக்கு நர், இடைநிலைக் கல்வி, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை (இணை இயக்குநர், பாடத் திட்டம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவ னம், சென்னை )
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ​ பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ​

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடந்து வந்தன. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மார்ச் 27 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. அதே நேரத் தில் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தி முடிக் கப்பட்டன. நோய்த் தொற்று பரவல் தீவிரமானதால் மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முழுமையாக வும், மார்ச் 26-ல் நடக்கவிருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வும் தேதி குறிப் பிடாமல் தள்ளி வைக்கப்பட்டன. மேலும், மார்ச் 24-ல் நடந்த பிளஸ் 2 இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

இதுதவிர பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. தற்போதைய அசாதாரண சூழலில் மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், உயர்நிலை படிப்பு களை தேர்வு செய்ய 10-ம் வகுப்பு மதிப்பெண் முக்கியம் என்பதால் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் ஜூன் மாத இறுதியில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சில தினங்களுக்கு முன்பு அறிவித் திருந்தார்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக் கான பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடக்கும். அதேபோல், பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள வேதி யியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு ஜூன் 2-ம் தேதி நடத்தப்படும்.

பிளஸ் 2 இறுதிநாள் தேர்வில் பேருந்து கிடைக்காமல் பங்கேற்க முடி யாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்ட 36,842 மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் களுக்கு ஜூன் 4-ல் தேர்வெழுத மறு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வின்போது மாணவர் கள் சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27-ல் தொடங்கி ஜூன் 9-ம் தேதி முடிவடையும். அதன்பின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணி கள் ஜூன் 10 முதல் 19-ம் தேதி வரை நடக்கும்.

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10-ல் தொடங்கி 23-ம் தேதி வரையும், அதற்கடுத்த 10 நாட்களில் தேர்வு முடிவு வெளியிடுவதற்கான பணிகளும் நடக்கும். தொடர்ந்து பத் தாம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தம் மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் ஜூன் 15 முதல் ஜூலை 4-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. ஆசிரியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி விடைத்தாள் திருத்துவதற்கான வசதி கள் செய்யப்பட்டுள்ளன.

பொது போக்குவரத்து தொடங் கப்படாத சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முதல்வரின் ஒப்புதல் பெற்று அதற்கான நடவடிக்கைகள் மே 3-வது வாரத்தில் மேற்கொள்ளப்படும். கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத் தும் பள்ளிகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால், துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் பயிற்சி வகுப்புகளை பொறுத்த வரை 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 2 வார பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன. தற்போதைய சூழல் சரியான பின்னர் நீட் தேர்வில் ஆர்வமுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தர 10 கல்லூரிகளை ஏற்பாடு செய் துள்ளோம். அங்கே உணவு, தங் கும் வசதிகள் அளிக்கப்பட்டு நீட் தேர்வுக்கு ஜூன் மாதத்தில் பயிற்சி வழங்கப்படும். ஆன்லைன் மூலம் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC EXAM 2020 | நடப்பு ஆண்டிலும் குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் ​டிஎன்பிஸ்சி விளக்கம் ​

TNPSC EXAM 2020 | நடப்பு ஆண்டு குரூப் 1 உட்பட அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப் படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித் துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59-ஆக நீட்டிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து அடுத்த ஓராண்டுக்கு தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்சி பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வு கள் நடைபெற வாய்ப்பில்லை என பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இது தேர்வர்கள் மத்தியில் குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேர்வாணைய செயலர் நந்தகுமாரிடம் கேட்ட போது, ‘‘அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் போட்டித் தேர்வுகள் ரத்து என்பது தவறான தகவல்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான கால அட்டவணைப்படி அரசு் பணிக்கான குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். அடுத்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பணியிடங்களின் எண்ணிக் கையைப் பொறுத்து காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு கால அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும். எனவே, நடப்பு ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது’’ என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS TWO 2020 | பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற போவது எப்போது ? தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:

இந்தியாவில் முதன்முறையாக பட்டய கணக்காளர் தேர்வுக்காக 75 ஆயிரம் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிகள் திறக்கும்போது, சமூக இடைவெளியை பின் பற்றுவது குறித்து, குழு ஆய்வின்படி ஆலோசனை நடத்தி, அதுகுறித்த அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார்.

ஆண்டுதோறும் அரசு பொதுத் தேர்வை 3 லட்சத்து 34 ஆயிரம் மாண வர்கள் எழுதுகின்றனர். தேர்வு நடத்தும்போது, மாணவர்களி டையே இடைவெளி இருக்கும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளித்து விடலாம் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியபோது, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. 10 ம் வகுப்பு தேர்வின் மதிப்பெண்கள் தான் மாணவர்களின் உயர்கல் விக்கு வழிவகுக்கும். எனவேதான் பொதுத்தேர்வை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலையில் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களின் அருகே கூடுதல் மையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முதன்மை தேர்வாளர், கண்காணிப் பாளர் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்படும். சமூக இடை வெளியை பின்பற்றும் விதமாக ஒரு அறையில் அதிகபட்சம் 8 பேர் வரை அமர வைக்கப்படுவர்.

ஆசிரியர்களுக்கான போக்கு வரத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். ஆசிரியர்கள் கூடுதல் விடைத்தாள்களை திருத்த வற்புறுத்தப்படாது. நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

தற்போது திருத்துதல் பணி களுக்கான ஆசிரியர்களின் விவரங் கள் கல்வி மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஊர டங்கு தளர்வுக்குபின் விடைத்தாள் திருத்தும் பணிகளை மே இறுதியில் தொடங்கவும், தேர்வு முடிவுகளை ஜூலையில் வெளியிடவும் திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC EXAM 2020 | எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

sslc exam date | எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை தமிழக அரசு தள்ளிவைத்தது. இது தவிர பிளஸ்-1 பொதுத் தேர்வின் இறுதி நாள் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று பலரும் பேசி வந்த நிலையில், அந்த தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பதில் அளித்தார். இருப்பினும், சில கல்வியாளர்கள், கல்வி சார்ந்த அமைப்புகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக சில கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.

இந்த குழப்பங்களின் மத்தியில் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும் தேர்வு எப்போது நடைபெறும்? என்பது குறித்து அரசு விளக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையும் விடுக்கின்றனர்.

இதற்கிடையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு தகவலை பதிவிட்டு இருந்தார். அதில் அவர், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்துக்கு பின், ஜூன் மாத இறுதிக்கு பிறகு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எப்போது நடக்கும்? என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கும் தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன் 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம்

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கரோனா வைரஸ் பரவல் காரண மாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அவசர கால கடன் (எமர்ஜென்சி லோன் ஸ்கீம்) என்ற பெயரிலான இந்த கடன் 45 நிமிடத்தில் வழங்கப்படும்.

எஸ்பிஐ.யின் ``யோனோ’’ செயலி மூலம் இந்த கடனுக்கு வாடிக்கையாளர்கள் விண்ணப் பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டி 10.5 சதவீதமாகும். இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும்.

கரோனா வைரஸ் பரவல் காரண மாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத னால் பலரது வருமானம் குறைந் துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த கடன் வசதியைப் பெறும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு சுலப தவணை தொகையை செலுத்த லாம் என்று எஸ்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த கடன் வசதி தங்களுக்கு கிடைக்குமா அதற்குரிய தகுதி களை அறிந்துகொள்ள குறுந் தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி தெரிந்து கொள்ளலாம். PAPL (space) என டைப் செய்து தங்களது வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்கை எண்ணையும் சேர்த்து 567676 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

கடன் பெற விரும்பும் வாடிக்கை யாளர்கள் எஸ்பிஐ செயலியான யோனோ (YONO) செயலியை பதி விறக்கம் செய்து விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிக்கும் வாடிக்கை யாளர்களுக்கு முன் கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி யாக அளிக்கப்படும். தேவைப்படும் கடன் தொகையை பூர்த்தி செய்து அனுப்பலாம். உடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் சங்கேத எண் (பாஸ்வேர்டு) அவர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு வரும். அதை அனுப்பியவுடன் நீங்கள் கோரிய கடன் தொகை வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

பாரத ஸ்டேட் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியை 15 புள்ளிகள் குறைத்துள்ளது. அத்துடன் மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான வட்டியை அதிகரித்துள்ளது. ‘எஸ்பிஐ வி கேர் டெபாசிட்’ என்ற பெயரிலான இந்த சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்  மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டிருப்பது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59 வயதாக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

NEET 2020 | நீட் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார்.

கோபி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என 350 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி னார். அப்போது, செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஒரு பாடத்தேர்வு நடத்தப்பட வேண்டியது உள்ளது. கரோனா கட்டுக்குள் வந்தவுடன் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வுக்கு நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இன்று (நேற்று) முதல் அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

நூலகங்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்ளுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி தேர்வு அட்டவணையில், போதிய கால இடைவெளி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியீடு.

HM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .

1 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா ?

2 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தொடரப்பட்டு , இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா ?

3 . சார்ந்த ஆசிரியர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் உள்ளதா ?

4 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் யாரேனும் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனரா என்ற விவரம்

5 . சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விருப்ப மாறுதலில் / நிர்வாக மாறுதலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் தற்போது பணிபுரியும் அலுவலகம்

6 . சார்ந்த தலைமையாசிரியர்களின் நாளது தேதி வரையிலான அசல் மந்தண அறிக்கைகள்

போன்ற விவரங்கள்  அனுப்பப்பட வேண்டும் .

Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 3-வது வாரத்தில் நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக மே17ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் காரணமாக மார்ச் 16 முதல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. +2மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டன.

9 ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் எழுதப்படாமலேயே ரத்து செய்யப்பட்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

பல்வேறு தரப்பிலிருந்தும் 10-ம் வகுப்பு sslc exam  March 2020 பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 3-வது வாரத்தில் நடத்தப்படும் எனவும் 10 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜூலை 26ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் - மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்.

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு ஜூலை 26-ந் தேதி நடைபெறுகிறது. இதேபோல் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் மூடப்பட்டு உள்ளன. இதனால், மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் நுழைவுத் தேர்வை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தள்ளி வைத்தது.

இதேபோல் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்ற விரும்பினால், அதற்கான வாய்ப்பை தேசிய தேர்வு முகமை வழங்கியது.

இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். ஜே.இ.இ. (மெயின்) தேர்வு எழுத 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.

இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வு வருகிற ஜூலை மாதம் 26-ந் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார். ஆன்லைன் மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேபோல் ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வு ஜூலை மாதம் 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறும் என்றும், ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெறும் என்றும் அப்போது அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இன்னும் சில பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை.

இதில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு தேதிகள் இன்னும் இரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

பல்கலைக்கழக மானிய குழுவுடன் நடத்திய ஆலோசனையின்படி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்தலாம். கொரோனா பாதிப்பு நீடித்து தேர்வு நடத்த வாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் இன்டர்னல் மதிப்பீடு 50 சதவீதம், முந்தைய செமஸ்டரில் பெற்ற மதிப்பெண் 50 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கி மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கலாம்.

ஆகஸ்டு 1-ந் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

இளநிலை, முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முடிவடையும்.

2020-2021-ம் கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு தேதி நாளை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்‘ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘நீட்‘ நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் 5-ந் தேதி (நாளை) அறிவிப்பார் என்று அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் தெரிவித்தார். அன்றைய தினம் அவர் மாணவர்களுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடுவார் என்றும் அந்த அதிகாரி கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசின் ‘உமங்’ செயலியில் பணியாளர் தேர்வாணைய விபரம்

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும், தேசிய மின்ஆளுமை நிறுவனமும் இணைந்து ‘உமங்’ (umang) என்ற செல்போன் செயலியை கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தின.

மத்திய, மாநில அரசுகளின் மின்னணு சேவைகள், ஆதார், டிஜி லாக்கர், தொழிலாளர் வருங் கால வைப்புநிதி (இபிஎப்), சமையல் காஸ் சிலிண்டர் பதிவு உட்பட 200 விதமான சேவைகளை இந்த செயலியில் பெறலாம்.

இந்நிலையில், தற்போது ‘உமங்’ செயலியில் பணியாளர் தேர்வாணைய (ஸ்டாஃப் செலக் ஷன் கமிஷன்) சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வாணையம் நடத்தும் போட் டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு கள், தேர்வு முடிவுகள், வருடாந் திர தேர்வுக்கால அட்டவணை, காலி பணியிடங்கள் போன்ற விவரங்களை இதில் தெரிந்து கொள்ளலாம் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள் ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் ‘உமங்’ செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஊரடங்கு அமலில் இருப்பதால் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பணியை எப்போது தொடங்குவது? தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆலோசனை

ஊரடங்கு அமலில் இருப்பதால் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான பணியை எப்போது தொடங்குவது? என்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆலோசனை நடத்தியது.

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. கடந்த ஆண்டில் மே மாதம் 2-ந்தேதி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிலவும் ஊரடங்கால், அது தொடங்க காலதாமதம் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2020-21-ம் ஆண்டு) என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருக்கின்ற காரணத்தினால் இந்த ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கால் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகளும் நடைபெறாமல் உள்ளன. எனவே என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கலாம்? மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை எப்போது ஆரம்பிக்கலாம்? என்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து இருக்கிறது.

என்ஜினீயரிங் படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், இந்த ஆண்டு 32 என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது.

அதன்படி, அடுத்த கல்வியாண்டில் எத்தனை கல்லூரிகள், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருக்கின்றன? அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை? நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை? என்பது குறித்த சில விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் குறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இதுகுறித்து உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் செயலாளர்களுடன், தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் ஆலோசித்த பின்னர், விரைவில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்த கல்வி துறை உத்தரவு

பள்ளிக் கல்வி முதன்மைச் செய லர் தீரஜ் குமார், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத் துடன் இணைந்து பணியாற்ற பல்வேறு ஆசிரியர்கள் விருப் பம் தெரிவித்துள்ளதுடன், அதற் கான வழிகாட்டுதல்களை வெளி யிடவும் கோரிக்கை விடுத்துள் ளனர். இதையடுத்து தற்போ தைய ஊரடங்கு சூழலில், தன் னார்வ சேவை புரியத் தயாராக உள்ள 50 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கரோனா தடுப்புப் பணியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதன்படி, ரேஷன் பொருட் கள் விநியோகத்தை ஒழுங்குபடுத் துதல், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கண்காணித் தல், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை உருவாக்குதல், பொது கணக்கெடுப்பு உட்பட மருத்துவம் சாராத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தலாம்.

விருப்பம் தெரிவிக்கும் ஆசிரி யர்கள் பட்டியலைத் தயாரித்து மாவட்ட ஆட்சியர்களிடம், அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு

மத்திய உள்துறை அறிவிப்பின்படி தமிழ கத்திலும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே17-வரை ஊரடங்கை நீட்டிப்பது, எந்தெந்த தொழிற்பிரிவு களுக்கு தளர்வு அளிப்பது குறித்து முடி வெடுக்க முதல்வர் பழனிசாமி தலைமை யில் நேற்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் 1.40 மணி வரை நடைபெற்ற இக் கூட்டத்துக்குப்பின் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகள்படியும், தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் தமிழகத்தில் மே 4 முதல் 17-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில வழிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

சென்னை பெருநகர காவல் எல் லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப் பாட்டு பகுதிகளைத்தவிர பிற பகுதி களில் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப் படுகிறது. அதேபோல், சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு குறிப்பிட்ட சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பொதுவான அறிவுறுத்தல்கள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடை வெளியை பின்பற்றியும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தியும் பணியாளர்கள், தொழிலாளர்கள் பாது காப்பாக பணியாற்றுவதை கண் காணிக்க வேண்டும். அரசால் வெளி யிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப் பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படு கிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் பொது இடங்களில், 5 பேருக்குமேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண் காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

l ஏற்கெனவே அரசால் அனுமதிக் கப்பட்ட வேளாண்மை பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள், மருத்துவப் பணிகள், அத்தியவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தடங்கலும் இன்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

l கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல்குவாரிகள், எம்-சாண்ட், அரைப்பு நிறுவனங்கள் மற்றும் இவற்றுக்கான போக்குவரத்து செயல்படலாம்.

l ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமான பொருட்கள், சானிட்டரிவேர், மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் தனிக்கடைகள், கைபேசி, கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் நேரக் கட்டுப் பாடுகளுடன் இயங்க அனுமதி.

l பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

l பெரிய தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்,கட்டுமான நிறுவனங்கள் பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டுக்கள் பெற வேண்டும். நகரப் பகுதிகளில் பணியாளர்களை தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்து கள், வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம்.

l அந்த வாகனங்களில் 50 சதவீதம் அளவுக்கு ஊழியர்களை மட்டுமே தனி மனித இடைவெளியை கடைபிடித்து அழைத்து வரவேண்டும்.

l சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில் கள், தனிக் கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை.

l மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், 33% பணியாளர்களுடன் செயல்படும்.

தொடரும் தடை

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கான தடை கள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

l பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறு வனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் இயங்காது.

l வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை நீடிக்கும்.

l திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங் கள், கடற்கரை, சுற்றுலாத்தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சி யகங்கள், நீச்சல்குளங்கள், விளை யாட்டு அரங்குகள், பெரிய அரங்கு கள், கூட்ட அரங்குகள் போன்றவை இயங்கக் கூடாது.

l முடிதிருத்தகங்கள், அழகு நிலையங் களுக்கு அனுமதி கிடையாது.

l பொதுமக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான பொதுமக்கள் போக்குவரத்து தடை நீடிக்கிறது.

l டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா இயங்க தடை தொடர்கிறது.

l பணியாளர் விடுதிகள் தவிர பிற தங்கும் விடுதிகள், தங்கும் வசதி உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்கள் இயங்க அனுமதி இல்லை.

l இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

l திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போ துள்ள நடைமுறைகள் தொடரும்.

அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறை களைப் பின்பற்றி, மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்க வேண்டும். மே 6-ம் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்த்தொற்றின் பரவலை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய் தொற்று குறையக் குறைய, தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை அளிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட கடைகள் திறக்கலாம்கட்டுமானப் பணிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதிவிமானம், ரயில், பஸ் போக்குவரத்துக்கு தடை நீடிப்புஅமைச்சரவை கூட்டத்துக்குப்பின் முதல்வர் உத்தரவுஒரேநாளில் 231 பேருக்கு கரோனா தொற்று

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று மட்டும் 158 ஆண்கள், 72 பெண்கள் மற்றும் சென்னையில் 48 வயதான மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 231 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஏற்கெனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 194 பேர் ஆவர். புதிதாக 37 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 174 பேரும் அரியலூரில் 18 பேரும் காஞ்சிபுரத்தில் 13 பேரும் திருவள்ளூரில் 7 பேரும் செங்கல்பட்டில் 5 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த 1,341 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வந்த 76 வயது முதியவர் நேற்று இறந்துள்ளார். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், கரோனா வைரஸ் பாதிப்புடன் 1,184 பேர் சிகிச்சையில் உள்ளனர். அறிகுறிகளுடன் 2,099 பேர் கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 10,049 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 685 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிப்பு அதிகரிக்க காரணமான கோயம்பேட்டு மார்க்கெட் வைரஸ் பரவும் மையமாக மாறியுள்ளது. இங்கு வியாபாரிகள், தொழிலாளிகள் மற்றும் வந்து சென்ற பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், திருவான்மியூர் மற்றும் வடபழனி மார்க்கெட்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று ஒரேநாளில் 20-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் - அரசு ஆலோசனை

பள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை.

அடுத்த கல்வி ஆண்டில் தான், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. அதுவரை, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு பணிகள் இல்லை. அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் பட்டதாரி மற்றும் மேல்நிலை வகுப்பு நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளன. மற்ற ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், புதிய கல்வி ஆண்டு வரை பணிகள் இல்லை. இந்நிலையில், மார்ச்சில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, இந்த கல்வி ஆண்டு முடியும் காலமான, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, கல்வி அலுவலகங்களுக்கு கடிதங்கள் வந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் போது, ஓய்வு காலத்தை கடந்தாலும், அந்த கல்வி ஆண்டு முடியும் மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பள்ளி, கல்லுாரிகள் செயல்படாததால், பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்ற முடிவுக்கு, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வித்துறை வந்துள்ளது. எனவே, விடை திருத்த பணிகள் உள்ள ஆசிரியர்களை தவிர, தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பணி நீட்டிப்பு உத்தரவை நிறுத்தி வைக்க, மாவட்ட மற்றும் மண்டல அலுவலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பணி நீட்டிப்பு வழங்காவிட்டால், மே மாத சம்பளம் வழங்கப்படாது; ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என, அரசுக்கு சில அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரை - யு.ஜி.சி., நிராகரிப்பு.

கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., நிராகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தாமதமாகியுள்ள பல்கலை, கல்லுாரி தேர்வுகள், புதிய மாணவர் சேர்க்கை குறித்து ஆராய, ஹரியானா மத்திய பல்கலையின் துணைவேந்தர், குகாத் தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது.இந்த குழுவினர், பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, யு.ஜி.சி.,யிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து, புதிய கல்வி ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை, யு.ஜி.சி., நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.அதில், பிளஸ் 2 முடித்தோருக்கு நுழைவு தேர்வு நடத்தி, இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது.இந்த பரிந்துரையை நிராகரித்த, யு.ஜி.சி., 'முந்தைய ஆண்டுகளை போல், இளநிலை பட்ட படிப்பில் மாணவர்களை சேர்க்கலாம்' என, அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்த பரிந்துரையை, இதுவரை செயல்படுத்த முடியவில்லை.
Read More News - Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.