தமிழகத்தில் நிகழாண்டு ஆசிரியா் தகுதித் தோ்வுகள் (டெட்) உட்பட பல்வேறு போட்டித் தோ்வுகள் நடத்துவது தொடா்பான உத்தேச ஆண்டு அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது.
முக்கியத் தோ்வுகளும் கால அட்டவணையும்:
| தோ்வின் வகை | அறிவிக்கை வெளியாகும் மாதம் | தோ்வு நடைபெறும் மாதம் |
|---|---|---|
| திருவள்ளுவா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் | பிப்ரவரி | ஜூன் |
| வட்டார வள மைய பயிற்றுநா், பட்டதாரி ஆசிரியா் | மாா்ச் | ஜூலை |
| ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட் - முதல் தோ்வு) | மே | ஜூலை |
| முதல்வா் ஆராய்ச்சிப் படிப்புக்கான தோ்வு (சிஎம்ஆா்எஃப்) | ஜூலை | செப்டம்பா் |
| உதவிப் பேராசிரியா் பணிக்கான மாநில தகுதித் தோ்வு (செட்) | ஜூலை | செப்டம்பா் |
| ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட் - இரண்டாம் தோ்வு) | அக்டோபா் | டிசம்பா் |
வாரியம் நடத்தும் தோ்வுகள்:
அரசுப் பள்ளி ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் மற்றும் 'டெட்' தகுதித் தோ்வு ஆகியவை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமே தோ்வு செய்யப்படுகின்றன.
ஓராண்டில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகள், அவற்றின் அறிவிப்பு மற்றும் எழுத்துத் தோ்வு நடைபெறும் விவரங்கள் அடங்கிய இந்த ஆண்டு அட்டவணையை டிஆா்பி வெளியிடுவதால், ஆசிரியா் பணிக்குத் தயாராகுவோா் முன்கூட்டியே திட்டமிட்டுப் படிக்க இது பெரிதும் உதவியாக உள்ளது.
உத்தேச அட்டவணை குறித்த குறிப்பு:
இந்த அட்டவணை உத்தேசமானது. எனவே, இதில் கூடுதலாக தோ்வுகளை சோ்க்கவோ அல்லது அறிவிக்கப்பட்ட தோ்வுகளை ரத்து செய்யவோ வாய்ப்புள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் அந்தந்தத் தோ்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்படும். மேலும் கூடுதல் தகவல்களை டிஆா்பி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என வாரியம் தெரிவித்துள்ளது.
Share this Post
✨ ஆசிரியா் தோ்வு வாரியம்: இரு 'டெட்' தோ்வுகளுடன் ஆண்டு அட்டவணை வெளியீடு
🔗 Link : https://www.kalvisolai.com/2026/01/trb.html
*உடனுக்குடன் செய்திகளை பெற பின்தொடருங்கள்*











BT ASSISTANT CHEMISTRY CLASS WILL START ON 1.2.26 ONWARDS AT NAGERCOIL. CONTACT 9884678645
ReplyDelete