உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

பெண் சிசுவை காப்போம் - அனிமேஷன் வீடியோ

பெண் சிசுவை காப்போம் - அனிமேஷன் வீடியோ
இயக்கம் : திருமதி மேனகாநரேஷ்
3D MAYA ARTIST


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TEACHERS PROMOTION COUNSELLING DATES - 2010

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அறிவிப்பு :
பள்ளிக் கல்வித் துறையில் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கான கவுன்சிலிங், வரும் 2ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்
 ௦ ஜூலை 2ம் தேதி காலை,
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
(முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
.............................................................
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்
ஜூலை 5ம் தேதி காலை,
( பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
 
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
(முதுகலை ஆசிரியர்கள்,  பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
..................................................................
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்
ஜூலை 7ம் தேதி காலை,
சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி
................................................................
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்
ஜூலை 7ம் தேதி காலை,
கோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
(   பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
....................................................................
பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) பதவி உயர்வு கவுன்சிலிங்
ஜூலை 12ம் தேதி காலை,
கோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
( இடைநிலை  ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
...........................................................................
பட்டதாரி ஆசிரியர் (மற்ற பாடங்கள்) பதவி உயர்வு கவுன்சிலிங்
ஜூலை 12ம் தேதி பிற்பகல்
கோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
...............................................................................
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர்.

ஜூலை 9ம் தேதி காலை
சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
தலைமை ஆசிரியர்கள் 1,000 பேர், இதர பிரிவுகளில் 2,000 ஆசிரியர்கள் என, மொத்தம் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. பணி மாறுதல் கவுன்சிலிங்: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர். என, பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை : செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி


கோவை : "தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்; தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்; மத்திய ஆட்சிமொழியாக தமிழை உடனடியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

கோவையில் கடந்த 23ம் தேதி துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுஇன்று நிறைவடைந்து. நிறைவு நாள் விழாவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். "நிறைவு நாள் விழாவில், தமிழுக்காக சில அறிவிப்புகள் வெளியிடப்படும்; அவை இன்னொரு பட்ஜெட் போல் இருக்கும்' என, ஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார். அதைப்போலவே, சில அறிவிப்புகளை வெளியிட்டதுடன், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இம்மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். நான் பக்கத்திலே நிதி அமைச்சர் இருக்கிறார் என்ற தைரியத்தில் அவர் சொன்னதை செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். முன்கூட்டிய நான் அவைகளை பேச்சோடு பேச்சாக இரண்டுநாளைக்கு முன் அறிவித்தது போன்று நிதிநிலை அறிக்கை போல் தயாரித்துள்ளேன். நிதிநிலை அறிக்கை போல என்றுதான் சொன்னேன் பயந்து விட வேண்டியது இல்லை. அதற்கான நிதி உதவியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். வலதுபுறத்தில் பிரணாப்பும், இடதுபுறத்தில் சிதம்பரமும் இருக்கும் போது நிதியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. ஐந்து நாட்களாக கோவையில் எழுச்சியுடன் நடந்த மாநாடு நிறைவு விழா காண்கிறது. ஐந்து நாட்களும் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தமிழ் என்றே இருந்தது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி. உலகமொழியாகத் திகழும் ஆங்கில மொழியில் முதல் எழுத்து வடிவம் கி.பி.,7ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஜெர்மன் முதல் வடிவம் கி.பி. 8ம் நூற்றாண்டு; பிரெஞ்சு 9ம் நூற்றாண்டு; ரஷ்யாவின் பழமையான எழுத்து வடிவம் கி.பி.,10 நூற்றாண்டு; லத்தீனில் இருந்து பிறந்த இத்தாலி மொழி 10ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது. ஆனால், கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழின் முதல் எழுத்து வடிவ தொல்காப்பியம் கிடைத்துள்ளது. அதுமுதல் இன்று வரை சாமானியர் முதல் ஆன்றோர் சான்றோர் வரை வாழும் மொழியாகவும்,வரலாற்று மொழியாகவும் உள்ளது. காதல், வீரம் இரண்டும் தமிழர்களின் இரு முக்கிய உணர்வுகள்.அதனை சங்கப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. "குழந்தைப் பருவத்தில் தனது தாயாருடன் மணலில் அழுத்திய விதை முளைத்து புன்னை மரமாக எனக்கு முன் தோன்றியதால்,இம்மரம் என் அக்கா ஆகும் என் அன்னை சொன்னார். அக்காள் முன் உன்னோடு காதல் மொழி பேச கூசுகிறது வேறிடம் சொல்வோம் காதலனே என்றாள், மங்கை ஒருத்தி சங்க இலக்கியத்தில். இதனை "விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி' என்ற நற்றிணைப்பாடல் கூறுகிறது.

ஒரு குழந்தை இறந்தால் கூட விழுப்புண் படாமல் இறந்து விட்டதே என வருந்தி வளாõல் பிளந்து புதைத்த வீரத்தை "குழவி இறப்பினும் ஊண்தடி பிறப்பினும்' என்ற புறநானூற்று பாடல் கூறுகிறது. "பிறப்பொக்கும்' என வள்ளுவ மொழிப்படி சமதர்ம சமுதாயத்தை தமிழர்கள் பின்பற்றினர்.

கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே ரோமானியர்கள் தமிழர்களோடு வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். பொள்ளாச்சி, வெள்ளகோவில் உள்ளிட்ட கொங்கின் பல்வேறு பகுதிகளிலும் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தே ரோமர்கள் கொங்குநாட்டுடன் வாணிபத்த் தொடர்புகொண்டிருந்தனர். ஜாவா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் கடல்வழி வாணிபம் மேற்கொண்டுள்ளனர். தொன்மையால், இலக்கண இலக்கியங்கள் வாயிலாக அறநெறி, வாழ்வியல் நெறிமுறைகளைக் கொண்டுள்ளது செம்மொழியான தமிழ் மொழி. தமிழ் வளர்க்க பாடுபட்டவர்களை இந்த நேரத்தில் நினைவுர வேண்டும். ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், போப், செம்மொழி என நிறுவிய பரிதிமாற்கலைஞர், சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளை அச்சுவடிவம் பெறச்செய்த உ.வேச.சா., சி.வை., தாமோதரம் பிள்ளை, 20ம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதியார், பாரதிதாசன், இலங்கை தனிநாயகம் அடகள், வ.ஐ.., சுப்பிரமணியம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்ற அனைத்து சான்றோர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். செம்மொழித் தமிழை எதிர்காலத்தில் அறிவியல் தமிழாக கட்டிக் காப்போம் என உறுதி ஏற்போம்.

செம்மொழி மாநாடு தொடர்பான கலந்தாய்வில் சிவத்தம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நான் கூறியது போன்று சில அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

அறிவிப்புகள்:

* தமிழகத்தில் ஐந்து இடங்களில் மரபணு பூங்கா நிறுவப்படும். அதற்கு எம்.எஸ்., சாமிநாதன் பொறுப்பாளராக இருப்பார்.

* இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சரியான அரசியல் தீர்வு காணப்படவில்லை. சிங்கள அரசால் தரப்பட்ட உறுதிவார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை தருகிறது. தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதற்கான முனைப்புகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்மாநாடு வலியுறுத்துகிறது.

* மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுமேயானால், செம்மொழியான தமிழ் மொழியை முதல்கட்டமாக உடனடியாகஅறிவிக்க வேண்டும், என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

* சென்னை ஐகோர்ட்டில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேண்டும் என, 2006ம் ஆண்டு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை தாமதிக்காமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

* சமஸ்கிருத ஆய்வுகளுக்கு வழங்குவது போன்று, தமிழ் ஆய்வுக்கும் தேவையான மானியத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

* இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே, இந்திய அரசு அமைக்க உள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

* கடலால் அழிந்த பூம்புகார், குமரிக்கண்டம் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு திட்டமிட வேண்டும்.

* தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது முழுமையாக நிறைவேற்றப்பட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

* தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு "கணியன் பூங்குன்றனார்' விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். முதல்கட்டமாக விழா மேடையில் விருது வழங்கப்படுகிறது.

* பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.

* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைகிறது. அதன் செயலாக்கங்கள் பின்வருமாறு அமையும்.

* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.

* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.

* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.

* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.

* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.

* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது

* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.

* கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக காந்திபுரத்தில் ஒரு கி.மீ.,நீளத்துக்கு100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.

* தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்கப்படும்.

* அறிவியல் தமிழை மேம்படுத்த கம்ப்யூட்டர், மருத்துவம் போன்ற துறைகளில் பிறமொழி நூல்களை தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் வளர்ச்சிக்கு தனியாக 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இவற்றுக்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் கருணாநிதி பேசினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி : ஐந்து நாளில் 10 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழுக்கு மத்திய அரசு செம்மொழி அங்கீகாரம் வழங்கிய பிறகு நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி பெறுமா? உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஆதரவு கிடைக்குமா? என்ற கேள்விகள் மாநாடு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து துளைத்தெடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், உலகத்தமிழச் செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் குவிந்த தமிழர் ஆர்வலர்களின் கூட்டம் சர்ச்சைகளை தகர்த்தெரிந்து மாநாட்டை மகத்தான வெற்றி பெற வைத்துள்ளது.

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு கடந்த செப்டம்பரில் வெளியானது. அக். 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி, ஆய்வரங்க அமைப்பு குழுக்களை அமைக்கவும் உத்தரவிட்டார். ஜனவரி- 2010ல் மாநாடு நடக்கும் என்று அறிவிப்பு வெளியானதும், மாநாடு வேலைகளை வேகப்படுத்தி நிறைவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டுக்கான அடிப்படை வேலைகளை செய்யக்கூட காலஅவகாசம் இல்லாததால், மாநாடு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது. கோவையில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, அவிநாசி ரோட்டிலுள்ள கொடிசியா அரங்கில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு நவ. 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், இணைய மாநாட்டையும் உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து நடத்த நவ. 12ம் தேதி அறிவிப்பு வெளியானது.

மாநாட்டை ஒட்டி மொத்தம் 21 குழுக்கள் அமைக்கப்பட்டது. மாநாட்டு தலைமைக்குழு, ஆலோசனைக்குழு, சிறப்பு மலர்க்குழு, ஆய்வரங்க அமைப்பு, தமிழ் இணைய மாநாடு, ஒருங்கிணைப்பு, வரவேற்பு, ஊர்வலம், பொது அரங்க நிகழ்ச்சி அமைப்பு, விருந்தோம்பல், கண்காட்சி, கலைநிகழ்ச்சி மற்றும் சுற்றுலா, தங்கும் இடவசதி, மாநாட்டு அரங்கம் அமைப்பு, மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரம், கோவை நகர மேம்பாடு, மருத்துவம் மற்றும் சுகாதாரம், மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வை, போக்குவரத்து ஏற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்பு பணி, ஆய்வரங்க அமைப்பு உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவுக்கும் அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சியினர், அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மாநாட்டுக்காக 380 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கோவை மாவட்டம் மேம்படுத்தப்பட்டது. அந்த நிதியில், கோவை நகரில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்படுத்தப்பட்டது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் கோவையில் முகாமிட்டு மாநாடு வேலைகளில் கவனம் செலுத்தினர். மாநாடு தேதி நெருக்கிக்கொண்டிருந்த நிலையில், மாநாட்டை ஒட்டி துவங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும், அடிப்படை வசதிகளும் நிறைவு செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி பணிகளை நிறைவு செய்தனர்.

பல தடைகளையும் தாண்டி உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி துவங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கு பொதுமக்கள், விஐபி, ஊடகம், விருந்தினர்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில், மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர், சுகாதார வசதிகளையும் கவனித்தனர். இதனால், மாநாட்டிற்கு ஐந்து நாட்களும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக இருந்தது. கோவையில் மாநாடு துவக்க நாளில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். முதல் நாளில் கட்சியினர் அழைத்து வந்த "கரைவேஷ்டி' கூட்டமாக இருக்கும்; அடுத்தடுத்த நாட்களில் தான், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக வருவோரை கணக்கிட முடியும் என்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் காத்திருந்தனர். எல்லோர் கருத்தையும் தகர்த்தெரியும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டம் மாநாட்டை ஆக்கிரமித்தது.
காலை 9.00 மணி முதல் குடும்பமாக வந்த பொதுமக்கள் பொது அரங்கத்தில் அமர்ந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசித்தனர். மொழி ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களுக்கு கொடிசியா உள்ளரங்கத்தில் தனியாக அரங்குகள் அமைத்து ஆய்வு கட்டுகரைகளை சமர்ப்பித்தனர். இணைய மாநாடு, தொல்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பொதுமக்கள் நாள் முழுவதும் பார்த்து ரசித்தனர். தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் செவிக்கு உணவு கிடைத்ததை போன்று, மக்கள் பசியாறுவதற்கு மானிய விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டது. கண்காட்சியை காண பொதுமக்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளதால், வரும் 4ம் தேதி வரையிலும் கண்காட்சியை நீட்டிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். செம்மொழி மாநாடு முடிந்ததும், இனியவை நாற்பது அலங்கார ஊர்வலத்தில் அணிவகுத்து ஊர்திகளை கொடிசியா வளாகத்தில் மக்களின் பார்வைக்கு நிறுத்தி வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதார். மாநாடு முடிந்ததும் போலீஸ் கெடுபிடிகள் இல்லாமல் பொதுமக்கள் சிற்பங்களையும், கைவினைப்பொருட்களையும், இனியவை நாற்பது அலங்கார ஊர்திகளையும் பார்த்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பொது அரங்கத்தில் 50 ஆயிரம் பேர் அமர்வதற்கு இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. இருக்கை கிடைக்காமல் பொதுமக்கள் மாநாட்டு நிகழ்வுகளை நகர்ந்தவாறு பார்த்து ரசித்தனர். தினமும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்றனர். கடந்த ஐந்து நாட்களில் 10 லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் உணர்வுகளை பெற்றுச் சென்றுள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.

மாநாட்டில் நடந்தது என்ன: முதல் நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் "திராவிட மொழிகளில் தொன்மையான தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழின் பழமை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் எளிமையாக்கப்பட்டு, கணினி தமிழ் வளர வேண்டும்' என்பதை வலியுறுத்தினார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "என்னால் முடிந்ததை தமிழுக்கு செய்து கொண்டுள்ளேன். தமிழுக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் உத்தரவிடுங்கள். அந்த உத்தரவை நிறைவேற்ற காத்திருக்கிறேன்' என்று அறிவித்தார். மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கருத்து கூறி வருகின்றனர். மாநாட்டு நிறைவு நாளில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். அது இன்னொரு "பட்ஜெட்' ஆக இருக்கும்' என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கருத்தரங்குகளில் பேசிய தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், "தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் தமிழ் சென்றடைய வேண்டும். அதற்காக தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், தமிழையும் பாதுகாக்க தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும். இணைய தளத்தில் தமிழ் மொழிக்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் அறிஞர்கள் மாநாட்டை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்' என்று வலியுத்தினர். ஆய்வரங்கத்தில் 198 அமர்வுகளில் 787 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் வரலாறு, சிறப்புகள், மொழி பெயர்ப்புகள், இணைய தளத்தில் தமிழின் வளர்ச்சிகள், தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். செம்மொழி மாநாட்டில் தமிழனின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் புராணங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் தினமும் அரங்கேறின. செம்மொழி மாநாட்டிற்கு ஏராளமான தடைகள் வந்த போதும், தமிழக முதல்வர் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தார். ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வரங்கம் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டு, கண்காட்சி மூலம் மக்களிடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ள நிலையில் இந்த மாநாட்டால் தமிழின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

தினமலரின் பங்கு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தினமலர் நாளிதழ் பங்கு இன்றியமையாததாக இருந்தது. மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் "தினமலர் இணையதளத்தில்' வெளியிட்டு உலகத்தமிழர்கள் மாநாட்டை நேரில் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அறிஞர்கள் பேட்டி, கருத்துக்கள், கட்டுரைகள், கவியரங்கம், கருத்தரங்கம், விவாதங்களை உடனுக்குடன் தினமலர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், தினமலர் நாளிதழில் தினமும் சிறப்பு மலர் வெளியிட்டது. இணைய மாநாட்டில் தினமலர் இணைதள அரங்கில், மாநாட்டு நிகழ்வுகளை இலவச பிரதியாக அச்சிட்டு கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. தானியங்கி இயந்திரத்தின் மூலம் தினமலர் நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டது. போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்களுக்காக வலைதள வசதியுடன் கணினிகள் அமைக்கப்பட்டு, இலவச பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.

தினமலர் இணைய தள அரங்குக்கு வந்த முதல்வர், துணை முதல்வர், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், வெளிநாட்டு தமிழர்கள், தமிழ் அறிஞர்களுக்கு தினமலர் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கடல்தாமரை புத்தகம் இலவமாக வழங்கப்பட்டது. அரங்கை பார்வையிட்ட துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தினமலரின் தமிழ்ச் சேவையை பாராட்டினர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே : சாலமன் பாப்பையா தீர்ப்பு

தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே உள்ளது என சாலமன் பாப்பையா தீர்ப்பளித்தார். கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இன்று மாலை பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித்திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இப்பட்டிமன்றத்தில் வாகை சந்திரசேகர், திண்டுக்கல் ஐ. லியோனி, நடிகர் எஸ்.வி. சேகர், திருப்பூர் கிருஷ்ணன், நக்கீரன் ஆர். கோபால் ஆகியோர் தத்தம் அணிகள் சார்பாக பேசினர். இறுதியில் பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, சாதாரண மக்களுக்கு எட்டாத கனியாக இருந்த தமிழ் இலக்கியத்தை நாடகத்துறையின் வாயிலாக பாமர மக்களும் அறியும் வண்ணம் கொண்டு சென்றது வெள்ளித்திரையே என்று குறிப்பிட்டார். தமிழ் இலக்கியங்களை வசனங்களாகவும், பாடல்களாகவும் சாதாரண மக்களுக்கு கொண்டு சென்றதில் வெள்ளித்திரைக்கு பெரும் பங்கு உண்டு என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்திலுள்ள பல மொழி வழக்குகளை அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியதிலும் வெள்ளித்திரையின் பங்கு அபாரமானது என்று தெரிவித்த அவர், ஆனால் தற்போது வெள்ளித்திரையில் தமிழ் பண்பாடு குறைந்து வெளிநாட்டு பண்பாடே அதிகம் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். அதனால் தற்போது வெள்ளித்திரை தற்போது வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சின்னத்திரை குறித்து அவர் குறிப்பிடுகையில், சின்னத்திரையில் தற்போது, உடற்பயிற்சி, அறஇலக்கியம், பக்தி இலக்கியம், சட்டம், கவி அரங்கம், சமையல் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், அதே போல் படத்திருட்டும் இருப்பதாக குறிப்பிட்டார். இவ்விஷயம் காரணமாக வெள்ளித்திரையை விட சற்றே மேம்பட்டது சின்னத்திரை என்று அவர் குறிப்பிட்டார். பின் அச்சுத்துறை குறித்து அவர் பேசுகையில், இன்று நாம் செம்மொழிக்கு விழா நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்றதற்கு காரணம், நாம் தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து அவைத்திருப்பதே காரணம் என்று தெரிவித்தார். அவ்வாறு பாதுகாத்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், செம்மொழி பற்றி பேசிக்கொண்டு மட்டுமே இருந்திருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.மேலும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை குறித்து விமர்சனம் தரும் தகுதி அச்சுத்துறைக்கே உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் ஜனநாயகத்தின் 4வது தூணாகவும் அச்சுத்துறை உள்ளதாக தெரிவித்த அவர், தற்போது அச்சுத்துறை இணையதளம் என்று வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது, தமிழை வளர்க்கும் பெரும் மற்ற இரண்டு துறைகளை விட அச்சுத்துறைக்கே உள்ளது என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா தீர்ப்பு வழங்கினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி? மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு

தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாக இம்மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். கோவையில் நடைபெறுகின்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமென தமிழர்கள் வந்துள்ளனர். கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதை பெருமையாகக் கருதுகிறேன். இதுவரை, "உலகத் தமிழ் மாநாடு' என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடந்துள்ளன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்போது நடக்கும் மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை, "உலகத் தமிழ் மாநாடுகள்'. இப்போது நடைபெறுவது, "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு'. உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில், உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை. தமிழ் உலகமொழி மட்டுமல்ல; உலகமொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், "ஞால முதல்மொழி தமிழே' என்று, நிறுவிக் காட்டியிருக்கிறார்.

மூலத் தாய்மொழிச் சொற்கள் உலகமொழிகளில் சொல்வடிவில் உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உலகமொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப்பெயர்கள்; நான், நீ, அவன் எனும் மூவிடப்பெயர்கள். நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கை பெயர்கள் போன்றவை, தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால், தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது. உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலை தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என, அறியலாம். கி.மு. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் சாலமனுக்கு, தமிழக கப்பல்கள் மயில் தோகையையும், யானை தந்தங்களையும், வாசனைப் பொருட்களையும் கொண்டு சென்றன. வடமொழியில், வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை, ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார். இதிலிருந்து, வடமொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை, அறியலாம். வால்மீகி ராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட முவேந்தர்களை பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது, லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக்கருதப்படுகிறது. கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மவுரியரின் அமைச்சரான சாணக்கியர், தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலை பற்றி குறிப்பிடுகின்றார். கி.மு. 350ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞர் காத்தியனார் சேர, சோழ, பாண்டியர்களை பற்றி குறிப்பிடுகிறார்.

பாரதப்போர் பற்றிய குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன் 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது, இரு பக்க படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன் - சேரன் பெருஞ்சோற்றுதியன், சேரலாதன் என்று அழைக்கப்பட்டார். பாரதப்போர் நடைபெற்ற காலம் கி.மு. 1500 எனப்படுகிறது. அப்படியானால், இந்த சேரனின் காலம் கி.மு. 1500 ஆக இருக்க வேண்டும். இவையனைத்தும் தமிழ் இனம், தமிழ் மொழியின் தொன்மையையும் புலப்படுத்துகின்றன. பேரறிஞர்களான ஜான்மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்ட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர், "திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள்' எனவும், அவர்களின் மொழி திராவிட மொழி தான் எனவும் உறுதிப்படுத்துகின்றனர். "சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிடப் பண்பாடு; திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்துவெளிக் குறியீடுகளை பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்' என்று, கடந்த 40 ஆண்டுகளாக சிந்துவெளி பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார். இன்று, "கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' பெறும் பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா, "சிந்துவெளி பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை' என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன் வைத்து, அத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிந்துவெளியினர் திராவிடமொழி பேசுபவர்களே, என்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் அவர் விரிவாக கூறியிருக்கிறார். அகநானூறு, புறநானூறு போன்ற கடைச்சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்கு கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்கள் தரை, கடல் வழியாக பயணம் செய்து உஜ்ஜயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்திய தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்றும் வாணிகம் செய்தார்கள். தமிழக வாணிகர், அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகம் செய்தார்கள். அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளை பேசிய மக்கள் தங்கியிருந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழ்நாட்டுக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேர நாட்டின் முசிறித்துறைமுகத்துக்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகள் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாயிற்று. அதன் தொன்மை, தனித்தன்மை, முதன்மைச் சிறப்பினால் தமிழ், உலக முதல் தாய்மொழியாக, உலகத்தமிழாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மொழி, செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத் தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர் சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும். இந்த பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

தமிழ், செம்மொழியே என, முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர். தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல். அயர்லாந்து நாட்டில் "ஷெப்பர்ட்ஸ் காலனி' என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார். தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னை பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலை கழகங்களும் குரல் கொடுத்தன. தவிர, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், வா.செ. குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார்சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர். எனினும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்த குரல், காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய், கவனிப்பாரற்றுப் போயிற்று. ஆனால், சோனியாவின் வழிகாட்டுதலிலும், பிரதமர் மன்மோகன்சிங்கின் தலைமையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த பின்னர்தான், தமிழைச் செம்மொழியென பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடந்த 2004, அக்.,12ல் தமிழ் செம்மொழி பிரகடன அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

ஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல், குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்கு பிறகு, நடைபெறுகிற முதல் மாநாடு இது. இதனால்தான் தமிழின் பெயரால், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில், இந்த மாநாடு கோவை மாநகரில் நடைபெறுகிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ்மொழியை, எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்கவும்; இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும்; சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல்லூர் கொடுங்கல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிகளின் அடிப்படையில், மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அதன் காரணமாகவே, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படுகிறது. இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஊக்கம் தரும் தாய்மொழி

சந்திரயான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்த போது: தாய்மொழியில் கல்வி கற்றவர்கள் சர்வதேச அளவில் சாதனை புரிய முடியும். அதே சமயம், நாம் நமக்குக் கிடைத்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடின உழைப்புக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
தமிழக இளைஞர்கள் கடின உழைப்புக்கு சளைக்காதவர்கள். அவர்கள் கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறவர்கள். வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் நான் பணிபுரிகிறேன். தாய்மொழியில் கல்வி கற்றவர்களிடம் உள்ள திறமை என்னை வியக்க வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்

"யாரை அழைத்து வந்து கவியரங்கத்தை தொடங்கி வைப் பேன்...?' என்ற கவிதை வரிகளுடன் ஈரோடு தமிழன்பன், கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.


"கலைஞர் என்பது

தாயின் ஆண்பால் பெயர்.

அவர் வேட்டி கட்டுகிறார்,

ஆனால், அவர் இதயம் எப்போதும்

கசங்காத புடவையோடு தான்...

அவரது கபால களஞ்சியத்தில்

ஆண் எண்ணங்களை விட,

ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.

இல்லாவிட்டால் கோபாலபுரம் வீட்டை

கொடையாக தரமுடியுமா?

அந்த அவ்வையார் காலத்தில்

இவர் இருந்திருந்தால்,

அதியமான் ஏமாந்திருப்பான்.

அவனுடைய சங்கப்பாடலுக்கு எல்லாம்

இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...'என, முதல்வர் மீது தமிழன்பனின் கவிமழை பொழிய, அரங்கம் அதிர கரவோசை எழுந்தது. அடுத்து, கவியரங்கத்துக்கு தலைமை வகித்த வைரமுத்து முழங்கினார். "பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள டீ கடையில் நின்றிருந்தேன்...' என துவங்கி, தமிழச்சிக்கும் தனக்கும் இடையே நடந்ததாக கற்பனை கவிதை உரையாடலை அடுக்கி, பலரையும் தன்வசம் ஈர்த்தார்.

அடுத்ததாக, கவிஞர் விவேகா பேசினார். எதுகை மோனையில் முதல்வரை புகழ்ந்துபாடிய இவர்...

"சென்னைக்கு தெற்கே உள்ள

திருக்குவளையின் தான்,

தமிழுக்கு கிழக்கு பிறந்தது...'

எனத் துவங்கி, முதல்வர் கருணாநிதியை ராஜதந்திரி, முந்திரி, பாதிரி, ஒரு மாதிரி என அடுக்கிக்கொண்டே போனார். இவரது பேச்சின் போது, அரங்கில் இருந்தோரில் பலரும் நெளிந்தனர். காரணம், இவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு, "சமத்துவம் பூக்க... கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்பது; ஆனால், தலைப்புக்கு பெரும்பாலும் தொடர்பில்லாமலே இறுதிவரை நேரத்தை கரைத்து முடித்தார்.

அடுத்து "ஆதிக்கம்...' என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் கருணாநிதி, முதல்வரை பார்த்து... "அய்யா, நீங்கள் நடந்து வரும் போது இருவர் மீது கைவைத்து வருகிறீர்கள். இதற்கு காரணம், அகவையல்ல (வயது); தம்பிகளின் இதயங்களையெல்லாம் உங்கள் இதயத்தில் சுமப்பதினால் பாதம் தாங்காமல், இருவர் தோள் மீது கைவைத்து வருகிறீர்கள்...' என்றார். மேலும், "தமிழர்களே... பொங்கலுக்கு கரும்பை வைத்து கும்பிடுகிறீர்கள் இனிமேல், தலைவர் தலைவைத்து படுத்த இரும்புத் தண்டவாளத்தையும் கும்பிடுங்கள்...' என்றார். அடுத்து, "பகுத்தறிவு தழைக்க...' என்ற தலைப்பில் நா. முத்துக்குமார் பேசினார்.
"சமதர்மம்...' என்ற தலைப்பில் கயல்விழியை பேச அழைத்த வைரமுத்து, "கலைஞர் வீட்டுச் சொத்து' என வர்ணித்தார். மேலும், "யாருக்கு கிட்டும் இந்த வாய்ப்பு? தாத்தா தலையாட்ட, பாட்டி தாலாட்ட, அம்மா பாராட்ட, சித்தப்பா சீராட்ட... பாடவா பெண்ணே' என்றழைத்தார்; பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரவொலி.

"அடையாளம் மீட்க...' என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா கவிதை வாசிக்கையில், செம்மொழி மாநாடு முன்னிட்டு கோவையில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளை பாராட்டி, புகழ்ந்தார்.

"எத்தனை வேகமாய் எல்லாம் நடந்தது?

மண்ணெடுத்தார் மாலையிலே

தார் தெளித்தார் இரவினிலே

காலையில் கண் விழுத்து பார்க்கையிலே

கண்ணாடி போல மின்னியது சாலை.

சருக்கிவிட்ட பள்ளங்கள் சமச்சீராய் ஆனது

வழுக்கிவிட்ட சாலையிலே வாகனங்கள் போகிறது

வெறிச்சோடி கிடந்த வீதி சந்துகளும்

குளித்து தலைமுழுகி கலகலப்பாக

இருக்கிறது.

துணைமுதல்வர் வந்து வந்து

தூண்டிவிட்ட காரணத்தால்

இணையில்லா வெளிச்சத்தில்

ஜொலிக்கிறது எங்கள் கோவை...' என்றார்.

கொங்கு தமிழில், பொங்கிய இவரது கவிதையை கேட்டு அரங்கமே கரவோசையில் ஆழ்ந்தது. அடுத்து, "தன்மானம் காக்க...' என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா, "தாய்த்தமிழ் வளர்க்க...' என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கவிதை வாசித்தனர். மூன்றரை மணி நேரம் முழங்கிய கவியிடி முழக்கத்தை, முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் ரசித்து கேட்டனர். மாநாட்டு பந்தலுக்குள் இருந்தாலும் கவிதை மழையில் நனைந்த பல ஆயிரம் பேர், வெயிலில் உலர்ந்து திரும்ப சிறிது இடைவேளை கிடைத்ததாக கருதி, பட்டிமன்றம் துவங்கிய நேரத்தில் பரபரப்பாக வெளியேறினர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழுடன் கொரிய மொழிக்கு தொடர்பு : தென்கொரியா விஞ்ஞானி பெருமிதம்

செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்க கோவை வந்துள்ள, தென்கொரியாவைச் சேர்ந்த எண்ணெய் ஆய்வு திட்ட விஞ்ஞானி நாராயணன் கண்ணன் "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி: எனது சொந்த ஊர் மதுரை, திருப்புவனம். ஏழு ஆண்டுகளுக்கு முன் தென்கொரியா சென்று, அங்கு எண்ணெய் ஆய்வுத் திட்ட விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். கடுமையான பணி நெருக்கடிக்கு மத்தியிலும், தமிழின் மீதான தீராத காதல் கொண்டிருக்கிறேன். தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து,"தமிழ் மரபு அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். "தமிழில் மின் இலக்க வடிவ முறை (டிஜிட்டல்)' குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க, தமிழ் மாநாட்டுக்கு வந்துள்ளேன். உலகத்தமிழர் ஒன்றிணையும் இந்த மாநாட்டில் பங்கேற்பதை மிகப்பெருமையாக கருதுகிறேன். உலகம் போற்றும் தமிழ் இலக்கியங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளிலுள்ள அனைத்து தகவல்களையும் இணையதளத்துக்கு மாற்ற வேண்டும், என்பது எனது விருப்பம். தென்கொரிய மக்களின் "ஹங்குல்' மொழிக்கும், தமிழுக்கும் எழுத்து வடிவ தொடர்பு உண்டு.

ஆரம்ப காலத்திலிருந்து சீன மொழி பேசி வந்த கொரிய மக்கள், 16ம் நூற்றாண்டு முதல் "ஹங்குல்' எழுத்துவடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றனர். அதன்பின், கொரிய மக்களின் பொருளாதார முன்னேற்றம் வேகமெடுத்தது; தற்போது, கொரிய மக்களில் 99 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்று திகழ்கின்றனர். இதன் காரணமாக, உலகப் பொருளாதார வளர்ச்சியில் கொரியா, 19வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததே, எழுத்து சீர்திருத்தம் தான். "ஹங்குல்' எழுத்து முறை வந்த பிறகே, அந்நாட்டினர் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். மொழியை முன்னிறுத்தியே எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு, கொரியா சாட்சி. எனவே, மொழிப்பற்றை ஒவ்வொரு தமிழரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, நாராயணன் கண்ணன் தெரிவித்தார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்ச் சங்க இலக்கியங்கள் "பெரிசுகளின் மொழியா?' : மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் கவலை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கம், தமிழுணர்வு பொங்க நேற்று காலை துவங்கியது. பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை வாசிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் கொடிசியா தொழிற்காட்சி வளாக பல்வேறு அரங்குகளில் சங்கமித்திருந்தனர். மலேசியாவில் இருந்து, "மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்' சார்பில் 250 பேர் வந்திருந்தனர்; இவர்களில் 34 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர்.
இக்குழுவினரை கோவைக்கு அழைத்து வந்திருந்த, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள, மலேசியாவில் ஆறு மாதத்துக்கு முன்பே செம்மொழி அலுவலகத்தை திறந்தோம். உலகம் தழுவிய தமிழறிஞர்களை ஒரே வளாகத்தில் கண்டு தமிழுறவாட வேண்டும், என்ற ஆவலில் கோவை வந்துள்ளோம்; மாநாடு முடியும் வரை தங்கி அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளோம். பதினான்கு மாநிலங்களை கொண்ட மலேசியாவின் மக்கள்தொகை 2.5 கோடி; இதில், 23 லட்சம் பேர் தமிழர். மலேசியாவின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவீதத்தை சீனர்கள் பிடித்துள்ளனர். ஆனால், அந்நாட்டின் பொருளாதாரத்தின் 60 சதவீதம் சீனர்கள் வசமுள்ளன. தமிழர்களின் நிலை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. எனினும், நாங்கள் குடியேறிய மலேசிய நாட்டில் தமிழுணர்வுடன் இலக்கியத்தை பரப்பவும், தமிழர் குடும்பங்களிடையே நல்லதொரு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் எழுத்தாளர் சங்கம் நடத்துகிறோம்.

தற்போதைய காலச்சூழலில், நமது சங்க இலக்கியம் என்பது, "பெரிசுகளின் மொழி' என்பதாகவே தவறான கண்ணோட்டத்துடன் இளைஞர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வயதானோர் மட்டுமே தமிழிலக்கியங்கள் மீதான ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்பதை போன்ற தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே, இளைஞர்கள் மத்தியிலும் தமிழுணர்வை ஊட்ட வேண்டும். தமிழ் இலக்கியங்களின் மேன்மை குறித்து மனதில் ஆழமாக பதியச் செய்ய வேண்டும். செம்மொழியான தமிழின் ஆற்றல், தொன்மை, பெருமை, அருமை குறித்து, ஒவ்வொரு தமிழரும் தங்களது பிள்ளைக்கு எடுத்துரைக்க வேண்டும்; இதற்கான கடமை தாய், தந்தையை சாரும். இதை அரசும், சமூக அமைப்பும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இதை அடிப்படியாக கொண்டே, எமது பிள்ளைகளுக்கு தமிழின் பெருமைகளை அன்றாடம் கூறி, உணர்வூட்டி வருகிறோம். தமிழின் மீதான தீவிர பற்று காரணமாக நாங்கள் ஒவ்வொருவரும் 40 ஆயிரம் ரூபாய் வரை சொந்தமாக செலவிட்டு, இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளோம்; நிதிச்செலவு ஆனாலும், தமிழ் மாநாட்டில் பங்கேற்ற அனுபவம் இதயத்துக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. தமிழக அரசு, மிகவும் நேர்த்தியான முறையில் மிகச்சிறப்பாக இம்மாநாட்டு திட்டங்களை வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தியிருப்பதை, மலேசிய தமிழ் எழுத்தாளர்களான நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழுக்கு நிகர் தமிழே: செக் குடியரசு பேராசிரியர் பேட்டி

செக்குடியரசின் தலைநகரான பிராக் பகுதியில் வசிக்கிறேன். 75 வயதை கடந்தவன். ஆனால் 30 வயதிலிருந்தே தமிழ் மொழி மீது ஈடுபாடு அதிகம். தமிழில் ஏராளமான ஆராய்ச்சி மேற்கொண்டு உலகம் முழுக்க ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளேன். என்னுடைய பல மொழி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்தது தமிழ். ஏனென்றால் தமிழ் தனித்துவமான மொழி. தமிழுக்கு நிகர் தமிழ் தான். தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டிபோட முடியாது. உலகின் முதன்மையான தொண்மையான மொழி தமிழ். திராவிட மொழியான தமிழுக்கு மற்ற மொழிகளோடு நெருங்கிய தொடர்புண்டு. ஏனென்றால் தமிழிலிருந்து ஏராளாமான மொழிகள் பிரிந்து சென்றுள்ளது.

தமிழ் மொழிக்கும் மங்கோலிய மொழிக்கும் நிறைய தொடர்பு உண்டு. மங்கோலிய மொழியில் கால் என்பதற்கு கோல் என்று கூறுவர். தமிழ் மொழியில் பேசுவதற்குள் மங்கோலிய மொழிக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் சில வார்த்தைகளில் மட்டும் வித்தியாசங்கள் உள்ளது. அதனால் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழியாகவே மங்கோலிய மொழியை என்னுடைய ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன். தமிழில் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க கால இலக்கியங்களை கரைத்துக்குடித்து விட்டேன். அதில் எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்டாலும் என்னால் விளக்கமளிக்க முடியும். திராவிட மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் எத்தனை அந்த மொழியின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நான் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ் ஆய்வரங்கத்தில் திராவிடமொழிகளுக்கும் "அல்தாய்' மொழிக்கும் உள்ள உறவு குறித்து பேசுகிறேன். தற்போது சமஸ்கிருதத்தை முழுமையாக கற்றுவருகிறேன். முழுமையாக கற்ற பின் தமிழிற்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து பணியாற்றத்துவங்கியுள்ளேன். இவ்வாறு பேராசிரியர் ஜரோஸ்லாவ்வாசெக் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எழுத்துச் சீர்திருத்தம்: நாசா விஞ்ஞானி வலியுறுத்தல்

தமிழை இன்றைய சூழ்நிலையில் பயன்படுத்த, அதன் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். 1978லிருந்து இந்த சீர்திருத்தம் குறித்த விவாதம், தமிழ் அறிஞர்கள் மற்றும் இப்போது கம்ப்யூட்டர் அறிஞர்கள் இடையே நடந்து வருகிறது. உயிர்மெய் எழுத்துக்களை எழுதுகையில், இப்போது இணைத்து எழுதுகின்ற வழக்கத்திற்குப் பதிலாக, அனைத்து மெய்யெழுத்துக்களுக்கும் பொதுவான சார்பெழுத்துக்களை உருவாக்க வேண்டும். இதனால் அனைத்து மெய்யெழுத்துக்களும் ஒரே மாதிரியான சார்பெழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப்படும். இதன் மூலம் உயிர்மெய் எழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் தான் என்று காட்டுவது எளிதாகிவிடும். இப்போது கிரந்த எழுத்துக்களை (ஸ்,ஷ்,ஜ்) இப்படித்தான் எழுதுகிறோம். எனவே இதே முறையினைத் தமிழ் மெய்யெழுத்துக்களுக்கும் இணைத்துப் பயன்படுத்துவது பெரிய அழிவு ஒன்றும் ஏற்படாது. உடனே அரசாணை உருவாக்கி, இதனைக் கட்டாயப்படுத்த நான் சொல்லவில்லை. இப்போதிருக்கின்ற வழக்கத்தினையும், எழுத்துச் சீர்திருத்தம் சார்ந்த வழக்கத்தினையும் வைத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு இதனைக் கற்றுக் கொடுக்கலாம். பிற்காலத்தில் இதுவே, இப்போது நாம் கற்றுக் கொடுக்கிற குழந்தைகள் பிற்காலத்தில், இதனையே நிலை நிறுத்திவிடும்.

பத்திரிகைகள் இந்த எழுத்துச் சீர்திருத்தம் குறித்து இரு தரப்பு கருத்துக்களையும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு சிலர் இதனைச் சத்தமாக எதிர்க்கிறார்கள் என்பதற்காக, அதுவே சரி என்று விட்டுவிடக் கூடாது. பவணந்தி முனிவர், ஈ.வெ.ரா.பெரியார், வா.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்ததை வலியுறுத்தி உள்ளனர் என்பதனை இந்த காலக் கட்டத்தில் மனதில் கொள்ள வேண்டும்.

மலையாளத்தில் 68லேயே லெக்ஸிகனில் உகர ஊகார உயிர்மெய் எழுத்துக்களைப் பிரித்து எழுத அரசு ஆணையிட்டு நடைமுறைப்படுத்தி உள்ளனர். இதனால் மலையாளம் செத்துப் போய்விடவில்லை. மலையாள மொழி கீழே போய்விடப்போவதில்லை. எனவே இந்த சீர்திருத்தம் குறித்துச் சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ் வழியில் முதலில் ஐ.ஏ.எஸ்., ஆன பாலகிருஷ்ணன் மாநாட்டில் பங்கேற்பு

தமிழ் வழியில் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., தேர்வான முதல் சாதனையாளர் ஆர்.பாலகிருஷ்ணன், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். தினமலர் நாளிதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: இந்திய ஊர்ப்பெயர்களை, குறிப்பாக தமிழக ஊர்ப் பெயர்களை சிந்து சமவெளி உள்ளடக்கிய பாகிஸ்தான், ஈரான், ஈராக், அஜர்பைஜான், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள ஊர்ப்பெயர்களுடன் ஒப்பிட்டுள்ளேன்.

திராவிட இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையானதாகக் கூறப்படும் சங்க இலக்கியங்களிலே பதிவு செய்யப்பட்டுள்ள இடப்பெயர்கள் மற்றும் மானுடப் பெயர்களை கணிப்பொறி துணைகொண்டு ஒப்பாய்வு செய்துள்ளேன். இதுவரை அறியப்படாத பல புதிய சான்றுகளை இது வெளிக் கொண்டு வந்திருக்கிறது. சிந்து சமவெளிப்பகுதியில் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப்பெயர்கள் தற்போது, தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப்பெயர்களை அச்சு மாறாமல் அப்படியே நினைவு படுத்துகின்றன. அதுமட்டுமன்றி, வடமேற்குப் புலத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்களின், தலைநகரங்களின் பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் பெயர்களிலும் ஒற்றுமை நிலவுகிறது.

இதுமட்டுமல்லாமல், மன்னர்களின் பெயர்களையும், குறுநிலக் குடிகளையும் நினைவுறுத்தும் சிந்து வெளி இடப்பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. சங்க இலக்கிய பழமை கொண்ட ஆமூர், ஆவூர், ஐயூர், மோகூர், கள்ளூர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்களும் இப்பட்டியலில் அடங்கும். தமிழ் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளான ஊர், நாடு, இல், ஆறு, வாயில், காடு, சேரி, துறை உள்ளிட்ட ஊர்ப்பெயர்கள் பொதுவாக இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியமும், பிற சங்க இலக்கியங்களும் சுட்டிக்காட்டும் நிலப்பிரிவுகளான, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலையை நினைவுறுத்தும் ஊர்ப்பெயர்கள் சிந்துவெளிப் பகுதியில் உள்ளன.

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கிய நகரங்கள், போர்க்களங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்களான வஞ்சி, தொண்டி, உறையூர், மதுரை, கூடல், கொற்கை, அட்டவாயில், கூடகாரம், தலையாலங்கானம், கழுமலம் ஆகியன நினைவுறுத்தும் பெயர்களாக இடம்பெற்றுள்ளன. குமரி என்ற இடப்பெயர் வழங்கிய பக்ரோலி ஹரப்பா நாகரீக பகுதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. இதுவும் ஆச்சரியமே. ஒரு ஊரைவிட்டு இன்னொரு ஊருக்கு செல்வோர், தாங்கள் குடிபெயர்ந்து வந்த இடத்தின் பெயரை வைப்பது இயல்பு. மேலும், ஊர்ப்பெயர்கள் எப்போதும் மாறுவதில்லை. ஆகவே, சிந்து வெளிப்பகுதிக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஊர்ப்பெயர் தொடர்பு நன்கு விளங்குகிறது. சிந்து சமவெளியின் தமிழ்த் தொடர்புக்கு இது புதிய வெளிச்சம் தரும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொலைக்காட்சிகளில் தமிழ்மொழியின் நிலை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் படைக்கும் படைப்பாளர்கள் வாக்கியங்களை எளிதில் புந்துகொள்ளும் வகையில் பேசுவதில்லை. நிகழ்ச்சியைப் படைப்பவர்களைத் தமிழ்க்குதறிகள் என்றே சொல்லவேண்டும். எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சியில், "அழகான பாடலைக் கேட்டீங்க இனி அழகான விஷயங்களைப் பார்க்கப் போறீங்க' என்று தரும் விளக்கம் மொழிச் சிதைவுக்கும், பொருள் மயக்கத்திற்கும் வித்திடுகிறது. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் "நகைச்சுவைக்கான முழு அங்கீகாரம், சிப்புக்கான முழுத் தகுதி இந்நிகழ்ச்சிக்கு உண்டு' என்ற பொருளில் நகைச்சுவைக்கான ஒரு பெய அங்கீகாரம், சிப்புக்கான ஒரு பெய உத்தரவாதம் என்று உணர்வுப்பூர்வமான சிப்பை ஒரு பொருளுக்கு உத்தரவாதம் கொடுப்பதைப் போல் படைப்பது பொருட்சிதைவை உண்டாக்குகிறது.

கலக்கப் போகிறவர் யார்? அசத்தப் போவது யார்? செய்திகளை வாசிப்பவர் சீதா' முதலிய தொடர்கள் யாவும் கலக்கப்போவது யாரு? அசத்தப்போவது யாரு? செய்திகளை வாசிப்பது சீதா என்று திணை மயக்கத்துடன் இடம்பெறுகின்றன.

மேலும், "பார்க்கலாம் கேக்கலாம் கேக் வெட்டிக் கொண்டாடலாம் பிறந்தநால் வாழ்த்துக்கள் ' அறிவிப்பதில், வாழ்த்துகள் வாழ்த்துகலாகவும், நாள் நாலாகவும் வலம் வருவதை மொழிச் சிதைவு என்பதை விட மொழிக்கொலை என்றே கூறலாம்.

உங்கள் அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கம் என்ற தொடரை உங்களுக்கு என் தாழ்வான வணக்கங்கள் என்றும், பலத்த கைதட்டலுடன் வரவேற்போம் என்பதை ஒருபெய கைத்தட்டு கொடுத்து வரவேற்போம் என்றும் அறவிக்கும்பொழுது தொடரமைப்பில் இயைபு இன்மை புலப்படுகிறது.

வசந்தம் ஒளிவழி, வானவில் ஒளிவழியில் "உங்களுக்காக அந்த காடியை வெட்டிவிட்டு வந்தேன், (உங்களுக்காக அந்த உந்து வண்டியை முந்திக்கொண்டு வந்தேன் பொருள் வேறுபாடு) அவா வெளியாயிட்டாரு ( அவர் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார்-பொருள் வேறுபாடு) முதலிய தொடர்களில் பொருள் வேறுபாட்டினை உணர்த்தும் நிலை அதிகமாக இடம் பெறுகிறது. 1971 இவை போன்ற நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து ஈடுபாட்டுடன் கற்றல் என்ற நடவடிக்கையில் ஈடுபடுத்தினால் எதிர்காலத்தில் தலைமுறையினன் மொழி வளம் என்னவாகும்? மொழி சிதைந்தால் பண்பாடும் சிதைந்து விடும் அல்லவா!

இன்றைய உலகில் 233 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் இவர்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக தொலைக்காட்சி ஒளிவழிகள் இயங்குகின்றன. தொலைக்காட்சி ஒளிவழிகளில் சம்ஸ்கிருதம், ஆங்கிலம், மலாய் முதலிய மொழிச்சொற்களின் கலப்பு இருந்தாலும், ஆங்கிலச் சொற்களே அதிகமாக இடம்பெற்றுள்ளன. கோடிக்கணக்கான தமிழர்களைச் சென்றடையும் தமிழகத்து ஒளிவழிகள் தமிழ்ச் சமுதாயத்துக்கு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழைச் சிதைக்காமல் முழுமையாக வழங்குகின்றனவா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஏனென்றால் தமிழ்த் தொலைக் காட்சி ஒளிவழிகளில் தமிழ்ப் பயிர்கள் குறைந்தும் ஆங்கிலக் களைகள் அதிகத்தும் காணப்படுகின்றன.

முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தலைப்புகளைச் சற்று ஆராய்வோம். வசந்தம் ஒளிவழியில் ஹலோ வசந்தம், குட்டிஸ் கிளப், யார் அந்த ஸ்டார், டான்ஸ்ஜோடி, வசந்தம் புக் ஆபிஸ், வசந்தம் கோல்டு, தில் தோ டெவில் சீயல் டூ போன்ற நிகழ்ச்சிகளின் தலைப்புகள் ஆங்கிலத்தில் தான் உள்ளன. விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பெயர்களும் வசந்தத்துக்குச் சளைத்தவை அல்ல. பாய்ஸ் வெர்சஸ் கேர்ல்ஸ், ஜோடி நெம்பர் 1,பாட்டுப்பாடவா, சூப்பர் சிங்கர், ஜூனியர் 2, விஜய் டாக்கீஸ், விஜய் டைம்ஸ், டிரீம்ஹோம்ஸ் போன்ற தலைப்புகள் ஆங்கிலத்தில் தான் உள்ளன.

சன் ஒளிவழியில் டாப் 10 மூவிஸ், காமெடி டைம், சூப்பர் டென் பர்த்டே விஷஸஸ், டீலா? நோடீலா போன்ற தலைப்புகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஆஸ்ட்ரா வானவில் ஒளிவழியில் ஸ்டார் ஸ்டார், ஜஸ்ட் உள்ளே ஜஸ்ட் வெளியே, சலாம் பாலிவுட், இடியட் போன்ற தலைப்புகளும் ஆங்கிலத்தில் தான் உள்ளன.

அறிவிப்புகளில் ஆங்கிலக்கலப்பு: மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்பது பேதையின் கூற்றாகப் பாரதியார் சொல்லிச் சென்றது இன்று பலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழிப்பதில் தொலைக்காட்சி ஒளிவழிகள் முக்கியப் பங்கு ஆற்றிவருகின்றன என்று கூறும் அளவிற்கு ஆங்கிலக் கலப்பு
அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒரு தமிழ் நிகழ்ச்சியை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதி தமிழ்க் குதறியாக இருப்பதேயாகும்.

எடுத்துக்காட்டாக நடுவர்களை அறிமுகப்படுத்தும்போது தி ஒன் அண்ட் ஒன்லி மிஸ்டர் மனோ, தி ஸ்விட்டி மிசஸ் சித்ரா, ஆண்ட் தி பியுடி சுபாஜீ என்று சொல்வதை விடுத்துத் தனித்தன்மை மிக்க திரு.மனோ அவர்கள், நம் அன்புக்குய திருமதி சித்ரா அவர்கள், அழகுமிகு சுபா அவர்கள் என்று இனியதமிழில் அறிவித்தால் அலாதியான இனிமை புலப்படும். ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்பதை வெல்கம் பேக் ஆப்டர் தி கமர்ஷியல் பிரேக் என்றும், அடுத்து வரும் போட்டியாளர் ஓர் அழகான குட்டிப்பாடகர் ஸ்ரீகாந்த் என்பதை தி நெக்ஸ்ட் கன்டஸ்டன்ட் ஒரு குட்டி லவ்லி சூப்பர் சிங்கர் ஸ்ரீகாந்த்
என்றும் கூறித் தமிழ்க்கொலையைச் சீராகச் செய்துகொண்டிருக்கிறார்கள் தொகுப்பாளர்கள். மேற்கூறிய தமிழ்ச் சீரழிவுக்குத் தமிழகத்து ஒளிவழிகளே வழிவகுத்து வருகின்றன என்று கூறினால் அது மிகையாகாது.

விளம்பர அறிவிப்புகளில் ஆங்கிலக் கலப்பு: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூன்றில் ஒரு பங்கென ஆதிக்கம் செலுத்தும் விளம்பரங்களின் மொழிநிலை மொழிச் சிதைவுக்கு காரணமாக அமைகிறது.

இரண்டே வாரங்களில் ஜஸ்ட் டூ டைம்ஸ் சாப்பிட்டாலே போதும் யூவில் லுக் டிம் ஆண்ட் ஸ்லிம் இன்றே சாப்பிடுங்கள் கெல்லாக்ஸ் ஷ்பெஷல், அன்டி டெட்டிரப் ஆயில் கோகனட் ஆயில் தடவுங்கள், கோடையிலே ஜோரா இருக்கும் புதிய நைசில் கூல் ஹெர்பல்' முதலியவை இம்மாதியான விளம்பரங்கள் மக்களின் உள்ளங்களை உணர்ச்சிப்பூர்வமாகக் கவர்ந்திழுக்க மொழிக்கலப்பை ஒரு உத்தியாகக்கொண்டு மொழிச் சிதைவை வலுப்படுத்துகின்றன.

கொச்சை வழக்கு:

மந்திக்கேன் மணிமகுடம், கடைச்சரக்கு மாதுக்கேன் மங்களநாண், சந்திக்கே அனுப்புகிறார் செந்தமிழை, சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை' ( அன்புடன் கூகுள் வலைப்பதிவாளர்) என்ற வகள் தமிழ் மொழிச் சிதைவை உருவாக்குபவர்களுக்கு தரப்பட வேண்டிய சாட்டையடிகள். தமிழ் உணர்வை மிகுவிக்கின்ற வகள். ஆனால் தொலைக்காட்சி ஒளிவழிகள் இந்த மாற்றத்தை உணராமல் கொச்சை மொழிச் சொற்களோடு கொஞ்சி விளையாடுகின்றன. இன்னும் ராவா இருக்கணும் தம்தாத்தூண்டு பிரேக், உங்களோடு பேசினா குஜாலாயிருக்கு, அவங்க உங்கள கலாயக்றாங்க பாருங்க. கொஞ்சம் ஷேக்கியா இருக்குது. பேசாமலே டாபாய்ச்சுட்டா, பட்டைய கிளப்பப் போறாங்க, ஜமாயக்கப் போறாங்க, தூள் கௌப்பிட்டீங்க, உல்ட்டாவா பேசாதே முதலிய தொடர்களில் அறிவிப்பாளர் மட்டுமல்ல பங்குபெறுவோரும் தம் கருத்துகளை ஆங்கிலம் கலந்த தமிழில், பேச்சு வழக்கில் கொச்சை வழக்கைத்தான் பின்பற்றிப் பேசுகிறார்கள்.

"அது இது எது' என்ற அழகான தலைப்புக்கான விளம்பரத்தில் கொச்சை வழக்கு இடம் பெறுகிறது. இது டான்ஸ் இல்லை உடான்ஸ்; இதிலே ஷாப்பிங் மால் வராது கோல்மால் தாங்க வரும் இது நாட்டியா இருக்காதுங்க டாபால்டியா தாங்க இருக்கும் என்று வரும் அறிவிப்புகள் மொழிச் சீரழிவைத்தான் காட்டுகின்றன.

காமடி கலாட்டா, சமையல் சமையல், கிச்சன் கில்லாடிகள் போன்ற தொடர்களைப் பார்க்கும்பொழுது தமிழில் சொல்லுக்குப் பஞ்சம் ஏற்பட்டு வருவதை அறிய முடிகிறது. இந்நிகழ்ச்சிகளில் வரும் உரையாடல்களில் (டிரை பண்ணி ங் பண்ணி மீட் பண்ணி, கன்சல்ட் பண்ணி, இன்பாம் பண்ணி, சேன்ஞ் பண்ணி, டிசைட் பண்ணி என்ற நிலையில் பண்ணித்தமிழ் பரவி வருவதையும் பார்க்க முடிகிறது. வாங்க பேசலாம் வாங்க என்ற நிகழ்ச்சியில் இடம் பெறும் உரையாடல்களில், "படு குஷியா இருக்கிறீங்க, செம்மையா பின்னீட்டீங்க, கலக்கிடீங்க, இன்னிக்கி படு ஷோக்கா டிரஸ் பண்ணியிருக்கிறீங்க' முதலிய கொச்சை மொழிச் சொற்கள் இயல்பான நிலையில் இடம்பெறுகின்றன. இந்நிலை நீடித்தால் பேச்சுத் தமிழில் தெளிவின்மை நின்று நிலைத்துவிடும்.

செம்மொழி என்ற உயர் தனிச் சிறப்பைப் பெற்றுள்ள தமிழ்மொழி, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மொழியாக நிலைத்து நிற்க வேண்டுமென்றால் பொதுவான பேச்சுத் தமிழில் நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும். வியாபார நோக்கில் பிறமொழிக் கலப்பு வலுப்பட்டால் மொழிச் சிதைவு ஏற்பட்டுத் தமிழின் இனிமை மறைக்கப்பட்டு விடும். இந்நிலை நீடித்தால் செம்மொழியாகிய தமிழ், காலப்போக்கில் இலக்கிய வழக்கில் தனித் தமிழாகவும் பேச்சு வழக்கில் கலப்புமொழியாகவும் மாறித் தன் தனித்தன்மையை இழந்துவிடும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கணினித் தமிழ் வளர்ச்சிக்கு ரூ.70 கோடி நிதி தேவை

தமிழகத்தில் கணினித் தமிழ் வளர்ச்சி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள ரூ.70 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று முனைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் கோக்கை விடுத்துள்ளார்.
இலக்கியமும் இணையமும் முதல் முறையாக இணைந்து செயல்படும் இந்த காலகட்டத்தில் நடத்தப்படும் இம்மாநாடு தமிழ் வளர்ச்சிக்கு திருப்புமுனையாக அமையும். கடந்த 1997-ல் கணினியில் தமிழ் பயன்படுத்துவதில் முதல் முறையாக பிரச்னை ஏற்பட்டபோது சிங்கப்பூல் நடத்தப்பட்ட கருத்தரங்கு அதற்கு தீர்வு கண்டது.

இதேபோல் முதல் அமைச்சரும், முரசொலி மாறனும் இணைந்து நடத்திய 2-வது தமிழ் இணைய மாநாடு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக இப்போது 9-வது தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது.
இணையத்தில் தமிழ் பல மைல்களைத் தாண்டியுள்ளது.
அதே சமயம் சில மைல்களைத் தவறவிட்டுள்ளது. எனவே இணையத் தமிழ் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இந்த மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் 400 பேர் 138 கட்டுரைகளை 15 தலைப்புகளில் சமர்ப்பிக்க உள்ளனர். கணினி செயல்முறை, தமிழில் கற்கும் உத்திகள், சொல் பேச்சு, வலைப்பூ, விக்கிபீடியா, மின்தரவு, மின் அகராதி, செல்ஃபோன்களில் தமிழ் தேடுபொறி, மின் ஆளுமை, எழுத்து உண, தமிழ் டொமைன் பெயர்கள் போன்றவை குறித்த விவாதங்கள், கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இணையத் தமிழ் சொற்கள், இணையத்தில் தமிழ் பயன்பாட்டில் பல்வேறு கருத்து வேற்றுமைகள் இருக்கக் கூடும். ஆனால் இன்றைய சூழலில் எது சிறந்தது என்று ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். மாநாட்டுக்கு பிறகு இதை மறந்து விடாமல் பள்ளி, கல்லூ மாணவர்கள், இளைஞர்களிடையே இணையத் தமிழ் ஆர்வத்தை உண்டாக்கும் வகையிலான உறுதியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

சென்னை பல்கலைக்கழகத்திóல் கணினி மொழியியல் மையம் அமைக்க வேண்டும். எழுத்து சுய மொழிபெயர்ப்பு தேடு பொறி, வடிவ அமைப்புகள் குறித்து ஆராய கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மையம் அமைக்க வேண்டும். மேலும் மின் ஆளுமை, கணினி தொழில்நுட்பம் கற்கும் முறை, தகவல் சேகப்பு உள்ளிட்ட 7 வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு கணினித் தமிழை வளர்ச்சி அடையச் செய்ய தமிழக அரசு ரூ.70 கோடி ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும்.

அப்போதுதான் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றதற்கான பலன் கிடைத்தது என்று நம்ப முடியும் என்றார் ஆனந்த கிருஷ்ணன்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆக்குவதிலும் உண்பதிலும் முறையுண்டு!

உணவை நூற்றுக் கணக்கில் தமிழர்கள் வகைப்படுத்தியிருப்பதை நாம் அறிவோம். உணவை உட்கொள்வதையும் உணவை ஆக்குவதையும்கூட நம் முன்னோர் வகைப்படுத்தியுள்ளனர்.

உட்கொள்ளும் முறைகள்:

அருந்தல் = மிகச் சிறிய அளவே உட்கொள்ளுதலை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "மருந்து அருந்தினான்').

உண்ணல் = "துற்றல்' என்றும் கூறப்படும். இச்சொல் பசி தீர உட்கொள்ளுவதைக் குறிக்கும் (உ-ம்: "வயிறார உண்டான்').

உறிஞ்சல் = வாயைக் குவித்துக் கொண்டு நீயற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "தாமரைத் தண்டு கொண்டு நீரை உறிஞ்சினான்').
குடித்தல் = நீயல் உணவைச் சிறிது சிறிதாகப் பசி நீங்க உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "கஞ்சி குடித்தான்; கூழ் குடித்தான்').

தின்றல் = திற்றி என்றும் கூறப்படும் இச்சொல் கொறித்தலையும் அஃறிணை உயிர்கள் தீனி கொள்வதையும் குறிக்கும் (உ-ம்: "முறுக்குத் தின்றான்').
துய்த்தல் = சுவைத்து மகிழ்ந்து உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: பல்சுவைப் பண்டம் துய்த்தான்).

நக்கல் = நாக்கினால் துளாவி உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: தேனை வழித்து நக்கினான்).

நுங்கல் = முழுவதையும் ஒரு வாயில் ஈர்த் துறிஞ்சி விரைந்து உட்கொள்ளுவதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "நூறு குடம் கள் நுங்கினான்').

பருகல் = நீயற் பண்டத்தைச் சிறுகக் குடிப்பதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "நீர் மோர் பருகினான்').

மாந்தல் = பெரு வேட்கையுடன், மடமடவென்று உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "வந்தன எல்லாம் மாந்தி வளர்பசியோங்க நின்றான்.').

மெல்லல் = கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: சீடையை மென்று தின்றான்).
விழுங்கல் = பல்லுக்கும் நாக்கிற்கும் வேலையே இன்றித் தொண்டை வழி குபுக்கென்று உட்கொள்வதை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "மாத்திரை விழுங்கினான்').


ஆக்கும் முறைகள்:

அவித்தல் = ஆவியால் வேகச் செய்வது இது. இது மூவகையாகும். குழாய் முதலியவற்றுள் செலுத்தி பிட்டு முதலியன அவிப்பது பெய்தவித்தல் என்றும் முகந்து இட்டு, இட்லி போன்றவற்றை அவிப்பது இட்டவித்தல் என்றும் கட்டை, துணித் துளைகளின் வழிப்பிழிந்து இடியாப்பம் போன்றவற்றை அவிப்பது பிழிந்தவித்தல் என்றும் சொல்லப்படும்.

இடித்தல் = அசி முதலியவற்றை மாவாகவோ அன்றி அவலாகவோ இடித்து ஆக்குவது இடித்தல் என்று சொல்லப்படும்.

கலத்தல் = பல பண்டங்களைக் கலந்து நீர்மோர் போன்றவற்றை ஆக்குவது கலத்தல் என்று சொல்லப்படும்.

காய்ச்சல் = கஞ்சி, பால் போன்றவற்றைச் சூடேற்றிப் பக்குவம் செய்தல் காய்ச்சல் என்று சொல்லப்படும்.

கிண்டல் = நீலோ அன்றி நெய்யிலோ குறிப்பிட்ட பண்டத்தையிட்டு நீர் வற்றக் கிண்டிக் கொண்டேயிருந்து களி, கும்மாயம் போன்றவற்றை ஆக்குதல் கிண்டல் என்று சொல்லப்படும்..

கிளறுதல் = தாளித்த பின் அதனுடன் அவல், பயறு போன்றவற்றை இட்டு, தாளிப்பும் தாளிக்கப்படுவதும் கலந்து விளங்குமாறு செய்வது கிளறுதல் என்று சொல்லப்படும்.

சுடுதல் = அப்பளம், சோளம், பனம்பழம் முதலியவற்றை நேரடியாக நெருப்பின் தணலிலிட்டு வேகுமாறு பக்குவம் செய்தல் சுடுதல் என்று சொல்லப்படும்.

தித்தல் = பாலில் பிறை மோட்டுத் தயிராக மாறச் செய்வது போன்றவை தித்தல் என்று சொல்லப்படும்.

துகைத்தல் = ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்டங்களை நசுக்கிக் கலந்து ஒன்றாகி விடுமாறு மல்லித் துகையலைப்போலச் செய்வது துகைத்தல் என்று சொல்லப்படும்.

துவட்டல் = நீல் வெந்த வாழைப்பூ, கீரை போன்றவற்றைத் துவண்டு செறியுமாறு பக்குவப்படுத்துவது துவட்டல் என்று சொல்லப்படும்.
பிசைதல் = வேங்கைமா, தயிர்ச்சோறு முதலியவற்றை அவ்வவற்றிற்குயவற்றைப் பெய்தும் தூவியும் கையால் நன்கு குழைந்து கலக்குமாறு பிசைவது பிசைதல் என்று சொல்லப்படும்.
பிழிதல் = தேனடை, பழம் முதலியவற்றின் சாற்றைக் கையால் அல்லது துணி முதலியன கொண்டு சாறு வரச் செய்தல் பிழிதல் என்று சொல்லப்படும்.

பொங்கல் = அசி போன்றவற்றைத் தனியாகவோ அன்றி, பருப்பு முதலியன கூட்டியோ கொதிநீர் வடிக்காமல் அளவாக நீர் பெய்து ஆக்குவது பொங்கல் என்று சொல்லப்படும்.

பொத்தல் = (1) கடுகு முதலியவற்றைக் காயும் எண்ணெயில் இட்டுத் தாளித்து நீல் வெந்த அல்லது பச்சைக்கறி காய்களை அத்துடன் இட்டு வேண்டிய நேரம் அடுப்பில் இருக்கச் செய்து ஆக்குவதும் அசி, நெல், கடலை போன்றவற்றை வரையோட்டிலிட்டுப் பொயச் செய்வதும் பொத்தல் என்று சொல்லப்படும்.
மசித்தல் = கீரை, கிழங்கு போன்றவற்றை நன்கு வேக வைத்து அவற்றை மத்த்தினைக் கொண்டு மசித்துக் குழையச் செய்வது மசித்தல் என்று சொல்லப்படும்.
வடித்தல் = அசி முதலியவற்றைக் கொதிநீல் இட்டு, வெந்த பின்னர் உப நீரை வடித்து விட்டுச் சோறாக்கல் வடித்தல் என்று சொல்லப்படும்.

வதக்கல் = காய்கறி முதலியவற்றை எண்ணெயிலிட்டு நீர்ச்சத்து நீங்கி அவை வதஹ்கித் துவளுமாறு ஆக்குவது வதக்கல் என்று சொல்லப்படும்.

வறுத்தல் = காய் கிழங்கு முதலியவற்றை நன்கு காயும் எண்ணெயில் இட்டு மொறமொறவென ஆகுமாறு ஆக்கல் வறுத்தல் என்று சொல்லப்படும்.

வாட்டல் = பிஞ்சுக்காய் அல்லது பசுங்கதிர் போன்றவற்றை நெருப்பிலிடாது அதன் அனலில் வாட்டிப் பதமாய்ப் பக்குவம் செய்வது வாட்டல் என்று சொல்லப்படும்.

வார்த்தல் = நன்றாகக் காய்ந்த தோசைக்கல் போன்றவற்றில் கரைத்த மாவை வார்த்துத் தோசை, அப்பம் முதலியவற்றைச் சுடுவது வார்த்தல் என்று சொல்லப்படும்.

வெந்நீர்ப்படுத்தல் = நன்றாகக் கொதிக்கும் நீல் பழம், காய்கறி, முட்டை போன்றவற்றை இட்டு வேகும்படி செய்தல் வெந்நீர்ப்படுத்தல் என்று சொல்லப்படும்.

வேகவைத்தல் = நெருப்பிலோ, அனலிலோ, கொதி நீலோ, ஆவியிலோ, எண்ணெயிலோ, அன்றி வேறு வழியிலோ எப்பண்டத்தையும் பச்சைத் தன்மையிலிருந்து மாற்றி உண்ணத் தக்கதாய் வெந்ததாய்ச் செய்வது வேகவைத்தல் என்று சொல்லப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அம்புலியும் காத்துக்கிடக்கிறது...

மூங்கிலைப் போன்றது என்மொழி...

காற்றின் உரசலுக்கு

வெடித்துக் கிளம்பும் பேரோசையையும்

சுவரங்களின் எண்ணிக்கையில்

சுடப்பட்ட ஓட்டைகள் வழியாக

புல்லாங்குழலில் வழிந்தோடும்
மெல்லிசையையும் கொண்டது.

வளையும் என்பதற்காக

ஒடியும் அளவிற்கா

சேதப்படுத்துவது என்மொழியை?

மாவட்டங்களுக்குத் தகுந்தவாறு

மனநலம் படைத்த மனிதர்களிடம்

சொற்சிலம்பம் விளையாடும்

எம்மொழி

தொலைக்காட்சிக்குள் வந்தவுடன்

தூண்டிலில் சிக்கிய மீனாகிறது.

மாரிச மானாகிறது!

யாமறிந்த மொழிகளிலே

இனிமை தமிழ்மொழி

தொலைக்காட்சிகளில் காணோம்...

நெல்லில் சொல்லெடுத்து

பழக்கப்பட்ட குழந்தைகளிடம்

முதல் எழுத்து

அகரத்தில் தான் ஆரம்பமாகிறது.

வீட்டில் இருந்து துவங்கும்

குழந்தைகளின் பயணம்

பள்ளி வந்தவுடன்

தாயிடம் கைகாட்டி விடைபெறும் போது

தமிழுக்கும் சேர்த்து

விடை கொடுக்கப்படுகிறது.

கான்வென்ட் வாயில்களில்

பாவமாய்

காத்துக் கிடக்கிறாள் தமிழ்த்தாய்.

தாலாட்டுகளை மறந்த

தாய்களைப் போல

தமிழை மறந்த

குழந்தைச் சமுதாயம்

திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது

நர்சரிகளில்.

பசும்பாலில் இருந்து

பாக்கெட் பாலுக்கு மாறினோம்

முழம் போட்டு வாங்கும் பூக்களை மறந்து

பிளாஸ்டிக் பூவிற்குத் தாவினோம்
வாசலில் இருந்த வேப்பமரங்களை வெட்டிவிட்டு

சோப்புகளில் அவற்றைக் தேடுகிறோம்.

இருந்தவைகளை இழந்து விட்டு

இருப்பவைகள்

இவை தான் எனக் கலங்குகிறோம்.

ஆரம்பப் பள்ளி வாயில்களில்

குழந்தைகளைப் பார்க்கும் போது

இந்தக் கலக்கம் கூடுதலாகிறது.

அம்புலியைப் பார்த்து

ஆசையாய் உணவு கொடுத்த அம்மா

பொய்யைப் பிசைந்து ஊட்டிய போதும்

ரசித்து கதை கேட்டு வளர்ந்த

நேற்றைய குழந்தைகள்

கொடுத்து வைத்தவைகள்.

தமிழ்ப்புனைவின் அதிசயங்களை

உருவாக்கிய அம்மாக்கள்

"இடியட் பாக்சு'க்குள் சிக்கிக் கொண்டபின்

இன்றைய குழந்தைகள்

குழந்தைமைகளைத் தொலைத்து விட்டன.

குழந்தைகளைப் போல

அம்புலியும் காத்துக்கிடக்கிறது

அம்மாக்களின் கதைகளைக் கேட்க.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழனின் அடையாளம் எது?

கோவை, ஜூன் 25: தமிழனின் அடையாளம் எது என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கில் பதில் அளிக்கும் வகையில் கவிதை வாசித்தார் கவிஞர் முத்தையா.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 3-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்' எனும் தலைப்பிலான கவியரங்கில் வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்து முதல்வர் கருணாநிதி உள்பட அனைத்துப் பார்வையாளர்களையும் அசத்தினர்.
"அடையாளம் மீட்க' எனும் தலைப்பில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா கவிதை வாசித்தார். அவர் தனது கவிதையில், தப்பில்லாத உச்சப்புதான் தமிழின் செம்மைக்கு அடையாளம். செப்புச் சிலைபோல் தொகுப்பாளினிகள் செந்தமிழ் கொல்வது அவமானம். குத்துப்பாட்டுக்கு குதிக்கும் தமிழா, பத்துப்பாட்டு உனது அடையாளம். பதுக்கல் கணக்கும், ஒதுக்கல் கணக்கும் பக்கத்தில் வாழ்தல் அவமானம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்தான் பண்டைய தமிழனின் அடையாளம். யார் என்ற உறவு என்பதை அறிந்து அழைப்பது தமிழன் அடையாளம்.

பார்ப்பவரையெல்லாம் அங்கிள் என்று பிள்ளைகள் அழைப்பது அவமானம்.
வமானம் துடைத்தெடுப்போம். அடையாளம் மீட்டெடுப்போம். தமிழ்மானம் காத்திருப்போம். திசையெல்லாம் புகழ்படைப்போம் என்றார்.

கவியரங்கத்தில் ஈரோடு தமிழன்பன் தொடக்கவுரையாற்றினார். முதல்வர் மு.கருணாநிதி கவிஞர்களை ஊக்குவிப்பவர். எத்தனையோ கவிஞர்களின் கவிதைகளை நாட்டுடைமையாக்கி, வெள்ளிக் காசுகளை அவர்களது வீட்டுடைமையாக்கியவர்.
அதனால், எழுந்து எழுத முடியாதவர்கள் கூட கலைஞர் காலத்தில் எழுத முடியுமா என்று எழுதுகிறார்கள். தமிழ் நன்றாகத் தெந்திருந்தால் போதும், முதல்வன்
மடியாசனத்தில் அமரலாம் என்றார்.

நிகழ்ச்சிக்கு, கவிஞர் வைரமுத்து தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழும், முதல்வரும் ஒன்று என்றுதான் சொல்வேன். அவர் எட்டிய சாதனைகளை அவரால்தான் தாண்ட முடியும். எங்கள் பாட்டணியை உள்ளத்தில் வைத்திருப்பது போல் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்துள்ளீர்கள்.

முதல்வன் உள்ளங்கை விந்தால் சூயன். குவிந்தால் கூட்டணி. கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருங்கும் உத்தி கண்டவர் முதல்வர் என்றார்.

"பகுத்தறிவு தழைக்க' எனும் தலைப்பில் கவிஞர் நா.முத்துக்குமார், "சமதர்மம்' எனும் தலைப்பில் முதல்வர் மு.கருணாநிதியின் பேத்தி கயல்விழி வெங்கடேஷ் "தன்மானம்' எனும் தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, "தாய்த் தமிழ் வளர்க்க' எனும் தலைப்பில் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன், "ஆதிக்கம் அகற்றிட' எனும் தலைப்பில் பேராசியர் கருணாநிதி உள்ளிட்டோரும் கவிதை வாசித்தனர்.

காலை 10.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்ற இந்தக் கவியரங்கத்தை முதல்வர் தொடர்ந்து ரசித்துப் பார்த்தார். அவருடன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. அவர்தம் குடும்பத்தினரும், அமைச்சர்களும், ஏராளமான பொதுமக்களும் ரசித்துக் கேட்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்மொழி அலுவலகம்: முதல்வர் கருணாநிதி

இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஏராளமான கருத்துகள், அறிவுரைகள், கட்டளைகளை வழங்கியுள்ளனர்.
தமிழரை வாழ வைக்கவும், தமிழை மேலும் உயர்த்தவும் என்னென்ன செய்ய வேண்டும் என்று இங்கு தலைவர்கள், மக்கள் கொடுத்த கட்டளைகளை ஏற்று நிச்சயம் செயல்படுவோம் என்று நான் உறுதி அளிக்கிறேன். எங்கும் தமிழ் என்று கூறும் நாம், ஏங்கும் தமிழ் என்ற கவலையளிக்கும் கட்டத்தில் உள்ளோம்.

கூட்டணி சேர்க்கும் சக்தி:

இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்சியினர் உள்ளதைப் பார்த்து, மறுபடியும் பழைய கூட்டணியைப் பார்ப்பது போல் உள்ளதே என்று சிலர் கேட்டனர். ஆனால் கூட்டணி கவிழ்ந்தாலும், பிரிந்தாலும் எல்லா கட்சிகளையும் மீண்டும் சேர்க்கும் சக்தி எனக்கு உள்ளது. அது மாய சக்தியா, மந்திர சக்தியா என்று கேட்டால் அது நான் பெற்ற தமிழ் சக்தி என்றுதான் கூறுவேன்.

இந்த மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோர் வருவார்களா என்று அச்சத்தோடு இருந்தேன். ஆனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையேயும் தமிழுக்காக வந்துள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய தங்கபாலு எனக்கு 10 கோரிக்கைகள் வைத்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் உள்ளவரே கோரிக்கை வைக்கிறார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழ்:

உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்கு அவர்கள் ஒப்புதல் வழங்காதது மனமில்லாததால் அல்ல. அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளதால்தான்.

நாங்கள் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற வழியில் வந்த வீர வரலாற்றுக்கு உரியவர்கள். தமிழுக்காக தமிழகத்தில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். அது இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாலோ, அரங்குகளில் நடைபெறும் அமர்வுகளாலோ முடிந்துவிடக் கூடியது அல்ல.

சங்க காலம் முதல் இப்போது வரை தமிழ் பல்வேறு சிக்கல்களைக் கண்டுள்ளது. மூவேந்தர்கள் ஆட்சியில் சங்க இலக்கியம் தோன்றியது. ஆனால் களப்பிரர்கள் ஆட்சியில் தமிழுக்கும் இருண்ட காலம் ஏற்பட்டது. இதைப் போலவே 14-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை தமிழ் சீரழிந்துபோனது.

அதையேதான் நாம் இன்று கவலையோடு காண்கிறோம். இந்த நிலையை மாற்ற பரிதிமாற்கலைஞர் முதலானோர் முயன்றனர். இதையடுத்து தமிழுக்கு இப்போதுதான் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மாநாடு முடிவதற்குள்...
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது போல மைசூரில் உள்ள செம்மொழி அலுவலகத்தை தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு வாங்கி நடத்துகிறோம்.

புதிய சட்டசபைக் கட்டடம் கட்டப்பட்ட பிறகு பழைய சட்டப்பேரவைக் கட்டடத்தை என்ன செய்வது என்று யோசித்தோம். இப்போது பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செம்மொழித் தமிழ் தலைமை அலுவலகம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்குள்ள முதல்வர் அறை, செம்மொழித் தலைமை அலுவலர் அறையாக மாற்றப்படும். கோவை மாநாடு முடிவடைவதற்குள் கோட்டையில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு அலுவலகம் அமைக்கும் பணிகள் முடிந்துவிடும்.

செம்மொழி அந்தஸ்து பெற்ற பிறகு நாங்கள் அமைதியாக இருந்துவிடாமல், தமிழ் வாழ, வலிமை பெற நல்ல அடித்தளம் அமைத்து வருகிறோம். மொழியின் பெயரை மாற்றி விட்டு, வைரக் கிரீடம் வைத்துவிட்டால் மட்டும் போதும் என்று இல்லாமல் கணினியில் தமிழ், தமிழ் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு என்று எதிர்காலத்தில் எல்லாவற்றையும் பெற நிச்சயம் உழைப்போம் என்றார் முதல்வர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழை இந்திய ஆட்சிமொழியாக்கிட கருணாநிதியுடன் கை கோர்த்துச் செயல்படுவோம்

உலகில் உள்ள 6 ஆயிரம் மொழிகளில் செம்மொழித் தகுதி பெற்ற 6 மொழிகளில் ஒன்றான தமிழுக்கு, முதல்வர் கருணாநிதி தலைமையில் செம்மொழி மாநாடு நடைபெறுவது பெருமைக்குரியது.

தமிழ் இலக்கியங்களும், தமிழ் இயல், இசை, நாடகம் ஆகியவையும் தொன்மைமிக்கவை. முத்தமிழை தலைநிமிரச் செய்த முதல்வர் கருணாநிதி, மொழியை தனது விழிபோல் போற்றி வருகிறார்.

இச் சிறப்புக்குரிய செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டபோது சில குரல்கள் தவறான பாதையில் ஒலித்தன. அதைமாற்றிக் காட்டும் விதத்தில் இம்மாநாட்டை திறம்பட நடத்தி புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ்மொழி செம்மொழித் தகுதி பெற்றுள்ளதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வழிநடத்தும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது.
தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் பெரும் வளர்ச்சி கண்டது. செம்மொழித் தகுதி தமிழுக்கு வழங்கப்பட்டதற்கான முயற்சிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கட்சிகள் செய்திருந்தாலும், குறிப்பாக கருணாநிதியும், அவரது கட்சியும் மேற்கொண்ட முயற்சி மிகவும் போற்றத்தக்கது என்று சோனியா காந்தி, கருணாநிதிக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

தமிழ் உணர்வோடு வாழும் அவர், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பெருமைகொள்ளும் விதத்தில் இந்தக் கருத்தரங்கை நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் தமிழ் பயிற்று மொழியாக இருந்தாலும், இந்திய ஆட்சிமொழியாக உருவாகிட முதல்வர் கருணாநிதியுடன் தமிழக காங்கிரஸ் கட்சியும் கரம் கோர்த்துச் செயல்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் வளர்ச்சிக்கான 10 கோரிக்கைகளை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

அதன்படி, ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்துக் கல்வியும் தமிழே முதலாய், முதல் பாடமாய் முழுவதுமாய் இருக்க வேண்டும். கர்நாடகத்தில் அதுபோன்றுதான் உள்ளது. ஏன் தமிழகத்தில் இருக்கக் கூடாது?
அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழாசிரியர் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஆரம்ப வகுப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை தமிழ்ப் பாடமுறை சீர்திருத்தப்பட வேண்டும். தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைக்கப்பட வேண்டும். தமிழுக்கு என்றும், தமிழ்ப் பண்பாட்டுக்கு என்றும் தனி அமைச்சர் இருக்க வேண்டும். பிறமொழிச் சிறப்புகள் தமிழிலும், தமிழ் மொழிச் சிறப்புகள் பிறமொழிகளிலும் கொண்டுசெல்ல இத்துறைகள் செயல்பட வேண்டும்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் தமிழறிவும், மொழியாற்றலும் பெற்றிட ஆசிரியர்கள், புத்தகங்கள், கல்விக்கூடங்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கிட வேண்டும். வெளிநாட்டு வாழ் தமிழர்கள், அவர்களது குழந்தைகள் தமிழ் கற்றிட தேவையான வாய்ப்புகள் உருவாக்கித் தர வேண்டும். இயல், இசை, நாடகம் சங்கமிக்கும் முத்தமிழ்ச் சங்கம் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நிறுவப்பட வேண்டும். அதன் தலைவராக முதல்வர் கருணாநிதி முதல் பொறுப்பை ஏற்க வேண்டும்.
எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், பிற மாநிலத் தலைநகரங்களிலும், தமிழ் பேசும் பிற உலக நாடுகளிலும் செம்மொழிச் சங்கத்தின் கிளைகள் ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழில் அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும் வகையில் கணினித் தமிழ் ஏற்படுத்தப்பட வேண்டும்.

செம்மொழித் தகுதி பெற்ற தமிழுக்கான வளர்ச்சித் தொகையை மத்திய அரசு விரைந்து அளிக்க வேண்டும் என்றார் கே.வீ.தங்கபாலு.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ் உலகமெலாம் பரவிட அறிவியலைப் பயன்படுத்த வேண்டும்:டி.ராஜா

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மொழிக்கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2004, ஜூன் 7-ம் தேதி குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க பரிசீலனைக் குழு அமைக்கப்படும் என்றார்.

தமிழை செம்மொழி என்று பிரகடனப் படுத்தவும் செய்தார்.

அன்றைக்கு கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் முழுமையாக இதை வரவேற்றனர். தமிழகத்தில் ஆட்சிமொழியாக இருந்தாலும், இந்திய அளவில் தமிழின் நிலை என்ன என்றுதான் பார்க்க வேண்டும். நாம் சங்ககால, மத்தியகால பெருமைகளை மட்டும் பேசுவதில் பயனில்லை. தற்போது ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.

இலங்கையில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதை மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்று ஐக்கிய நாடுகள் சபை சொன்னது. ஆனால், அந்த மக்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, கட்சி வேறுபாடின்றி நாம் யோசித்தாக வேண்டும்.

தமிழ், சீனம், லத்தீன், சமஸ்கிருதம், ஹீப்ரூ, கிரேக்க மொழிகளை யுனெஸ்கோ நிறுவனம் செம்மொழியாக கருதுகிறது. இதில் தனித்துவம் மிக்க மொழியாக தமிழ் உள்ளது. செம்மொழிக்கான 11 இலக்கண விதிகளையும் கொண்டுள்ளது. ஆனால், இன்றைக்கு தமிழின் நிலை என்னவாக உள்ளது என்பதை யோசிக்க வேண்டும்.
இந்திய அரசியல் சட்டப்படி 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளும் ஆட்சிமொழியாக வரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மத்திய அரசும் தனது பொறுப்பை இதில் உணர்ந்து செயல்பட வேண்டும்.

18 மொழிகளுக்கும் அரசியல் சாசனப் பாதுகாப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்திலும் தமிழில் பேசும் நிலை உருவாகும். தமிழகத்தில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதிடலாம் என்றபோதிலும், நீதிபதியிடம் ஆங்கிலத்தில்தான் முறையிட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆகவே, நீதிமன்ற வழக்கு மொழி, பயிற்றுமொழியை ஏற்படுத்திட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாகி வரும் இக்காலத்தில் தமிழ் உள்பட எல்லா மொழிகளையும் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. தமிழ்மொழியை தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பிற செம்மொழிகளைப் பயில்வதற்கான இருக்கைகளையும், பிற நாட்டுப் பல்கலைகளில் தமிழ்மொழி இருக்கைகளையும் ஏற்படுத்திட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க பல அறிஞர்கள் போராடி வருகின்றனர். இதற்கான அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. செம்மொழி பலம் தமிழுக்கு உள்ளதால், அதை அறிவியல் ஆதார மொழியாக வளர்க்க வேண்டும். அப்போதுதான் உலகம் முழுதும் பரவும் நிலை ஏற்படும் என்றார் டி.ராஜா.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எழுத்துச் சீர்திருத்தம் அவசியம்: கி. வீரமணி

பழம்பெருமை பேசிக் கொண்டே இருந்துவிடாமல், 21-ம் நூற்றாண்டுக்கு தமிழைக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை அரசு துணிச்சலாக மேற்கொள்ள வேண்டும். கணினித் தமிழைப் பெற வேண்டுமானால் எழுத்துச் சீர்திருத்தம் அவசியம். தமிழ்ப் புத்தாண்டை மாற்றி அரசு உத்தரவிட்டபோதும் எதிர்ப்பு வரத்தான் செய்தது. எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்களும் பின்னாளில் ஏற்றுக்கொள்வார்கள்.

நீதிமன்றம் முதல் வீதிமன்றம் வரை தமிழ் வர வேண்டும். உலகம் முழுவதுமுள்ள தமிழர்களைப் பாதுகாக்க ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். இது மிகவும் அவசியம்.
எங்கு தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், அதைத் தட்டிக்கேட்கும் உரிமை தாயகத்துக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை, உலகத் தமிழர்களுக்கு ஏற்பட வேண்டும் என்றார் வீரமணி.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெர்மனி பிறந்த வீடு; தமிழகம் புகுந்த வீடு

ஜெர்மனி நாட்டில் பிறந்தாலும் தமிழ் மீதும், தமிழ்நாட்டின் கிராம கலாசாரத்தின் மீதும் ஏற்பட்ட காதலால் தமிழ்நாட்டையே புகுந்த வீடாக மாற்றிக் கொண்டவர் உல்க் நிக்லாஸ்.

மதுரை மாநகன் மருமகளாக மாறிய இவர், ஜெர்மனி நாட்டின் குலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஜெர்மன், ஆங்கிலம், கம்போடியா, ந்தி ஆகிய மொழிகளைக் கற்றவர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வந்த அவர், வெள்ளிக்கிழமை மாநாடு ஆய்வரங்க நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக கவனமுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவடம் நாம் பேசியதில் இருந்து...

உங்களுக்கு தமிழ் மீது ஆர்வம் எப்படி வந்தது?

1973-ம் ஆண்டு இந்திய கலாசாரம் பற்றிப் படிக்க எண்ணினேன். அப்போது ந்தி படிப்பதற்காக குலோன் பல்கலைக்கழகப் பேராசியர் யானர்டு என்பவரை அணுகியபோது தமிழ் தெயாமல் இந்திய கலாசாரத்தை முழுமையாக அறிய முடியாது. எனவே தமிழ் படியுங்கள் என ஆர்வமுட்டினார். அதன்பிறகு தமிழ் கற்க தொடங்கி 1981-ல் தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றேன். பின்னர் தமிழ்நாட்டுக்கு முதல்முறையாக அதே ஆண்டில் வந்தேன். அப்போது இங்குள்ள கலாசாரம், பண்பாடு எனக்கு ரொம்பப் பிடித்தது. தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கினேன்.
உங்களது முனைவர் பட்ட ஆய்வு எதைப்பற்றியது?

முத்தொள்ளாயிரம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். இதற்காக 1984 முதல் 1986 வரை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், 1986 முதல் 1990 வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வுக்காகத் தங்கியிருந்தேன்.

குலோன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை பற்றி கூறுங்கள்

பழமையான குலோன் பல்கலைக்கழத்தில் தமிழ்த் துறை துவக்கப்பட்ட 1979-ம் ஆண்டு காலகட்டத்தில் 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது 60 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஜெர்மனியில் இளைஞர்களிடம் தமிழ் ஆர்வம் எப்படி உள்ளது?

1983-ம் ஆண்டு முதல் இலங்கை அகதிகள், ஜெர்மனிக்கு அதிகமாக வருகின்றனர். அவர்களுடன் பேசி, பழக ஜெர்மனி குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் தமிழின் அருமையை உணரத் துவங்கியுள்ளனர். இதனால், ஜெர்மனி இளைஞர்களிடம் தமிழ் கலாசாரம் அதிகத்து வருகிறது.

அங்கு உயர்கல்வி வாய்ப்புகள் எப்படி உள்ளன?

ஜெர்மனிக்கு வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் 2-வது தலைமுறையினர் இப்போது தமிழில் உயர்கல்வி, பொறியியல் படிக்க அவர்களுக்கு உய வாய்ப்புக் கிடைப்பதில்லை. தமிழ்நாடு அரசு எங்கள் பல்கலைக்கழகம் போல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ்த் துறைகளுக்கு நிதி உதவி செய்தால் அங்குள்ள தமிழர்கள் தாய்மொழியில் படிக்க வாய்ப்புக் கிடைக்கும்.

நீங்கள் சென்ற வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு எப்படி இருக்கிறது?
பிரான்ஸ், கம்போடியா, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். சிங்கப்பூல் வசிக்கும் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு என்னைக் கவர்ந்தது. பிரான்ஸிலும் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர்.
அண்மையில் நீங்கள் சென்ற நாடு எது?

சில மாதங்களுக்கு முன்பு கம்போடியா சென்றேன். அங்கு தமிழ்நாட்டின் சோழர் காலச் கலாசாரம் போல அங்கோர் என்னும் கலாசாரம் உள்ளது. இரண்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. 13-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழ மன்னர் ஒருவர், அங்கிருந்த அங்கோர் மன்னருக்கு பெய கல் ஒன்றைப் பசாக வழங்கியுள்ளார். அது அங்குள்ள சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்களும் அங்கு உள்ளன. தமிழர், கம்போடியர் கலாசாரங்களுக்கு இடையே அதிக ஒற்றுமைகள் உள்ளன. இங்கு வெளிவரும் திரைப்படங்களின் சி.டி.க்கள் அங்கு உடனுக்குடன் கிடைக்கின்றன. அங்குள்ள மக்கள் தமிழ் சினிமாவை மிகவும் ரசிக்கின்றனர்.

உங்களது கணவர் பற்றி சொல்லுங்கள்

அவர் பெயர் சரவணன். புகைப்படக் கலைஞர். அவரைக் கைப்பிடித்தது சுவாரசியமான கதை. ஆய்வுக்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தபோது கிராமங்களுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது சரவணனின் தந்தை கிராம கலாசாரம், பண்பாடு குறித்து நிறையத் தகவல்களை கூறுவார். அப்போது சரவணனைப் பார்த்து, பழகி, காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

தமிழகத்தில் பிடித்த விஷயம்?

கிராம கலாசாரம் ரொம்பப் பிடிக்கும். கிராமியப் பாடல்கள், பஜனை, வில்லுப்பாட்டு ஆகியவை என்னைச் சொக்கவைப்பவை. புகுந்த வீடான தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறேன். பல்கலைக்கழக பணி போக ஓய்வுநேரத்தில் புதுவையில் ஒரு கிராமத்தில் உள்ள எனது சொந்த வீட்டில் இருந்து கிராம கலாசாரத்தை ரசித்து வருகிறேன்.

உங்கள் குடும்பம் பற்றி..

எங்களுக்கு குழந்தைகள் இல்லை. 5 பேரை தத்தெடுத்து வளர்த்தோம். அவர்களுக்குத் திருமணமாகி 5 பேரக் குழந்தைகள் உள்ளனர் என்றார் புன்னகையுடன்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மக்கள் மொழியில் ஆட்சி நடைபெறாவிட்டால் மக்களாட்சிக்கு அர்த்தமில்லை: சீதாராம் யெச்சூரி

மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது சமூக பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. மொழியின் தோற்றம் குறித்து ஜெர்மானிய தத்துவம் என்ற நூலில் அது சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறினார் காரல்மார்க்ஸ்.

பல்வேறு மொழிகளுக்கிடையே காணப்படும் பொதுமைப் பண்புகள் மற்றும் அவை நவீன காலத்தில் பெற்றுள்ள வளர்ச்சி, செறிவான பண்பாட்டு மரபு ஆகிவயற்றை ஆய்வுக்கு உள்படுத்தி மேலும் வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் தியாகராஜர், ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவருமே வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள். ஆனால், மூவரும் தெலுங்கில் பாடினர். ஆயினும் அந்த இசை கர்நாடக சங்கீதம் என்று அழைக்கப்பட்டது. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை.

தெலுங்கில் பாடப்பட்ட இசையை சிரமமின்றி வேறு மொழிகளில் எளிதில் மொழி பெயர்க்க முடியும். இந்த உண்மையை மறுத்து திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜர் உத்சவத்தின்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறுகிய வெறி மனப்பான்மை கொண்டவர்களின் செயல் இது.

மக்களின் மொழியில் ஆட்சி நடைபெறாவிட்டால் மக்களாட்சி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை. மக்களா/*ட்சி வெற்றிகரமாக நடந்திட, அரசு நிர்வாகத்துடன் எளிதில் அணுகும் தன்மை மிகவும் முக்கியமானது.

ஆள்பவர்களையும், ஆளப்படுபவர்களையும் ஒன்றாக இணைப்பது மட்டுமின்றி, மொழி என்பது ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையே எத்தகைய உறவு உள்ளது என்பதை நிர்ணயிக்கும் கருவியாகவும் உள்ளது.

மொழி சமூகத்தின் முக்கியமான அடையாளம். அரசியல், பண்பாடு மற்றும் சமூக வாழ்வியல் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் கருவியாக மொழி திகழ்கிறது. மும்மொழியைத் திணிக்கும் வலைக்குள் சிக்கிவிடாமல் அந்தந்த மண்ணில் பேசப்படும் மொழிகளின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். குறுகிய மொழிவெறி மனப்பான்மையால் இதைச் சாதிக்க முடியாது.

இன்றைய உலகில் எந்தவொரு மனிதனும் தனித்த அடையாளத்துடன் தன்னை நிறுத்திக் கொள்ள முடியாது. பன்முக அடையாளத்தையும் பேண வேண்டியுள்ளது.

இன்றைக்கும் பொருந்தக்கூடிய பெருமைமிகு இலக்கியங்களை தமிழ் கொண்டுள்ளது. ஏட்டில் எழுதப்படாத வாழ்மொழி வரலாற்றுச் செல்வங்களும் மிகுதியாக உள்ளன. இவற்றை உடனடியாக ஆவணப்படுத்தி என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாக மாற்றிப் பாதுகாக்க வேண்டும். நாட்டுப்புற இசை, நாடகம், கூத்து அனைத்தும் மதிப்புமிக்க பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை.
தேசிய இயக்கம், திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம், பொதுவுடமை இயக்கம் போன்ற பல்வேறு இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்புகளால் செழுமையடைந்த தமிழ் மொழியில், அதன் செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்து அறிவியல் கண்ணோட்டத்துடனான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றார் யெச்சூரி.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.