உலகிலேயே, அதிக எண்ணிக்கையில் இரட்டையர்கள் வசிக்கும் கிராமம் என்ற பெருமையை, கேரள மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று பெறுகிறது.இரட்டையர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது, நைஜீரியா மற்றும் பிரேசில் நாடுகளில் தான். இரட்டையர்கள் பிறப்பிற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
உலக அளவில் 1,000 பேருக்கு எட்டு பேர் இரட்டையர்கள் என்றும், இந்தியாவில் 1,000 பேருக்கு நான்கு பேர் இரட்டையர்களாக உள்ளனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், கேரள மாநிலம் மலப்புரம் அருகில் உள்ள நம்பாறா ஊராட்சிக்கு உட்பட்ட கொடினி என்ற கிராமத்தில், 250 இரட்டையர்கள் வசித்து வருகின்றனர். இது இந்திய சராசரியை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த கிராமத்தில் 1,000 பேருக்கு 35 பேர் இரட்டையர்களாக உள்ளனர். உலகத்தில் அதிக எண்ணிக்கையில் இரட்டையர்கள் வசிக்கும்கிராமம் என்றபெருமையை இது பெறுகிறது. இந்த கிராமத்தில் அதிக எண்ணிக்கையில் இரட்டையர்கள் இருப்பதற்கு காரணங்கள் குறித்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு நிலவும் சுற்றுப்புறச் சூழல், சீதோஷ்ண நிலை,தண்ணீர் போன்ற விஷயங்கள் ஆய்விற்குட் படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment