கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு, ‘நெட்’ தேர்வு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment