அரசு, தனியார் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் (20224-2025) கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உயர் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை: நிகழ் நிதியாண்டுக்கான உயர் கல்வித் துறைக் கான மானியக் கோரிக்கையின்போது, 2024-2025-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேவை யுள்ள கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுத லாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி பாடப் பிரிவுகளுக்கு 10 சதவீதமும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் 10 சதவீதமும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்ப டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.
அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் மேற்கண்டவாறு கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க பின்வரும் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் முதன்முதலில் ஒப்பளிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையின் அடிப் படையில் கூடுதல் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கூடுதல் மாணவர் சேர்க்கையால் கூடுதல் பணியிடங்கள் கோரக் கூடாது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். கூடுதல் சேர்க்கை நிகழ் கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என அந்த அரசா ணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment