தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வருகிற ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 7) நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப் புக்கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகக் கல்லூரி, சுயநிதி பொறி யியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான மாநில அளவிலான கலந்தாய்வை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டுதோறும் நடத்திவருகிறது. நிகழ் கல்வியாண்டுக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி முதல் இணைய வழியில் (ஆன் லைன்) விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்தப் பதிவு வருகிற 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் பிறகு, விண்ணப்பப் படிவங்கள் சரிபார்ப்பு நிறைவு பெற்று, ஜூலை 3-ஆவது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இணைய வழியில் நடைபெறும் விண்ணப்பங்கள் சரிபார்ப்புக்கு மாணவர்கள் நேரில் வரவேண்டியதில்லை. மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களின் நிலையை இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.
கலந்தாய்வு இணைய வழியாகவே நடைபெறும். ஜூலை மாதத்தில் சிறப்புக் கலந்தாய்வும், பொதுக் கலந்தாய்வும் நடை பெற உள்ளன. மாணவர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து தங்கள் தகுதிக்கேற்ற வாறு விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்துகொள்ளலாம். பி.எஸ்சி. படிப்பில் கணிதத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களும் இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் சேர லாம் என அழகப்பச்செட்டியார் பொறியியல், தொழில்நுட்பக் கல் லூரி முதல்வரும், கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளருமான கே. பாஸ்க ரன், இணை ஒருங்கிணைப்பாளர் சி. உமாராணி ஆகியோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment