பாலிடெக்னிக் கல் லூரிகளில் தமிழ் மொழிப்பாடமாக அமல்படுத்தப்படும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் இதைத் தெரிவித்தார்.
நிகழ்கல்வியாண்டில் தன்னாட்சி கல்லூரிகளைத் தவிர அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்துபொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் மொழிப்பாடமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மொழிப் பாடமாகஅமல்படுத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||