பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரம்: தகுதிக்கான வரையறையை தேர்வுகளின் செயல்பாட்டுடன் சுருக்கி விட முடியாது

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரம்: தகுதிக்கான வரையறையை தேர்வுகளின் செயல்பாட்டுடன் சுருக்கி விட முடியாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து


 • பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், தகுதிக்கான வரையறையை போட்டித் தேர்வுகளின் செயல்பாட்டுடன் சுருக்கிவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
 • மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட படிப்புகளிலும், மேற்படிப்புகளிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் மத்திய அரசு வழங்கி உத்தரவிட்டது. இந்த இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வருகிறது என்றும் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 29-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
 • இதை எதிர்த்து கோவாவை சேர்ந்த நெயில் ஆரோல்யோ நியூன்ஸ் உள்ளிட்ட 17 மருத்துவ மாணவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 • இந்த விவகாரத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஆதரவாக தி.மு.க. சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 • இந்த மனுக்களை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து கடந்த 7-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ‘மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட படிப்புகளிலும், மேற்படிப்புகளிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓ.பி.சி.) 27 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கை செல்லும்’ என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். மேலும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-
 • மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்க வேண்டிய அவசர தேவையிருப்பதால், மாணவர் சேர்க்கை தடைபடாமல் இருக்க, மத்திய அரசின் இட ஒதுக்கீடு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 8 லட்சம் ரூபாய் என்ற ஆண்டு வருமான உச்சவரம்பு தொடர்பாக மத்திய அரசு அமைத்த பாண்டே குழுவின் பரிந்துரையை ஏற்கிறோம்.
 • மத்திய அரசு வெளியிட்ட இட ஒதுக்கீடு அறிவிக்கையின் படி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற வேண்டும்.
 • முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதிய மாணவர்களை அடையாளம் காண மத்திய அரசு அறிவிக்கையில் இடம்பெற்ற பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 8 லட்சம் ரூபாய் என்ற ஆண்டு வருமான உச்சவரம்பை பயன்படுத்தலாம்.
 • பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான பயனாளிகளை கண்டறிய பாண்டே குழு நிர்ணயித்த 8 லட்சம் ரூபாய் என்ற ஆண்டு வருமான உச்சவரம்பு இந்த ரிட் மனுக்களின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது.இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
 • kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

  No comments:

  Post a Comment

  ||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

  TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
  kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

  முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.