அறிவிப்பு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, தங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
- அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: டிசம்பர் 13, சென்னை.
- போராட்டம் தொடங்கும் நாள்: ஜனவரி 6-ஆம் தேதி முதல்.
- முக்கிய கோரிக்கைகள்:
- 01.04.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
- ஆசிரியர் தகுதி தேர்வு (TET) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினைக் காரணம் காட்டி 23.08.2010 முன்பாக பணியேற்ற ஆசிரியர்களை அச்சுறுத்தும் TET தேர்விலிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் MRB செவிலியர்கள், MTM சுகாதார ஆய்வாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், கணினி உதவியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், அதே போல் 171 தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
- இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
- ஆசிரியர்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும்.
- முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும்.
- கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேப்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும்.
- உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
- உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
- 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியானம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
- சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை நீதிமன்ற வழக்கு எண் WP No.24797/2015 தீர்ப்பு நாள் 23.10.24 ன்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
- கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்திட வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை (OUTSOURCING) மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடைசெய்திட வேண்டும்.
- தற்போதைய நடவடிக்கை: இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 13 (சனிக்கிழமை) அன்று சென்னை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்ட வடிவம்: ஜனவரி 6 முதல் நடக்கவிருப்பது காலவரையற்ற வேலைநிறுத்தம்.
- பங்கேற்பு: தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மாவட்டத் தலைநகரங்களில் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
சுருக்கம்: 10 அம்சக் கோரிக்கைகளை வென்றெடுக்க, வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment