தமிழக அரசின் தலைமைச் செயலாளர், திரு. N. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களின் Letter (Ms) No.11486030/FR,III-2/2025-1, dated 08.12.2025 கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள EL SURRENDER குறித்த தெளிவுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. 26.04.2020 அன்றோ அல்லது அதற்கு முன்போ பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் (ஏற்கனவே EL SURRENDER செய்திருந்தால்):
- தங்களது பணிக்காலத்தில் ஒருமுறையேனும் EL SURRENDER செய்திருந்தால்,
- மீண்டும் அதே தேதியில் மட்டுமே 15 நாட்களுக்கு EL SURRENDER செய்ய முடியும்.
- சுயமாக வேறு எந்த தேதியையும் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்க இயலாது.
2. 26.04.2020 அன்றோ அல்லது அதற்கு முன்போ பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் (இதுவரை EL SURRENDER செய்யாமல் இருந்தால்):
- உங்களது பணிக்காலத்தில் ஒருமுறைகூட EL SURRENDER செய்யாமல் இருந்தால்,
- உங்களது ஆண்டு ஊதிய உயர்வு காலாண்டு காலப்பகுதியில் (Annual Increment Quarter) நீங்கள் விரும்பும் தேதியில் மட்டுமே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை (EL) SURRENDER செய்ய முடியும்.
- அந்த காலாண்டு காலப்பகுதிகள்: 1/1, 1/4, 1/7, அல்லது 1/10.
3. 27.04.2020 அன்றோ அல்லது அதற்கு பிறகோ (30.09.2025 வரை) பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்:
- உங்களுடைய வருடாந்திர ஊதிய உயர்வு காலாண்டில் வரும் இடைப்பட்ட காலப்பகுதியில் நீங்கள் விரும்பும் ஏதாவது ஒரு தேதியில், அதாவது
- 01/01, 01/04, 01/7, அல்லது 01/10 ஆகிய காலாண்டு காலப்பகுதியில் நீங்கள் விரும்பும் தேதியில் 15 நாட்கள் EL ஐ SURRENDER செய்ய முடியும்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment