Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

செய்தி துளிகள் - JANUARY 2022

  • JAN 31 : ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் ஆகிறது.பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை நடைபெறும் இந்த கூட்டங்களில் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான சட்டமியற்றல், நாட்டுக்கான வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
  • JAN 31 : மத்திய பட்ஜெட்டில், வருமான வரி சலுகைகளும், 5 மாநில தேர்தலையொட்டி கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  • JAN 31 : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது. 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
  • JAN 31 : திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் சட்டையை பிடித்து இழுத்து மோதலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர், மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அதனை வீடியோவில் பதிவு செய்த ஆசிரியர் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
  • JAN 31 : தமிழகத்தில் 22 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்தது
  • JAN 30 : மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம். பிப்ரவரி 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
  • JAN 30 : அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 345.
  • JAN 30 : குடியரசு தினத்தைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் 1,000 டிரோன்கள் வானில் பறந்து சிலிர்ப்பூட்ட, படைகள் பாசறைக்கு திரும்பின. தலைநகர்
  • JAN 30 : டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக நடந்து முடிந்ததும், 29-ந் தேதி படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கமான ஒன்று.
  • JAN 30 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி நடக்கவுள்ள நிலையில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 52 தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
  • JAN 30 : தமிழகத்தில் பாதிப்பு வேகமாக குறைகிறது. 24 ஆயிரத்து 418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • JAN 30 : எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் பிப்ரவரி1 1 ஆம் தேதி வெளியீடு! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
  • JAN 30 : உள்ளாட்சி தேர்தல் 2022 முதல்பயிற்சி வகுப்பு 31.01.2022 அன்று நடைபெற உள்ளது.அப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள். தலைமையாசிரியர்கள். மற்றும் இதர பணியாளர்கள் யாவரும் தங்கள் பயிற்சி வகுப்பிற்கான அறிவிப்பு ஆணை மற்றும் அவரவர் வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை எடுத்துவருமாறும் அஞ்சல் வாக்கு சீட்டு /தேர்தல் பணி சான்று பெறுவதற்கு உரிய படிவங்களை பயிற்சி வகுப்பிலேயே பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க ஏதுவாக தயார்நிலையில் வருமாறு தேர்தல் ஆணை பெற்றுள்ள ஆசிரியர்கள்/ அலுவலக பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  • JAN 27 : தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து
  • JAN 27 : பள்ளி, கல்லூரிகள் 1-ந் தேதி திறப்பு
  • JAN 27 : ஞாயிறு முழுஊரடங்கு கிடையாது
  • JAN 27 : பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா-மத்திய ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
  • JAN 27 : அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியரின் மருத்துவ கனவு நனவாகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கலந்தாய்வில் அவர் பங்கேற்கிறார்.
  • JAN 27 : கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறப்பது குறித்த உத்தியை மத்திய அரசு வகுக்கிறது.
  • JAN 27 : தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம் தொடர்பாக தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ரிசர்வ் வங்கி அதிகாரி நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
  • JAN 27 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாளையும் மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • JAN 27 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், விதிகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  • JAN 27 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது செலுத்தப்படும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகளில் சட்டவிதிமீறல் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
  • JAN 27 : ‘1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தில் இருமொழி கொள்கையே அரசின் மொழி கொள்கையாக கடைபிடிக்கப்படுகிறது’, என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
  • JAN 27 : மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நடந்தது.
  • JAN 26 : மத்திய அரசின் ஐ.ஏ.எஸ். விதிகள் திருத்தத்துக்கு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட எதிர்க்கட்சி ஆளும் 9 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
  • JAN 26 : தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி களுக்கு பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 22-ந்தேதி நடைபெறும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  • JAN 26 : குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
  • JAN 26 : தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • JAN 26 : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு அனுமதிச் சீட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
  • JAN 26 : பத்மபூஷண் விருது பெறும் தமிழரான டாடா குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன், தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கூகிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கும், பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் தமிழர்களான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஷெனாய் இசைக்கலைஞர் பண்டிட் எஸ்.பல்லேஷ், சமூக சேவகர் எஸ். தாமோதரன், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, சதிர் நடனக்கலைஞர் விராலிமலை ரா. முத்துக்கண்ணம்மாள், கிளாரினெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி.நடராஜன், டாக்டர் வீராசாமி சேஷையா, புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் ஏ.வி.முருகைய்யன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது.
  • JAN 26 : 2021-2022-ம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான தர வரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு பள்ளி மாணவர் ராகுல் மாநில அளவில் 9-வது இடத்தையும், கடலூர் மாவட்டத்தில் முதலிடத்தையும் பிடித்தார். சாதனை படைத்த மாணவரை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
  • JAN 26 : வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கண்டன கருத்துகளை நீக்கி சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
  • JAN 26 : ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை வலியுறுத்திய மோடி, இதுபற்றிய விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
  • JAN 26 : சட்டசபை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தமிழக அதிகாரிகளுக்கு டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
  • JAN 26 : தமிழகத்தில் நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யார் யார் போட்டியிட தகுதியற்றவர்? என்பதற்கான கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
  • JAN 26 : தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு குறைவாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
  • JAN 25 : 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஏப்ரல் கடைசியிலா? அல்லது மே மாதத்தில் நடத்தலாமா? என்று பேசிக்கொண்டிருக்கிறோம். எப்படியென்றாலும் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
  • JAN 25 : 5 மாநில சட்டசபை தேர்தலே நடைபெறும்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட்டு, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளது.
  • JAN 25 : தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • JAN 25 : கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • JAN 25 : தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
  • JAN 25 : தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 43 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17,471 ஆண்கள், 12,744 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 215 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • JAN 25 : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அவகாசத்தை 4 மாதம் நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • JAN 25 : ‘பால புரஸ்கார்’ விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். உள்நாட்டு பொருட்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
  • JAN 25 : உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.
  • JAN 25 : பாகிஸ்தான் விடுதலை பெற்றது முதல் இத்தனை ஆண்டுகளாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் ஆண்கள் மட்டுமே நீதிபதிகளாக பதவி வகித்து வந்தனர்.இந்த சூழலில் லாகூர் ஐகோர்ட்டின் நீதிபதியான ஆயிஷா மாலிக் என்பவரை சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் நீதித்துறை ஆணையம் பரிந்துரை செய்தது.
  • JAN 25 : விருதுநகர் சிறுமியின் கண்டுபிடிப்புக்கு பால புரஸ்கார் விருது
  • JAN 25 : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். இந்த படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
  • JAN 24 : ஐ.ஏ.எஸ். பணி விதிகளை திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
  • JAN 24 : கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 3-வது வாரமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இருப்பினும் முகூர்த்தநாள் என்பதால் சில இடங்களில் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
  • JAN 24 : இந்திய குடியரசு தினவிழா 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
  • JAN 24 : தமிழகத்தில் பாதிப்பு சற்றே குறைந்துள்ளது. 30 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • JAN 24 : சுதந்திரம் பெற்ற 100 ஆண்டுகளுக்குள் புதிய இந்தியாவை உருவாக்கும் இலக்கை எட்டுவதில் இருந்து இந்தியாவை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று நேதாஜியின் முப்பரிமாண ஒளி வடிவ சிலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசினார்.
  • JAN 24 : இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி நாட்டின் விடுதலைக்காக போராடிய மாபெரும் தலைவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர், கடந்த 1897-ம் ஆண்டு, ஜனவரி 23-ந் தேதி ஒடிசா மாநிலம், கட்டாக்கில் வங்கக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர்.இவரது 126-வது பிறந்த நாளை நாடு நேற்று கொண்டாடியது. இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், "நான் நேதாஜியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவணங்குகிறேன். அவர் நமது நாட்டுக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைத்து, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறோம்" என்று கூறி உள்ளார்.
  • JAN 24 : இந்தியாவில் சமூக தொற்றாக மாறிய ஒமைக்ரான் பாதிப்பு மத்திய அரசு தகவல்
  • JAN 24 : கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • JAN 24 : இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஒரு நாளில் 3.33 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.
  • JAN 24 : இன்னும் 14 நாளில் கொரோனா தொற்று உச்சம் அடையும் என்று சென்னை ஐ.ஐ.டி. கணித்துள்ளது.
  • JAN 24 : தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
  • JAN 23 : தமிழின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
  • JAN 23 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகை 2 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • JAN 23 : தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
  • JAN 23 : இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக சரிந்து வருகிறது. தற்போது கையிருப்பும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான அன்னிய செலாவணி நெருக்கடியை அந்த நாடு எதிர்கொள்கிறது.
  • JAN 23 : கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.100 கோடியில், தஞ்சை-விக்கிரவாண்டி இடையே கட்டப்பட்டு வரும் அணைக்கரை மேம்பாலம் சரிந்து விழுந்தது.
  • JAN 23 : ஒகேனக்கல் 2-வது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
  • JAN 23 : தேனி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறைக்கு ஒதுக்கிய நிதியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு, கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
  • JAN 23 : இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பில் சிறிது சரிவு ஏற்பட்டது. 24 மணி நேரத்தில் 3.37 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.
  • JAN 23 : தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
  • JAN 23 : தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 4-ஐ திறம்பட செயல்படுத்தி சட்டத்தை வலிமையாக அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
  • JAN 23 : டிஜிட்டல் இந்தியா விற்பனையில் சலுகை, தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ளது.
  • JAN 22 : கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தீவிரமாக கடைப்பிடித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
  • JAN 22 : இடஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டத்திலும் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.
  • JAN 22 : பொங்கல் பரிசு தொகுப்பில் பல கோடி ரூபாய் கமிஷன் பெற்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்து உள்ளார்.
  • JAN 22 : பொங்கல் பரிசு தொகுப்புக்கு தரமற்ற பொருட்கள் வினியோகம் செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
  • JAN 22 : அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் ஆன்லைனில் ஒரே மாதிரியாக நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
  • JAN 22 : சென்னை போலீசார் விடுமுறைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
  • JAN 22 : தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அ.தி.மு.க.வினர் விருப்பமனு அளிக்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.
  • JAN 22 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:12,820 இடங்களிலும் பா.ம.க. தனித்துப் போட்டி- தொண்டர்களுக்கு, டாக்டர் ராமதாஸ் கடிதம்
  • JAN 22 : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (சனிக்கிழமை) விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே பதிவாகி இருக்கிறது.
  • JAN 22 : தேச விரோத செயல்பாடு மற்றும் பொய் செய்திகளை வெளியிட்டு வரும் இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • JAN 22 : தமிழகத்தில் நேற்று (22.01.2022) 29 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் தொற்று அதிவேகமாக உயர்ந்துள்ளது.
  • JAN 22 : ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தால், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தினந்தோறும் உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று முன்தினம் 3 லட்சத்தை கடந்தது. 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 ஆக உயர்ந்தது. இதுவரை மொத்தம் 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 17.94 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 16.56 சதவீதமாகவும் பதிவானது.
  • JAN 22 : வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை தனிமைப்படுத்துதல் கட்டாயம் அல்ல என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
  • JAN 22 : இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டது. இந்துக்கள் மட்டும் பிப்ரவரி 21-ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 மற்றும் 24ம் தேதிகளில் செயல் அலுவலர்களுக்கான தேர்வு நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது.
  • JAN 22 : TNPSC Department Exam Dec-2021 Hall Ticket Dowload துறைத்தேர்வுக்கான நுழைவு அனுமதிச்சீட்டு தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ==
  • JAN 21 : நாட்டிலேயே மிக அதிக மக்கள்தொகை உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சி அதன் 2022 உபி சட்டமன்ற பொதுதேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்த்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது
  • JAN 21 : TEACHERS SENIORITY LIST அனைவரும் அவரவர்களின் SENIORITY LIST , INDIVIDUAL LOG IN இல் சென்று பார்த்துவிட்டு ஏதேனும் மாற்றம் இருப்பின் YES எனக் கொடுத்து RANK மற்றும் என்ன மாற்றம் என்று TYPE செய்து SUBMIT செய் யவும் மாற்றம் ஏதும் இல்லை எனில் NO என்று கொடுக்கவும் .
  • JAN 21 : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமையும் (23.01.22) முழு ஊரடங்கு - தமிழ்நாடு அரசு
  • JAN 21 : 22.1.2022 (நாளை) நடைபெறவிருந்த கற்றல் விளைவுகள் பயிற்சி - நாளை பள்ளி விடுமுறையின் காரணமாக 22.1.2022 க்கான பயிற்சி - கடைசி நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 24.1.2022 அன்று Maths LO training நடைபெறும்.
  • JAN 21 : நாட்டிலேயே மிக அதிக மக்கள்தொகை உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சி அதன் 2022 உபி சட்டமன்ற பொதுதேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்த்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது
  • JAN 21 : கடலூர் மாவட்டத்தில் தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
  • JAN 21 : கொரோனா 2-வது அலையுடன் ஒப்பிடுகையில் 3-வது அலையில் உயிர்ப்பலி குறைவாக உள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது.
  • JAN 21 : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 6½ கிலோ தங்கம் மற்றும் ரூ.2¾ கோடி ரொக்கம் சிக்கியது.
  • JAN 21 : சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
  • JAN 21 : மத்திய-மாநில அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • JAN 21 : பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வர திட்டமிடப்படுவதாக எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளன.
  • JAN 21 : முலாயம்சிங்கின் இளைய மருமகளை தொடர்ந்து அவருடைய மைத்துனரும் பா.ஜனதாவில் சேர்ந்தார். காங்கிரஸ் பெண் பிரபலமும் பா.ஜனதாவில் இணைந்தார்.
  • JAN 21 : பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், தகுதிக்கான வரையறையை போட்டித் தேர்வுகளின் செயல்பாட்டுடன் சுருக்கிவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
  • JAN 21 : தவறான வீடியோ பதிவை தடுக்காவிட்டால் யூ-டியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
  • JAN 21 : வட கொரியாவில் மீண்டும் அணு ஆயுத சோதனையையும், கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணை சோதனைகளையும் நடத்த பரிசீலிப்பது என்று ஆளும் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • JAN 21 : தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடங்க இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது
  • JAN 21 : மாநிலங்களுக்கு வரி பங்கீட்டின் முன் தவணையாக ரூ.47,541 கோடியை விடுவிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • JAN 21 : தமிழகத்தில் நேற்று (20.01.2022) 905 குழந்தைகள் உட்பட 28 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
  • JAN 21 : ஒமைக்ரான் வைரஸ் எழுச்சியால் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்து இருக்கிறது.
  • JAN 20 : இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 2.83 லட்சமாக உயர்ந்தது. பலியும் அதிகரித்துள்ளது.
  • JAN 20 : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வருகிற 27-ந் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதில் முதல் முறையாக பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் ஆன்லைனில் நடக்கிறது.
  • JAN 20 : 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகத்தால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • JAN 20 : சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனையும், பெரும் அபராதமும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு சவுதி அரேபியாவில் வெளியாகி உள்ளது.
  • JAN 20 : தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் தற்போதைய சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • JAN 20 : சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று (20-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தேர்தலுக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளதால் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் மாற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.
  • JAN 20 : தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடா்பாக அனைத்து கட்சியினருடன் தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஒரே கட்டமாக தோ்தல் நடத்த வேண்டும் என எல்லா கட்சியினரும் வலியுறுத்தினர்.
  • JAN 20 : கலப்படம் மிக்க பொங்கல் பரிசால் ஏற்பட்ட மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க, மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி, தாங்கள் எடுத்து இருக்கும் முயற்சி பலன் அளிக்காது என்று மு.க.ஸ்டாலினுக்கு, அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
  • JAN 20 : வங்கிக்கடனை திருப்பி செலுத்தாததால், விஜய் மல்லையாவின் லண்டன் சொகுசு பங்களாவை கையகப்படுத்த இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  • JAN 20 : இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வருவதாகவும் சென்னை ஐ.ஐ.டி.யின் முதல்நிலை ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. 
  • JAN 20 : கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  • JAN 20 : சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 787 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
  • JAN 20 : காவலர் பொதுமக்கள் இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல் துறை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் போலீஸ் கமிஷன் அமைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • JAN 20 : சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவில் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது.
  • JAN 20 : தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்'25-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்
  • JAN 20 : பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிற்கு கொரோனாவிற்கான லேசான அறிகுறி ஏற்பட்டது. 
  • JAN 20 : தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடைந்துள்ளதால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
  • JAN 20 : ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் 7-வது நாளாக நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
  • JAN 20 : கொரோனா இப்போது முடிவுக்கு வராதுஉலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group
Share:

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

Categories

@ BREAKING NEWS (48) @ FLASH NEWS (3325) @ SITE MAP (1) @ செய்தி துளிகள் (4) 1.WHAT'S NEW (50) ACADEMIC CIRCULAR (1) ADMISSION UPDATES (110) AHM RELATED (1) ANDROID APP (5) ANSWER KEY (19) ARTICLES (168) ASSEMBLY UPDATES (6) AUDIO BOOK (1) AWARD UPDATES (7) BANK JOB UPDATES (25) BOOK FAIR (3) BOOKS CLASS 1 NEW (1) BOOKS CLASS 10 NEW (1) BOOKS CLASS 11 NEW (1) BOOKS CLASS 12 NEW (1) BOOKS CLASS 2 NEW (1) BOOKS CLASS 3 NEW (1) BOOKS CLASS 4 NEW (1) BOOKS CLASS 5 NEW (1) BOOKS CLASS 6 NEW (1) BOOKS CLASS 7 NEW (1) BOOKS CLASS 8 NEW (1) BOOKS CLASS 9 NEW (1) BOOKS D.ELE.ED 1 (1) BOOKS D.ELE.ED 2 (1) BOOKS EDUCATION (2) BOOKS ENGINEERING (2) BOOKS NCERT (13) BOOKS POLYTECHNIC (1) CALENDAR FOR SCHOOLS (5) CAREER GUIDANCE (1) CBSE UPDATES (2) CCE REGISTER (1) CEO TRANSFER-PROMOTION (5) CEO LIST (1) CLASS 1 STUDY MATERIALS (1) CLASS 10 STUDY MATERIALS (1) CLASS 11 BIOLOGY MATERIALS (3) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM (1) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM (1) CLASS 11 STUDY MATERIALS (1) CLASS 11 ZOOLOGY OT -EM (1) CLASS 11 ZOOLOGY OT -TM (1) CLASS 11 ZOOLOGY OT -TM_2 (13) CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO (1) CLASS 12 BIOLOGY BOTANY OT EM (1) CLASS 12 BIOLOGY BOTANY OT TM (2) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM (1) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM (1) CLASS 12 STUDY MATERIALS (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 ZOOLOGY OT EM (1) CLASS 12 ZOOLOGY OT TM (1) CLASS 12 ZOOLOGY TM (1) CLASS 2 STUDY MATERIALS (1) CLASS 3 STUDY MATERIALS (1) CLASS 4 STUDY MATERIALS (1) CLASS 5 STUDY MATERIALS (1) CLASS 6 STUDY MATERIALS (1) CLASS 7 STUDY MATERIALS (1) CLASS 8 STUDY MATERIALS (1) CLASS 9 STUDY MATERIALS (1) CLASS_11_BIO_ZOO_OT_TM_2 (12) CLASS_11_OT (4) CLASS_12_BIO_BOT_OT_EM_2 (10) CLASS_12_BIO_BOT_OT_TM_2 (10) CLASS_12_BIO_ZOO_OT_TEM_2 (12) CLASS_12_OT (6) CLASS_12_ZOO_OT_TEM_2 (13) CLASS_12_ZOOLOGY_TM (3) COACHING CENTRES (6) COLLEGE UPDATES (22) COMPUTER TEACHERS UPDATES (10) CoSE (11) COUNSELLING UPDATES (23) COURT UPDATES (26) CPS (3) CPS UPDATES (12) CRC (1) CSE (2) CSE_2 (55) CTET (2) D.A G.O (4) D.A NEWS (7) DEE (5) DEO EXAM UPDATES (18) DEO TRANSFER-PROMOTION (2) DGE (20) DRESS_CODE (1) DSE (26) E-BOOKS DOWNLOAD (1) EDU UPDATES (1464) EDUCATION NEWS (1) ELECTION (2) EMAIL ME (1) EMIS (1) EMPLOYMENT UPDATES (444) EQUIVALENCE OF DEGREE (2) EXAM ESLC (7) EXAM NOTIFICATION (16) EXAM UPDATES (73) EXCEL TEMPLATE (3) FIND TEACHER POST (10) FONTS -TAMIL (1) FORMS (5) G.K NEWS (17) G.O DOWNLOAD (19) G.O UPDATES (93) G.O_NO_001-100_2 (1) G.O_NO_101-200_2 (2) G.O_NO_201-300_2 (1) G.O_NO_601-700_2 (1) GPF (2) GUIDE - ARIVUKKADAL BOOKS (1) GUIDE - BRILLIANT GUIDE (1) GUIDE - DEIVA GUIDE (1) GUIDE - DOLPHIN GUIDE (1) GUIDE - DON GUIDE (1) GUIDE - FULL MARKS GUIDE (1) GUIDE - GEM GUIDE (1) GUIDE - JAMES GUIDE (1) GUIDE - JESVIN GUIDE (1) GUIDE - KONAR GUIDE (1) GUIDE - LOYOLA GUIDE (1) GUIDE - MERCY GUIDE (1) GUIDE - PENGUIN GUIDE (1) GUIDE - PREMIER GUIDE (1) GUIDE - SARAS GUIDE (1) GUIDE - SELECTION GUIDE (1) GUIDE - SURA GUIDE (1) GUIDE - SURYA GUIDE (1) GUIDE - WAY TO SUCCESS GUIDE (1) HM GUIDE (1) HM TRANSFER-PROMOTION (1) HOLIDAY G.O (4) HOLIDAY UPDATES (17) IFHRMS (2) INCOME TAX UPDATES (2) IT FORM (24) JACTO GEO (2) JD TRANSFER-PROMOTION (3) KALVI TV_2 (2) KALVI_VELAIVAIPPU (43) KALVISOLAI - CONTACT US (1) KALVISOLAI - TODAY'S HEAD LINES (2) KAVITHAIKAL (1) LAB ASST (1) LEAVE (1) LOAN (1) maternity leave (1) MRB UPDATES (5) NCERT NEWS (1) NEET EXAM UPDATES (67) NEET NOTIFICATIONS (1) NEET STUDY MATERIALS (9) NET-SET UPDATES (25) NET-SET NOTIFICATION (11) NEW INDIA SAMACHAR (1) NEWS - INDIA (9) NEWS LIVE (1) NHIS (1) ONE DAY SALARY (1) ONLINE TEST (53) PART TIME TEACHERS UPDATES (4) PAY COM UPDATES (27) PAY ORDERS (27) PAY SLIP DOWNLOAD (1) PENSION NEWS (2) PG SENIORITY LIST (1) POLICE RECRUITMENT UPDATES (9) POLICE S.I NOTIFICATIONS (2) POLYTECHNIC LECTURER UPDATES (2) POSTS TO REMEMBER (55) POSTS-TO-REMEMBER (1) PRAYER (66) PROMOTION PANEL (2) PROMOTION PANEL_2 (88) PROMOTION UPDATES (16) PROMOTION-COUNSELLING (1) PROMOTION-COUNSELLING_2 (133) PTA QUESTION BANK (1) PTA TEACHERS (2) QUARTERLY EXAM (1) REGULARISATION ORDERS (22) RESULT - LINK (2) RESULT UPDATES (87) RH DOWNLOAD (8) RRB (1) RTE UPDATES (3) SCHOLARSHIP UPDATES (3) SCHOOL UPDATES (13) SHARE NOW (1) SMC (1) SSC UPDATES (1) STORY (8) STUDY ACCOUNTANCY (1) STUDY AGRI SCIENCE (1) STUDY ARABIC (1) STUDY AUDITING (1) STUDY AUTOMOBILE (1) STUDY BIO CHEMISTRY (1) STUDY BOTANY-BIOLOGY (3) STUDY BUSINESS MATHEMATICS (1) STUDY CHEMISTRY (1) STUDY CIVIL ENGINEERING (1) STUDY COMMERCE (1) STUDY COMPUTER (2) STUDY ECONOMICS (1) STUDY EDUCATION (2) STUDY ELECTRICAL ENGINEERING (1) STUDY ELECTRONIC ENGINEERING (1) STUDY ENGINEERING (2) STUDY ENGLISH (1) STUDY ETHICS (1) STUDY FOOD SERVICE MANAGEMENT (1) STUDY GENERAL MACHINIST (1) STUDY GENERAL STUDIES (1) STUDY GEOGRAPHY (1) STUDY GEOLOGY (1) STUDY HINDU RELIGION (1) STUDY HISTORY (1) STUDY HOME SCIENCE (1) STUDY KANNADA (1) STUDY LAW (1) STUDY LIBRARY (1) STUDY MALAYALAM (1) STUDY MATERIALS (5) STUDY MATHEMATICS (1) STUDY MECHANICAL ENGINEERING (1) STUDY MEDICINE (1) STUDY MICROBIOLOGY (1) STUDY NURSING (1) STUDY NUTRITION (1) STUDY OFFICE MANAGEMENT (1) STUDY PHYSICAL EDUCATION (1) STUDY PHYSICS (1) STUDY POLITICAL SCIENCE (1) STUDY POLYTECHNIC (1) STUDY PSYCHOLOGY (1) STUDY SANSKRIT (1) STUDY SCIENCE (1) STUDY SOCIAL SCIENCE (1) STUDY SOCIOLOGY (1) STUDY STATISTICS (1) STUDY STENOGRAPHY (1) STUDY TAMIL (1) STUDY TELUGU (1) STUDY TEXTILES (1) STUDY TYPE WRITING (1) STUDY URDU (1) STUDY ZOOLOGY-BIOLOGY (3) STUDY_MATERIALS_2 (1) SYLLABUS DOWNLOAD (6) TALENT EXAM MATERIALS (1) TALENT EXAM UPDATES (3) TAMIL NADU UPDATES (80) TANCET EXAM UPDATES (3) TEACHERS TRANSFER COUNSELLING UPDATES (34) TECHNICAL EXAM UPDATES (2) TET (1) TET OFFICIAL ANSWER KEY (6) TET STUDY MATERIALS (16) TET UPDATES (54) TEXT BOOKS DOWNLOAD (16) TEXT BOOKS NEWS (6) TEXT MATERIALS (1) TIME TABLE EXAM (34) TN (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1 (2) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4 (1) TN PROMOTION - TRANSFER - COUSELLING (1) TN TEXT BOOKS ONLINE (1) TNCMTSE (3) TNFUSRC MATERIALS (1) TNPSC ANNUAL PLANNER (9) TNPSC ANSWER KEY (1) TNPSC BULLETIN (1) TNPSC CURRENT AFFAIRS (19) TNPSC DEPARTMENTAL EXAM (18) TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST (61) TNPSC NOTIFICATION (51) TNPSC PRESS RELEASE (3) TNPSC STUDY MATERIALS (35) TNPSC SYLLABUS (1) TNPSC UPDATES (182) TNUSRB MATERIALS (2) TOP-POSTS (13) TRANSFER UPDATES (16) TRB ANNUAL PLANNER (6) TRB ANSWER KEY (3) TRB BEO (2) TRB NOTIFICATIONS (29) TRB RESULT (5) TRB SPECIAL TEACHERS (1) TRB STUDY MATERIALS (3) TRB UPDATES (144) TRUST EXAM (3) TTSE (3) UGC NEWS (4) VIDEO (6) VIDEOS FOR TNPSC (1) WEBSITE (1) What's New. (1) WHATSAPP UPLOAD 2023 (2)

Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Blog Archive

Recent Posts

Featured Post

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு.

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு. NEED ...

Followers

Pages