- தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்; சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிப்பு.
- சென்னை கல்வி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு; மழை காரணமாக கடந்த 2ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய இன்று வேலைநாள்.
- 2 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு ரஷ்யா புறப்பட்டார் புடின்; டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் வழியனுப்பினர்.
- இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 2030ஆம் ஆண்டு வரையிலான பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்து; இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்தவும் இலக்கு.
- பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக செயல்பட்டு வருகின்றன - பிரதமர் நரேந்திர மோடி.
- நாடு முழுவதும் 4ஆவது நாளாக நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து; பிற விமானங்களில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதால், விமான நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதம்.
- திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு; அரசின் வழக்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி பதில்.
- 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைப்பதே ஜெயலலிதாவுக்கு செலுத்தும் உண்மையான புகழஞ்சலி; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளில் எடப்பாடி பழனிசாமி உறுதி.
- டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி: தனிக்கட்சி தொடங்குவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் விளக்கம்.
- சென்னையில் தவெக தலைவர் விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு; தமிழ்நாடு அரசியல் நிலவரம் தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல்.
- தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் 1,120 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. யெஸ் வங்கி தொடர்பான மோசடி வழக்கில் நடவடிக்கை; இந்த வழக்கில் இதுவரை, ரூ.10,000 கோடிக்கு மேலான அனில் அம்பானி குழும சொத்துக்கள் முடக்கம்.
- ரயில்களில் முன்பதிவு செய்யும்போது விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும் மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேல் வயதுள்ள பெண்களுக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க ஏற்பாடு - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
- அம்பேத்கரின் தலைமைத்துவம், நீதி, சமத்துவம், அரசமைப்பு மீதான அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்துகிறது; பாபாசாகேப் அம்பேத்கரை நினைவுகூர்வோம். கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் தலைமுறைகளை தூண்டியவர்; வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப அம்பேத்கரின் லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும். - அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி X தள பதிவு.
- பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'எக்ஸ்' சமூக ஊடக நிறுவனத்திற்கு ரூ.1,259 கோடி அபராதம் டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிகளை மீறியதாக 'எக்ஸ்' நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம்.
- திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, மத்திய அமைச்சர் எல்.முருகன் இடையே காரசார விவாதம்.
- "புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை தவெக பொதுக்கூட்டம் நடைபெறுவது உறுதி" - என்.ஆனந்த்.
- சென்னையில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதிச் சுற்றில், பெல்ஜியம் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு இந்தியா முன்னேறியது
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment