விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 286 பேர் மாறுதல் (டிரான்ஸ்பர்) பெற்றனர்.விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சி.இ.ஓ., குப்புசாமி தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஒ., பன்னீர்செல்வம், டி.இ.ஓ.,க்கள் பூபதி, கலியப்படையாச்சி முன்னிலையில் 10 தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் கலந்தாய்வு முகாமை நடத்தினர்.காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதன் படி ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாறுதல் இடங்களைக் கோரினர். விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டது.
கலந்தாய்வில் பங்கேற்ற முதுகலை ஆசிரியர்கள் 192 பேரில் 75 பேர் விரும்பிய மாறுதல் பெற்று சென்றனர். இதே போல் முகாமில் பங்கேற்ற 536 பட்டதாரி ஆசிரியர்களில் 162 பேர் மாறுதல் பெற்றனர். 34 இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றதில் 17 பேர் மாறுதல் பெற்றனர்.ஆசிரிய பயிற்றுநர்கள் 45 பேர் பங்கேற்று அதில் 8 பேர் மாறுதல் பெற்றனர். சிறப்பு ஆசிரியர்கள் 40 பேர் பங்கேற்று 24 பேர் மாறுதல் பெற்றனர். இதன் மூலம் நேற்று நடந்த கலந்தாய்வு முகாமில் 847 ஆசிரியர்கள் பங்கேற்றதில் 286 பேர் விரும்பிய மாறுதல்களை பெற்று சென்றனர். மாறுதல் கலந்தாய்வில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியர்கள் குவிந்ததால் அரசு மகளிர் பள்ளி வளாகம் திருவிழாக் கூட்டம் போல் பரபரப்புடன் காணப்பட்டது.தொடர்ந்து இன்று (19ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடக்கிறது.
No comments:
Post a Comment