'இந்தியர்களிடையே சோம்பல் அதிகமாக உள் ளது. சீனர்களை போல், கடினமாக உழைக்கும் பழக் கத்தை இந்தியர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்'என, புத்த மத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். புத்த மத தலைவர் தலாய்லாமா, டில்லி இந் திரா காந்தி திறந்த நிலை பல்கலையில் நடந்த விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:சீன மக்கள் கடினமாக உழைப் பவர்கள். சீனர்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும், அவர்கள் வசிக்கும் பகுதியையே சீனா போல் மாற்றி விடுவர். ஆனால், இந்தியர்களிடையே சோம்பல் அதிகமாக உள்ளது. சோம்பலை கைவிட்டு, சீனர்களைப் போல் கடினமாக உழைத் தால் இந்தியா பொருளாதாரத்தில் மிகப் பெரிய வளர்ச் சியை எட்டி விடும்.
பொருளாதார ரீதியாக சீனா மிகப் பெரிய வளர்ச் சியை அடைந்திருந்தாலும், தகவல் தொடர்பில் வெளிப்படையின்மை, ஜனநாயகம் போன்றவற் றில் பல மடங்கு பின் தங்கி உள்ளது. ஒரு நாட்டுக்கு நிதி மிகவும் அவசியம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் ஜனநாயகம், அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளிப்பது போன்ற விஷயங்களும் அவசியம். பிரதமர் மன் மோகன் சிங் கூட, சமீபத் தில் இந்த கருத்தை தெரிவித்து இருந்தார். சீனாவில் மீடியாக்களுக்கு அதிக கட்டுப்பாடு உள்ளது. தங்கள் கருத்துக் களை வெளிப்படையாக கூற முடியாத அளவுக்கு அவர்களுக்கு கட்டுப்பாடு உள்ளது. இந்தியா, மிகவும் உயர்ந்த கலாசாரத்தை உடையது. இருந்தாலும், காஷ்மீர் விவகாரம் போன்ற சில பிரச்னைகள் உள்ளன. இது, பிரிவினையால் ஏற் பட்ட பிரச்னை. இந்த பிரிவினையை காந்திஜி ஒருபோதும் விரும்பியது இல்லை. இவ்வாறு தலாய் லாமா கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||