தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில், 57 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடைக்கோடி மாவட்டமான, கன்னியாகுமரியில் சில தினங்களாக வனத்துறையினர், அங்குள்ள காடுகளில் யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு பணிகளை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி, வேளிமலை சரகங்களில் யானைகள் எதுவும் தென்படவில்லை. ஆனால், குளியல், அழகிய பாண்டியபுரம் சரகங்களில் கணக்கெடுப்பில் 18 யானைகள் தென்பட்டன. அதேபோல், குலசேகரபுரம் சரகத்தில் 21 யானைகளும் இருப்பது தெரியவந்தது.
இது தவிர மேலும் சில பகுதிகளில் 18 யானைகள் தென்பட்டன.கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இம்மாவட்டத்தில் 60க்கும் அதிகமான யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், இவ்வாண்டு இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தமிழக-கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள காடுகளில், யானைகள் இங்கும் அங்குமாக இடம் பெயர்வது உண்டு. சபரிமலை சீசன் காலத்தில் கேரளாவில் இருந்து யானைகள் தமிழக காடுகளுக்கும், இங்கு கோடை காலத்தில் நீர் கிடைக்காமல் யானைகள் கேரள காடுகளுக்கும் செல்வது உண்டு.தற்போது கேரளாவிலும், தமிழகத்திலும் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.
கேரளாவில் இன்னும் பருவமழை துவங்க சிறிது நாட்கள் உள்ள நிலையில், இரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் காடுகளில் யானைகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.பொதுவாக காடுகளில் யானைகள் குறித்து, கணக்கெடுக்கும் பணி யானைகளின் மலம், கால் தடங்கள், கால் தடத்தின் அளவு ஆகியவை கொண்டு தான் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது யானைகளை நேரில் கண்ட பின் தான் கணக்கிடப்படுகிறது.ஒவ்வொரு காட்டிலும், 500 எக்டேர் நிலப் பரப்பில் மூன்று பேர் கொண்ட குழு தான் இதற்கான கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு, 40 குழுக்கள் பல்வேறு காடுகளில் அலைந்து தான் யானைகளின் மேற்கண்ட கணக்கு விவரம் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment