நாங்குநேரி தாலுகாவில் 2500 ஏக்கர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 400 ஏக்கரில் பணிகள் நடக்கிறது. பொறியியல், மருந்து பொருட்கள், உயிரி தொழில்நுட்பம், ஜவுளி, மின்னணுவியல், ஹார்டுவேர், தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன. பொருளாதார மண்டலம், செப்டம்பரில் செயல்பட துவங்கும்.
இங்கு தொழில் நிறுவனங்களை அமைத்தால், தொழில்துறையினருக்கு முதல் 5 ஆண்டில் 100 சதவீதம், அடுத்த 5 ஆண்டில் 50 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வெளிநாட்டினர் 100 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சுங்கவரி, கலால் வரி, ஏற்றுமதி வரிச்சலுகை பெறலாம். ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள் வாங்கவும் சலுகை வழங்கப்படும்.
நாங்குநேரியில் இருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு 3 மணி நேரத்திலும், தூத்துக்குடி கப்பல் துறைமுகத்துக்கு ஒன்றரை மணி நேரத்திலும் சென்றடையலாம். ஏற்றுமதிக்கு எளிதாக இருக்கும். ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து வசதி நன்றாக உள்ளது. தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தண்ணீருக்கு தாமிரபரணியில் இருந்து தனி பைப் லைன் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பணி 2 ஆண்டில் நிறைவடையும். தொழில் நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க அரசு உறுதி அளித்து உள்ளது
No comments:
Post a Comment