டில்லி, தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து, திறன்மிக்க ஆங்கில ஆசிரியர்களை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சியின் மூலம், சர்வதேச அளவிலான ஆங்கில திறனை, அரசு பள்ளி குழந்தைகள் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
மொழிகள் பல இருந்தாலும் ஆங்கிலத்திற்கு, உலக அளவில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆங்கிலம் பேசுபவர் கள் தான், உலகத்தில் பல நாடுகளில் உள்ளனர். ஆங்கிலம் தெரிந்தால், உலகை வலம் வருவது எளிது. ஆங்கிலம் படித்தால் வேலை வாய்ப்பு அதிகமென, இன்றைய இளைஞர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஆங்கில திறனை சோதிக்கும் டோபல் மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு படிக்கவும், வேலை தேடியும் செல்லும் இந்திய இளைஞர்கள், டோபல் மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுகளில் வெற்றிபெற வேண்டியது கட்டாயம். இந்த தேர்வின் சான்றிதழுக்கு, இந்திய சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. இந்நிலையில், ஐதராபாத்திலுள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகம் அகில இந்திய ஆங்கில மொழி சோதனை ஆணையத்தை ஏற்படுத்தி, அதில் ஆங்கில மொழி திறனை அதிகரிக்கும், டோபல் மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., அளவிற்கு தரப்படுத்தப் பட்ட தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு வரும், 30ம் தேதி நடத்தப்படுகிறது. 'இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்பதால், இம் மாணவர் களுக்கு ஆங்கில திறன் தேர்வை நடத்துவது குறித்து, மத்திய மேல்நிலை கல்வி வாரியத்துடன் ஆலோசனை செய்து வருவதாக, இப்பல்கலை நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த ஆங்கில திறன் தேர்வுகள், பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு என மூன்று நிலைகளில் நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, திறமை சான்றிதழ் வழங்கப்படும். வெளிநாடுகளில் இந்த தேர்வை எழுத 8,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், இந்தியாவில் 1,500 ரூபாய் மட்டுமே ஆகும். படிக் கவும், எழுதவும், தொடர்ச்சியாக பேசவும், பேசுவதை கவனிப்பது ஆகிய திறன்கள் இம்முறையில் சோதிக்கப்படுகின்றன.
உலக அளவில் திறன் போட்டிகளை நடத்த, கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்துடன், இந்திய ஆங்கில மொழி ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது, அரசு பள்ளிகளிலும் ஆங்கி லத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.எனவே, டில்லி, தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட ஏழு மாநிலங் கள் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து, திறன்மிக்க ஆங்கில ஆசிரியர்களை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் களுக்கான இந்தபயிற்சியின் மூலம், சர்வதேச அளவிலான ஆங்கில திறனை அரசு பள்ளி குழந்தைகள் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||