2010 கல்வி ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆப் ( தகுதி மதிப்பெண் ) குறைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மாற்றி அமைக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கட் ஆப் 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டு்ள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 45 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட் ஆப் 40 சதவீதமாகவும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான கட் ஆப் 35 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், சட்டசபை உறுப்பினர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி கட் ஆப் மதிப்பெண்ணை குறைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் இவ்வாண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும். மாணவர்களின் விருப்பமும் நிறைவேறும். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும். மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டிருப்பதுடன் ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவருக்குரிய இன்ஜினியரிங் படிப்பு கல்விக் கட்டண தொகையை அரசே செலுத்துவதாலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றார்.
No comments:
Post a Comment