Posts

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 1870 பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு - பள்ளிக் கல்வித்துறை திட்டம்.

பத்து லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் கூறினார்.

2013ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

D.E.O to C.E.O Promotion | தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் சி.சண்முகம் பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராக (SSA) நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பொ.அருண்பிரசாத், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.

ஓவியம், தையற்கலை, நடனம் மற்றும் இசை பாடங்களுக்கான அரசு தொழிற்கல்வி தேர்வு ஹால் டிக்கெட், நவம்பர் 20 முதல் வழங்கப்படுகிறது.

கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது.தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக டி.டி.எட் படித்து இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் நகல் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ படிக்கவில்லை என்பதை காரணம் காட்டி இந்த கல்வியாண்டில் இவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 18ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Happy Diwali | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்

தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தை, அடுத்த கல்வியாண்டில் (2013 - 14) ஒன்பதாம் வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பிற்கும் நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு 15.11.2012 முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்த்துவதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.

TNPSC GROUP II RESULT WITHIN 45 DAYS || குரூப் 2 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் கூறியுள்ளார். விடைகள் ஒரிரு நாட்களில் இணையதளத்தில் வெளியாகிறது.

TRB TET REEXAM RESULT | TRB TET தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில் 10 ஆயிரத்து 187 பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தாளில் 8,793 பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மேல்நிலை இரண்டாம் ஆண்டு வகுப்பிற்கு 19.12.2012 முதல் 10.01.2013 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 19.12.2012 முதல் 07.01.2013 வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

www.dse.tn.gov.in | தமிழக பள்ளிக்கல்வி இயக்ககத்தின் புதிய இணையதளம் www.dse.tn.gov.in இதில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் செய்திகள், அரசாணைகள், அனைத்து பணியாளர்களின் பணிமூப்பு பட்டியல் போன்ற விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத் தொகையை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.