உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

BT TO PGT PROMOTION PANEL DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

PGT,HSHM TO HSSHM PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (TAMIL) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ENGLISH-SM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ENGLISH-CM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (MATHS) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (PHYSICS) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (CHEMISTRY) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (BOTANY) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ZOOLOGY) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ECONOMICS-SM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (ECONOMICS-CM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (COMMERCE-SM) PROMOTION PANEL DOWNLOAD | BT TO PGT (COMMERCE-CM) PROMOTION PANEL DOWNLOAD | பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல், பதவி உயர்வு அளிக்கப்படவுள்ள ஆசிரியர்களை காட்டிலும் அதிகமாக தயாரிக்கப்பட்டு, தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் இரண்டாம் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது  DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB SPECIAL TEACHERS RECRUITMENT 2017 | தமிழக அரசு பள்ளிகளில் 1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TRB SPECIAL TEACHERS RECRUITMENT 2017 | 1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் | தமிழக அரசு பள்ளிகளில் 1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் 2011 புள்ளி விவரத்தின்படி 80.33 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இந்திய அளவில் அதிகமான கல்வி அறிவு பெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழக கல்வித் துறையில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், அதிகமானவர்களை கல்வி அறிவைப் பெற தூண்டி உள்ளது.மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக டி.ஆர்.பி. அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப டி.ஆர்.பி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி 1325 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் கலை போன்ற சிறப்பு ஆசிரியர் பணியிடங்களாகும்.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், அதிகபட்சம் 57 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 1-7-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு ஆகியவற்றுடன், பணி சார்ந்த கலைப் படிப்புகளிலும் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி., எஸ்.சி.எ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை இணையதளம் வழியாக செலுத்தலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 18-8-2017-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு 23-9-2017-ந் தேதியாகும்.விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் : http://trb.tn.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.  
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD | 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் இன்று (31.07.2017) வெளியிடப்படுகிறது

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் இன்று (31.07.2017) வெளியிடப்படுகிறது | தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் இன்று (31.07.2017)  வெளியிடப்பட உள்ளது. இது மாணவர்களிடையே நிலவும் தேவையற்ற அச்ச உணர்வினை போக்க உதவும். அத்துடன் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு 450 பயிற்சி மையங்கள் மூலம் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும். அத்ததுடன் ஆரம்ப கல்வி வகுப்புகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அறிமுகம் செய்வது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். PLUS ONE MODEL QUESTION PAPER DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் | பிளஸ்-1 மாணவர்களின் அச்சத்தை போக்க சிறப்பு திட்டம் | பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் | 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய புத்தகத்திற்கான திட்டம் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.இதன் மூலம் ஒரு கோடியே 27 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். | தமிழகத்தில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதை அரசு ரத்து செய்தது. இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருவண்ணாமலை நகராட்சி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களை ஊக்குவித்தல் நிகழ்ச்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வை நினைத்து அச்சப்பட தேவையில்லை. பிளஸ்-1 மாணவர்களின் அச்சத்தை போக்க சிறப்பு திட்டம் ஒன்றை நாளை (திங்கட் கிழமை) அரசு அறிவிக்க உள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. 1 கோடியே 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து காப்பீட்டு திட்டம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வெளியிடப்பட உள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய புத்தகத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் பொது தேர்விற்காக 450 மையங்களில் சனிக்கிழமை தோறும் முழு பயிற்சி அளிக்க விரைவில் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி வினா-விடையும் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல. முயற்சி நின்றாலும் மரணம் தான். எனவே, மாணவர்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB GOVT POLYTECHNIC LECTURER NEW NOTIFICATION | VACANCIES:1058 | EXAM DATE:16.09.2017 | ONLINE APPLY LAST DATE: 11.08.2017

TRB - POLYTECHNIC ENGINEERING LECTURES POST RECRUITMENT - NEW NOTIFICATION PUBLISHED. TRB GOVT POLYTECHNIC LECTURER NOTIFICATION  | VACANCIES:1058 | EXAM DATE:16.09.2017 | ONLINE APPLY LAST DATE: 11.08.2017 | Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt.Polytechnic Colleges for the year 2017 -18 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள்: தேர்வு நாள்: 16.09.2017 விண்ணப்பிப்பதற்கான தேதி: 29.07.2017 முதல் 11.08.2017  | DOWNLOAD-ENG | DOWNLOAD-TAMIL | DOWNLOAD-SYLLABUS | PRESS NEWS | ONLINE REGISTRATION

 1. Date of Notification : 16.06.2017
 2. Commencement of Submission of Online Applications : 29.07.2017
 3. Last date for Submission of Online Applications: : 11.08.2017
 4. Date of Written Examination : 16.09.2017

மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC HALL TICKET FOR THE WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE) TO THE POST OF GROUP-II A SERVICES.

TNPSC HALL TICKET FOR THE WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE) TO THE POST OF GROUP-II A SERVICES. | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 06.08.2017 அன்று முற்பகல், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுள் தொகுதி II-அ [நேர்காணல் அல்லாத பதவிகள்]-ல் அடங்கிய 1953 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கென 7.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application number)/பயனாளர் குறியீடு (Login id) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு 02.08.2017ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் பெயர் விண்ணப்ப எண் (Application number) தேர்வுக் கட்டணம் (ரூபாய்) கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / வங்கி வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி: நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். தேர்வு கட்டுபாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

HIGHER SECONDARY HM PROMOTION COUNSELLING POSTPONED | மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு Vவைத்து பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

HIGHER SECONDARY HM PROMOTION COUNSELLING POSTPONED | மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு வைத்து பள்ளிக்கல்வி இயக்குர் அறிவித்துள்ளார்.  2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில்   நடைபெற இருந்தது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 120  தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டிஇருந்ததால்,  இந்த சுழற்சி   பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை  இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள இருந்தனர்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC RESULT JUNE 2017 | பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று (28.07.2017) வெளியாகிறது.

SSLC RESULT | பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு இன்று (28.07.2017) வெளியாகிறது. பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு, ஜூலை, 31, ஆக., 1 என, இரண்டு நாட்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்ப செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள், இதுவரை வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் நிரப்பப் பட்டு வந்தன. தற்போது முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக அப்பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 327 ஓவிய ஆசிரியர், 663 உடற்கல்வி ஆசிரியர், 86 இசை ஆசிரியர், 248 தையல் ஆசிரியர் (மொத்த காலியிடம் 1,325) பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற இருக் கிறது. இத்தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தை (www.trb.nic.in) பயன்படுத்தி ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண் ணப்பிக்க வேண்டும் என்று அதன் தலைவர் டி.ஜெகன்நாதன் அறிவித்துள்ளார். எழுத்துத்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் பணி நியமனம் நடக் கும். எழுத்துத்தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலை வாய்ப்பு பதிவுமூப்புக்கு அதிக பட்சம் 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு பதவிக்கும் நிர்ணயிக் கப்பட்டுள்ள கல்வித்தகுதி, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை முதலான விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச் சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப் பின்போது பதிவுமூப்புக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். இறுதியாக, எழுத் துத்தேர்வு மதிப்பெண், வெயிட் டேஜ் மதிப்பெண் அடிப்படை யில் சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பதிவுமூப்பு ஆண்டுக்கான மதிப்பெண் விவரம் வருமாறு:- 1 முதல் 3 ஆண்டுகள் வரை - 1 மதிப்பெண் 3 முதல் 5 ஆண்டுகள் வரை - 2 மதிப்பெண் 5 முதல் 10 ஆண்டுகள் வரை - 3 மதிப்பெண் 10 ஆண்டுகளுக்கு மேல் - 5 மதிப்பெண் 3 லட்சம் பேர் விண்ணப்பிப்பர் பதிவுமூப்பு ஓராண்டுக்குள் இருந்தால் அதற்கு மதிப்பெண் எதுவும் அளிக்கப்படாது. சிறப்பாசிரியர் தேர்வுக்கு ஏறத்தாழ 3 லட்சம் பேர் விண்ணப்பிக்கக்கூடும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது.
 1.  SPECIAL TEACHERS - NOTIFICATION - TAMIL DOWNLOAD
 2.  SPECIAL TEACHERS - NOTIFICATION - ENGLISH DOWNLOAD
 3.  PSTM Certificate
 4.  TRB - SYLLABUS FOR DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS
 5.  TRB - SYLLABUS FOR DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS
 6.  Click here - G.O MS - 68 - DOWNLOAD
 7.  Click here - G.O MS - 21 - DOWNLOAD
 8.  Click here - Online Application form for Special Teachers
 9.  STUDY MATERIALS DOWNLOAD - 1 STUDY MATERIALS DOWNLOAD - 2
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப்பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 16.10.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 4413 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-IV தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.08.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.| The Written Examination for the post of Junior Scientific Officer in Tamil Nadu Forensic Science Subordinate Service was held on 16.10.2016 FN & AN. Totally 4413 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 15 candidates (List-IV) those who have been provisionally admitted to Certificate Verification to the said post is available at the Commission's Website " www.tnpsc.gov.in ". The Certificate Verification will be held on 04.08.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு.தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு | அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் (கணிதம், இயற்பியல், வேதியியல் ஆங்கிலம்) 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் ஓர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறி யியல் பாடத்தில் முதல் வகுப்பு பட்டமும் பொறியியல் அல்லாத பிரிவு எனில், குறிப் பிட்ட பாடப்பிரிவில் முதுகலை படிப்பில் முதல் வகுப்பு பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், பொறியியல் விரிவுரையாளர் தேர்வுக்கு முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெறாத பட்சத்தில் முதுகலை படிப்பில் (எம்இ, எம்டெக்) முதல் வகுப்பு பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர் ஆவர். ஆனால், அதற்கான வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று 1058 விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட்டது. விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்த தீர்ப்பு வெளியானது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. இதைத்தொடர்ந்து, கடைசி நாளான ஜூலை 7-ம் தேதி வரையிலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த வண்ணம் இருந்தனர். ஒருசிலர் நீதிமன்ற உத்தரவு காரணமாக, விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பு (60 சதவீத மதிப்பெண்) பட்டம் பெற்றி்ருக்க வேண்டும். முதுகலை பொறியியல் பட்டதாரி யாக இருந்தால் இளங்கலை அல்லது முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு மூலம், பிஇ, பிடெக் படிப்பில் முதல் வகுப்பு பெறாமல் எம்இ, எம்டெக் படிப்பில் முதல் வகுப்பு பெற்றிருப்பவர்களும் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆகிறார்கள். எனவே, இதுபோன்ற கல்வித்தகுதி உடைய நபர்கள் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய கால அவகாசம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, எழுத்துத்தேர்வுக்கான தேதியும் தள்ளிவைக்கப்படும்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB ANNOUNCED TO FILL 1325 SPECIAL TEACHERS | 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

TRB ANNOUNCED 1325 SPECIAL TEACHERS RECRUITMENT 2017 - NOTIFICATION - Teachers Recruitment Board College Road, Chennai-600006 Direct Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments for the years 2012 to 2016. Click here for Notification Click here - G.O MS - 21 Click here - G.O MS - 68 Click here - Online Application form for Special Teachers.NOTIFICATION - ENGLISH NOTIFICATION - TAMIL
>>>>>>>
§DATE OF NOTIFICATION26.07.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:ONLINE
§WEBSITE:http://trb.tn.nic.in/
§NAME OF THE POST:Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing)
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:1325
§SALARY:Rs.5200-20200 + GP - 2800
§SELECTION PROCEDURE:Competitive Exams
§LAST DATE:18.08.2017
§DATE OF EXAMINATION:23.09.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PGT,HSHM TO HSSHM PROMOTION COUNSELLING ANNOUNCED | அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது.

2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில்   நடைபெற உள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 120  தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டியுள்ளதால்,  இந்த சுழற்சி   பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை  இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் தவறாமல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். DOWNLOAD PANEL
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு இளைஞர் காவல் படைக்கு 10,500 பேர் நியமனம் | தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற் கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வு வாரியத்தால் 2014-ல் சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 10 ஆயிரத்து 99 நபர்களில், 8 ஆயிரத்து 500 பேர் இரண்டாம் நிலைக் காவலர்களாகத் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும் 10 ஆயிரத்து 500 பேர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, "தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. இதனை அனைத்து தபால் நிலையங்களிலும் பெற் றுக் கொள்ளலாம். அக்டோபர் 1-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தேர்வு நாள் நவம்பர் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு? மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்-மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு? மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்-மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி | நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) இருந்து விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாக் கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிறை வேற்றப்பட்டன. இந்த சட்ட மசோ தாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக அனுப்பி வைக்கப்பட் டன. அது ஏற்கப்படுகிறதா, நிராகரிக்கப்படுகிறதா என எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சூழலில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முது நிலை மருத்துவப் படிப்புகளுக் கான கலந்தாய்வு நடத்தி முடிக் கப்பட்டது. இதில் அரசு மருத்து வர்களுக்கான 50 சதவீத இடஒதுக் கீடுக்கு பதிலாக, புதிதாக மதிப் பெண் முறை கொண்டுவரப்பட் டது. இதைத் தொடர்ந்து நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், ஏழை, கிரா மப்புற மாணவர்கள் பாதிக்கப் படுவதை தடுக்க எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந் தாய்வை கடந்த 17-ம் தேதி தொடங்க தமிழக அரசு திட்ட மிட்டிருந்தது. கடந்த 14-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட இருந்த நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி கலந்தாய்வு தொடங்கவில்லை. தரவரிசைப் பட்டியலும் வெளியி டப்படவில்லை. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்த தமிழக அரசு, பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்தது. அதன்படி நேற்று டெல்லி சென்ற முதல்வர் கே.பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு கோரி பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து வலியு றுத்தி வருகின்றனர். இக்கோரிக் கையை வலியுறுத்தி பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அன்புமணி ராமதாஸ் சந்தித் தார். சி.விஜயபாஸ்கர் தலைமையி லான அமைச்சர்கள் குழுவினர், அதிமுக, திமுக எம்பிக்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாயின. இதனால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ''நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தால் ஏழை, கிராமப்புற மாணவர்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றனர்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் புதுடெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் (71) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவு கடந்த 20-ம் தேதி வெளியானது. இதில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று புதிய குடியரசுத் தலைவராக தேர்வானார். இந்நிலையில், குடியரசுத் தலைவராக இருந்து வந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜியும், ராம்நாத் கோவிந்தும் நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் அணி வகுத்து மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற வாயிலில் இருவரையும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பாரம்பரிய மரியாதை களுடன் ராம்நாத் கோவிந்த் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பதிவேட்டில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். 
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் | ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) திறந்துவைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணி அளவில் வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார். அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார். 
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களில் தேசபக்தி பாடலான 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் பங்கேற்ற கே.வீரமணி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' டைப் வினாத்தாளில் கேள்வி எண் 107-ல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால் 'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. அனைத்து பாடப்புத்தகங்களிலும் வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால் இந்த தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவனாக அறிவிக்க வேண்டும். அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். அட்வகேட் ஜெனரல் விளக்கம் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன், இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வக்கீல்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இந்த பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என்பதற்கு ஆதாரங்களுடன், இந்த ஐகோர்ட்டுக்கு உதவலாம் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி ஆஜராகி, 'வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல்' என்று விளக்கம் அளித்தார். ஐகோர்ட்டு வக்கீல்கள் எஸ்.சுஜாதா, ஏ.எஸ்.பிலால், அண்ணாத்துரை ஆகியோர் இது சமஸ்கிருத பாடல் அல்ல. வங்கமொழியில் எழுதப்பட்ட பாடல் என்று ஆதாரங்களுடன் வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.வி.முரளிதரன்... DOWNLOAD
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி 22-ந் தேதி நடக்கிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி 22-ந் தேதி நடக்கிறது | மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 22-ந் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த 'ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்ட முடிவில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் அ.மாயவன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க தாமதமானால் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசு அமைத்துள்ள குழு தீர்வுகாணாமல் காலநீட்டிப்பு செய்து வருகிறது. இதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆகஸ்டு 5-ந் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்துள்ளோம். அதைத்தொடர்ந்து 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம். அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TUFIDCO RECRUITMENT 2017 | TUFIDCO RECRUITS COMPANY SECRETARY | NO OF POST 1 | LAST DATE 09..08.2017


>>>>>>>
§DATE OF NOTIFICATION20.07.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:OFFLINE
§WEBSITE:---
§NAME OF THE POST:COMPANY SECRETARY
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:3
§SALARY:-
§SELECTION PROCEDURE:MERIT
§LAST DATE:09.08.2017
§DATE OF EXAMINATION:NIL
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்டம் - தமிழக அரசு தீவிர ஆலோசனை.

தமிழகத்துக்கு 'நீட்' தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்டம் தமிழக அரசு தீவிர ஆலோசனை | 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதற்காக அவசர சட்டம் கொண்டு வருவதற்கான தீவிர ஆலோசனையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. மருத்துவக் கல்வி இடங்களை 'நீட்' தேர்வு மூலம் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இந்தத் தேர்வினால் தமிழகத்தின் கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலருக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத சூழ்நிலை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சட்ட சபையில் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கும் சட்டத்தை ஏகமனதாக சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதியிடம் இந்த சட்டமசோதா கொண்டு செல்லப்பட்டு, அதில் அவர் கையெழுத்திட்ட பிறகுதான் அது சட்டமாக்கப்படும். இதனிடையே, இந்த ஆண்டுக்காக 'நீட்' தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. ஆனாலும், மாநிலப் பாடப் பிரிவில் படித்த மாணவர்கள் 85 சதவீதம் பேருக்கு மருத்துவக் கல்வி இடம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. 'நீட்' தேர்வு மூலம் தமிழக மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை நீக்க அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. சட்டரீதியாக கதவு அடைக்கப்பட்டதை அடுத்து, 'நீட்' தொடர்பான சட்ட மசோதாவுக்கு உயிர்கொடுக் கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது. 'நீட்' சட்டமசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து வருகின்றனர். சில அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 'நீட்' பற்றி தமிழகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள், "இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்" என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து தற்காலிக விலக்குபெறும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்துள்ள போதிலும், ஒரு ஆண்டுக்காவது 'நீட்' தேர்வில் இருந்து விலக்குபெற மாநில அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா?, அதற்கேற்ற அவசர சட்டத்தை கொண்டுவர முடியுமா?, அந்த அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? ஆகிய கேள்விகளை முன்வைத்து சட்டரீதியான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, 'சட்டரீதியான ஆலோசனை நடப்பது உண்மை என்றாலும், அவசர சட்டம் தொடர்பாக இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை' என்று கூறப்பட்டது.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக் கல்வித்துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

பள்ளிக் கல்வித்துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில், கல்வித் துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு நடுநிலைப் பள்ளிகளில், முதல் கட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளில், ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையிலும், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும், ஒன்றிய மற்றும் நகராட்சி அளவில் பயிற்சி மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்கப்படும். எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறையில் மாதந்தோறும் 2 புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.
மேலும் பல செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.