Posts

WISH YOU A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2013 | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மேல்நிலைத் தேர்வு பள்ளி மாணவர்களின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு 04.01.2013 மாலை 4.00 மணிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலை ஆன்-லைனில் பதிவதற்கு 23.01.2013 மாலை 4.00 மணிவரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அவர்கள் அறிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதஉள்ளனர். பத்தாம்‌ வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 123-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.

PGT ONLINE COUNSELLING ON 31.12.2012 10.30 AM | ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளும் முதுகலை ஆசிரியர்களுக்கான முக்கிய குறிப்புக்களை முழுமையாக படியுங்கள்.

PGT ONLINE COUNSELLING ON 31.12.2012 10.30 AM | 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை, அந்தந்த பள்ளிகளில் உள்ள இணையதள வசதியைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சிக்கு புதிதாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் உருவாக்கி தமிழக முதல்வர் உத்தரவு .

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மீகத்தை மாணவ மாணவியரிடையே எடுத்துச் சொல்லும் பணி ஆசிரியர் பணி. வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள். கரையாக் கல்விச் செல்வத்தை கற்றுக் கொடுக்க இருக்கிறீர்கள். எந்த ஒரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ் பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியப் பெருமக்கள் கண்டு இன்புறுவர். அப்படிப்பட்ட உன்னதமானப் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. இப்படிப்பட்ட பொறுப்புள்ள பணியை நீங்கள் எல்லாம் திறம்பட மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்த சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறமையை மாணவர்களிடத்திலே உருவாக்க வேண்டும். என தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் உரை நிகழ்த்தினார். அதன் முழு விவரம் ...

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை நடைபெறுகின்றது - 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை, மாணவர்களுக்கு நலத்திட்டங்களும் வழங்கப்படுகின்றது. விழாசிறக்க கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.

TRB PG RESULT - முதுகலை பட்டதாரி ஆசிரியர் இறுதி பட்டியல் (தாவரவியல் தவிர) டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 12.12.12 காலை 8.00 மணிக்குள் சென்று மற்ற தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது என்பதை கல்விச்சோலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றது.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் தயார்: முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SGT APPOINTMENT COUNSELLING | ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 11.12.12 அன்று காலை 08.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BT APPOINTMENT COUNSELLING | ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 8627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 09.12.12 ஞாயிறு அன்று காலை 08.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும், பிற மாவட்டத்திற்கு 10.12.12 திங்கள் அன்றும் கலந்தாய்வு நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களின் ஆன்லைன் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2012, அக்டோபரில் நடைபெற்ற மேல்நிலைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in மற்றும் www.kalvisolai.com இணையதளங்களில் 07.12.2012 (வெள்ளிக் கிழமை) வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலை 17.12.2012 (திங்கட்கிழமை) பிற்பகல் முதல் 19.12.2012 (புதன் கிழமை) வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறார்கள்.

டி.இ.டி இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இணையதளத்தில் இப்போது காணலாம்.

கடந்த, ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர்; பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18 ஆயிரத்து, 382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். அமாவாசை நாளான, 13ம் தேதி, முதல்வர் இவர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.