உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

CLASS 1,6,9,11 TEXT BOOKS ONLINE | தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு | தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரம் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தகவல்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர் பணி வரைமுறை செய்யப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் பணி வரைமுறை செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சுற்றுச்சுவர் தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:- தமிழகத்தில் தற்போது 98 அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ....

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு அமல் சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு அமல் சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகளின்போது ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை ஒழிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வசதியும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தரமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் தொடர்பாக 24,731 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது மொழிப் பாடங்களில் (தமிழ், ஆங்கிலம்) தாள்-1, தாள்-2 என்றிருப்பதை ஒரே தாளாக மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. சென்னை டிபிஐ வளாகத்தில் ரூ.39 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அடுக்குமாடிக் கட்டிடம் ....

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்த இடங்களுக்கு மாறுதலும் வழங்கக்கூடாது. உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்த பின்னர் பொது இடமாறுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமை மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை வரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் | 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி..

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாணவ மாணவிகள் என 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்தது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகின. இதில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 87.4 சதவீதம் பேரும், மாணவிகளில் 94.6 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் பேர் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வு முடிவில் 97.3 சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 96.4 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் 2வது இடமும் மற்றும் 96.2 சதவீதம் தேர்ச்சியுடன் கோவை 3வது இடமும் பிடித்துள்ளன. 80.21 சதவீதம் தேர்ச்சியுடன் விழுப்புரம் கடைசியிடம் பிடித்துள்ளது. மொத்தம் 2,054 மேனிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோன்று 2,724 அரசு பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. | RESULT
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS ONE RESULT MARCH 2018 | பிளஸ் ஒன் தேர்வு முடிவுகளை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் ...

PLUS ONE RESULT MARCH 2018 | பிளஸ் ஒன் தேர்வு முடிவுகளை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் ...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS ONE RESULT - MARCH 2018 | பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.


இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்துதான் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவ - மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள லாம்  www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது. | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு | 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. பிளஸ்-1 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர். நாளை வெளியீடு மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகளை ( www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in ) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

FTP PRIVATE SCHOOLS TEACHERS UPDATED VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது

தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா? தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா? (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது www.findteacherpost.com Email: contact@findteacherpost.com | DOWNLOAD VACANT LIST

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TAMIL G.K | நகரை நிர்மாணித்தவர்கள்..பாசிகள்... சரணாலயங்கள்..முக்கிய குறிப்புகள்...

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
TAMIL G.K வினா வங்கி.. நகரை நிர்மாணித்தவர்கள்... இந்தியாவின் மீது நடந்த முக்கிய படையெடுப்புகள்... ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள்... . சில மருந்துகளின் பெயர்கள்.. ‘பெயர்’ பெற்ற கிரிக்கெட் வீரர்கள்.. பறவைகள் சரணாலயங்கள்.. தமிழ் இலக்கண நூல்கள்.. அமில குணங்கள்.. ஒளிச்சேர்க்கை.. இலக்கண நூல்கள்.. பாசிகள்... சரணாலயங்கள்.. பொது அறிவு குவியல்! அறிவியல் கருவி... வைரஸ்களும், பாக்டீரியாக்களும்...முக்கிய குறிப்புகள்...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CBSE Class 12 Result On 26/05/2018 | சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

இன்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5-ம் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் 11 லட்சத்து 88 ஆயிரத்து 144 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களையும், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையு ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய மண்டலத்தில் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படுவதை சிபிஎஸ்இ அதிகாரிகளும் உறுதிபடுத்தினர். தேர்வு முடிவுகள் மதியம் 12 மணியளவில் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே 31 இல் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் சர்வர் திறனுக்கு ஏற்ப, புதிய பாடப்புத்தகங்கள் வகுப்புகள் மற்றும் பாடங்கள் வாரியாக மே 31 இல் படிப்படியாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும், புதிய பாடத் திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜி. அறிவொளி தெரிவி்த்தார். பள்ளி மாணவர்களுக்கான அனைத்து பாடப்புத்தகங்களையும் வகுப்புகள், பாடங்கள் வாரியாக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) பார்க்கலாம். அந்த வகையில், 1,6,9,11-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களையும் பாட நூல் கழக இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையம் வழியாகவும் மே 24-ம் தேதி (நாளை) முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணமாக மொழித்தாள், ஆங்கிலத் தாளுக்கு தலா ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாடம் ஆகியவற்றுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் இடத்திலேயே கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண் மூலமாகத்தான் பின்னர் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள முடியும். சிறப்பு துணை பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ளாதவர்களுக்கு ஜூன் 28-ம் தேதி சிறப்பு துணை பொதுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிப்பது குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் ...


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக ( SMS) அனுப்பப்படும். | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC EXAM MARCH 2018 RE TOTAL DETAILS | மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பள்ளி மாணாக்கர் மறுகூட்டலுக்கான கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளியில் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்கலாம். மார்ச் / ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 24.05.2018 (வியாழக் கிழமை) முதல் 26.05.2018 (சனிக் கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டல் கட்டணம் பகுதி – I மொழி - ரூ.305/- பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.305/- பகுதி – III - கணிதம், அறிவியல் மற்றும் - ரூ.205/- சமூக அறிவியல் பகுதி – IV விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/- மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும். | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு, ஜூன் / ஜூலை 2018 மார்ச் / ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC RESULT MARCH 2018 | 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (23.05.2018)வெளியீடு... இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு பார்க்கலாம்...

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு முடிவுகளை பார்க்கலாம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேரும் அடங்குவர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர். நாளை வெளியாகிறது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி (அதாவது, நாளை) வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்தது. மதிப்பெண்கள் பட்டியல் மீண்டும் சரிப்பார்க்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து முடிந்தன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன் கிழமை) வெளியாகிறது. இணையதள முகவரி இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (நாளை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவை பார்க்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

FTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது

தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா? தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா? (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது www.findteacherpost.com Email: contact@findteacherpost.com | DOWNLOAD VACANT LIST
Related Links :
 1. CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 2. CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 3. CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 4. TRB MATERIALS STUDY MATERIALS | CLICK HERE
 5. TET STUDY MATERIALS | CLICK HERE
 6. TNPSC STUDY MATERIALS | CLICK HERE
 7. NEET STUDY MATERIALS | CLICK HERE
 8. E-BOOK DOWNLOAD | CLICK HERE
 9. TNPSC ONLINE TEST | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SOCIAL SCIENCE STUDY MATERIALS ( 4 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SOCIAL SCIENCE STUDY MATERIALS ( 4 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 4 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SCIENCE - MATHS STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SCIENCE - MATHS STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 1 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 1 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS (1 BOOK ALL IN ONE) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS (1 BOOK ALL IN ONE) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு | பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். ஜாக்டோ-ஜியோ ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் - உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.தாஸ், சுரேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் க.மீனாட்சிசுந்தரம், செ.முத்துசாமி, அ.மாயவன், மு.அன்பரசு, ஆர்.தாமோதரன், க.வெங்கடேசன், நிதி காப்பாளர் மோசஸ் மற்றும் செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- காலவரையற்ற உண்ணாவிரதம் * கடந்த 8-ந்தேதி ஜாக்டோ- ஜியோ நடத்திய கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மற்றும் ஆதரவளித்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது. * ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் முள்வேலி அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு மனித உரிமைகளை மீறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. * கோட்டை முற்றுகை போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும். * பணியாளர் பகுப்பாய்வு குழுவை ரத்து செய்யவேண்டும். * நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11-ந்தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது எனவும், அன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

Related Links :
 1. CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 2. CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 3. CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 4. TRB MATERIALS STUDY MATERIALS | CLICK HERE
 5. TET STUDY MATERIALS | CLICK HERE
 6. TNPSC STUDY MATERIALS | CLICK HERE
 7. NEET STUDY MATERIALS | CLICK HERE
 8. E-BOOK DOWNLOAD | CLICK HERE
 9. TNPSC ONLINE TEST | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC - COMBINED ENGINEERING SERVICES EXAMINATION - DATE OF EXAM: 20.05.2018 FN & AN - DETAILS OF EXAMINATION

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Name of the Exam Combined Engineering Service Examination Name of the Posts Assistant Engineer (Civil), Water Resources Department,PWD Assistant Engineer (Civil), Buildings, PWD Assistant Engineer (Electrical) PWD Assistant Engineer (Civil) in Highways Department Assistant Engineer in Rural Devt. and Panchayat Raj Dept. Pay Scale Rs. 9300 – 34800 + Grade pay Rs.5100/- p.m. (Pre-revised) Notification No. 5/2018 Date of Notification 28.02.2018 Last date for submission of Application 26.03.2018 Number of Vacancies 330 No. of applications successfully Registered 68,308 No. of candidates admitted 67,795 No. of candidates Rejected 513 Qualifications B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering OR A pass in Sections A and B of the Institution Examinations under Civil Engineering branch, subject to the following further conditions namely:- I. Should furnish evidence of having undergone practical training in surveying for a period of not less than one year. OR II. Should have put in service for a period of not less than one year in Public Works Department as Overseer or Junior Engineer. OR III. Should hold the Upper Subordinate or L.C.E Diploma of the College of Engineering, Guindy OR L.C.E. Diploma awarded by the State Board of Technical Education and Training, Chennai A degree in Electrical Engineering or Electronics and Communication Engineering OR A pass in Sections A and B of the Institution Examination with Electrical Engineering as a subject. A degree in Civil Engineering OR A pass in Sections A and B of the Institution Examinations under Civil Engineering Branch. A degree in Civil Engineering OR A pass in Sections A and B of the Institution of Engineers (India) under Civil Engineering Branch, subject to the condition that he/she should furnish evidence of having undergone practical training in surveying for a period of not less than one year. Date of Examination 20.05.2018 FN & AN (SUNDAY) Subject Fore Noon - Paper-I(Subject) One of the following subjects in which the candidate has acquired his/her Degree qualification (Degree Standard – 200 questions) (i) Civil Engineering (code No.261) Or (ii) Electrical Engineering (code No. 259) Or (iii) Electronics and Communication Engineering (Code No.304) After Noon - Paper -II General Studies (100 questions) (Subject Code No-003) General Studies (Degree Standard)-75 Questions and Aptitude and Mental Ability(SSLC Standard) - 25 Questions. Mode of Examination OMR Mode – Objective Type Exam Centre 1.Chennai, 2.Madurai, 3.Coimbatore, 4.Tiruchirappalli, 5.Tirunelveli, 6.Salem, 7.Thanjavur, 8.Chidambaram, 9.Vellore, 10.Ramanathapuram, 11.Nagercoil, 12.Kancheepuram,13.Karaikudi, 14.Pudukkottai, 15.Udhagamandalam.

Related Links :
 1. CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 2. CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 3. CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
 4. TRB MATERIALS STUDY MATERIALS | CLICK HERE
 5. TET STUDY MATERIALS | CLICK HERE
 6. TNPSC STUDY MATERIALS | CLICK HERE
 7. NEET STUDY MATERIALS | CLICK HERE
 8. E-BOOK DOWNLOAD | CLICK HERE
 9. TNPSC ONLINE TEST | CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் அதாவது மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்வர். அதேபோல், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் ஆய்வு செய்வர். மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பதவிகள் மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கு இணை யான பதவியாக இருப்பதால் அந்தப் பதவிகள் மாவட்ட கல்வி அதிகாரி பதவியாக மாற்றப்படும். உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவி, வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்யப்படும். வட்டார கல்வி அதிகாரிகள் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டுமின்றி தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் (மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள்) ஆய்வு செய்து கண்காணிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்

1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல் | தமிழகத்தில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரி வித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. புதிய பாடப்புத்தகங்கள் மே இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையங்களிலும் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தனியாகவும் ஆன்லைனில் பதிவுசெய்து தங்களுக்குரிய பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகமே வழங்கப்படுகிறது. அதனால், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்களும் பாடநூல் கழகம் மூலமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் இருப்பதால் ஓராண்டுக்கான தமிழ்ப் பாடங்கள் மூன்று தொகுப்பாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் முப்பருவ முறை கிடையாது என்பதால் அந்த மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள் மட்டும் ஒரே தொகுப்பாக அச்சடித்து வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் 1 மற்றும் 9-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்களிலும் விற்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் அதன் விலை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெகந்நாதன் கூறினார். பாடநூல் கழக நூலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடநூல் கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்தது. மொழி, இலக்கியம், அரசியல், வரலாறு, புவியியல், உளவியல், தத்துவம், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தற்போது அரிய புத்தகங்கள் ஆகிவிட்டன. அந்த அரிய புத்தகங்கள் மறுமதிப்பு செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்படும் நூலகத்தில் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்பட உள்ளன. | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் | 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி..விரிவான தகவல்கள் ...

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் | 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்தனர் | பிளஸ்-2 தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்தனர். பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர். இவர்களில்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.