உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

CLASS 12 ENGLISH QUESTION BANK - IDEAL | Download


 1. CLASS 12 ENGLISH QUESTION BANK - IDEAL | Downloadவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 ENGLISH QUESTION BANK - IDEAL | Download

CLASS 11 ENGLISH QUESTION BANK - IDEAL | Download


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 ENGLISH - EASY PASS MINIMUM MATERIAL - SURYA GUIDES | Download


 1. CLASS 10 ENGLISH - EASY PASS MINIMUM MATERIAL - SURYA GUIDE | Downloadவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 ENGLISH QUESTION BANK - IDEAL | Download


 1. CLASS 10 ENGLISH QUESTION BANK - IDEAL | Downloadவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 12 TAMIL QUESTION BANK - IDEAL | Download


 1. CLASS 12 TAMIL QUESTION BANK - IDEAL | Downloadவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 11 TAMIL QUESTION BANK - IDEAL | Download


 1. CLASS 11 TAMIL QUESTION BANK - IDEAL | Downloadவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 TAMIL QUESTION BANK - IDEAL | Download


 1. CLASS 10 TAMIL QUESTION BANK - IDEAL | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

டிஎன்பிஎஸ்சி நடத்திய துறை தேர்வுகளுக்கான விடைகள் வெளியீடு

 • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு 
 • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்கை எண் 28/2019 நாள் 01.10.2019-ன் படி அறிவிக்கப்பட்ட 143 துறைத் தேர்வுகள் கடந்த 05.01.2020 முதல் 12.01.2020 வரை சென்னை மற்றும் நியூடெல்லி உள்பட 33 தேர்வு மையங்களில் நடைபெற்றன. 
 • மேற்படி இந்த துறைத்தேர்வுகளின் வினாத்தாட்கள் (கொள்குறி வகையை சார்ந்த தேர்வுகளின் வினாத்தாட்களுடன் கூடிய உத்தேச விடைகள் (Question paper with tentative key) மற்றும் விரிந்துரைக்கும் வகை] தேர்வாணைய இணைய தளத்தில் 28.01.2020 அன்று வெளியிட்டுள்ளது. 
 • துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள், அவரவர் எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணைய தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 
 • உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் (29.01.2020 முதல் 04.02.2020 அன்று மாலை 5.45 மணி வரை) விண்ண ப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவுச் சீட்டின் நகல், பதிவெண், தேர்வின் பெயர், தேர்வு குறீயீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். 
 • மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரர் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 
 • செய்தி வெளியீடு : இரா.சுதன், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
 • Link : http://www.tnpsc.gov.in/deptl_keys_dd19.html

கல்விச்செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
STUDY MATERIALS (NEW SYLLABUS)
KALVISOLAI - WHAT'S APP GROUP
KALVISOLAI - TELEGRAM GROUP

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

DR AMBEDKAR LAW UNIVERSITY RECRUITMENT 2019 | DR AMBEDKAR LAW UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.

 • DR AMBEDKAR LAW UNIVERSITY RECRUITMENT 2019 | DR AMBEDKAR LAW UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி :  பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், உதவி நூலகர், உதவி உடற்கல்வி இயக்குனர்.
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 82 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.
 • இணைய முகவரி : www.tndalu.ac.in
சென்னையில் செயல்படும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில், பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், உதவி நூலகர், உதவி உடற்கல்வி இயக்குனர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 82 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் சார்ந்த முதுநிலை படிப்பு, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது, இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tndalu.ac.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

MOTHER THERESA UNIVERSITY RECRUITMENT 2019 | MOTHER THERESA UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.

 • MOTHER THERESA UNIVERSITY RECRUITMENT 2019 | MOTHER THERESA UNIVERSITY  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.
 • இணைய முகவரி : https://www.motherteresawomenuniv.ac.in/
கொடைக்கானலில் செயல்படும் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

வேதியியல், இயற்பியல், கணிதவியல், ஹோம் சயின்ஸ், ஆங்கிலம், உமன்ஸ் ஸ்டடிஸ், வணிகவியல், மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவு சார்ந்த முதுநிலை படிப்புகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விரிவான விவரங்களை https://www.motherteresawomenuniv.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் பிப்ரவரி 7-ந் தேதியாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.

 • NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.
 • இணைய முகவரி : https://www.nabard.org/
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி சுருக்கமாக நபார்டு எனப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் அதிகாரி (கிரேடு-ஏ) பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவை உதவி மேலாளர் தரத்திலான பணியிடங்களாகும். மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சட்டம் மற்றும் இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களாக இருக்க வேண்டும். ராஜ்பாஷா பணியிடத்திற்கு முதுநிலை மொழிபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 1-1-2020-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.150 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

வரும் பிப்ரவரி 3-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

INDIAN BANK RECRUITMENT 2019 | INDIAN BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.

 • INDIAN BANK RECRUITMENT 2019 | INDIAN BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : சிறப்பு அதிகாரி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 138 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.
 • இணைய முகவரி : www.indianbank.in
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அசிஸ்டன்ட் மேனேஜர் (கிரெடிட்), மேனேஜர் (கிரெடிட், செக்யூரிட்டி, பாரக்ஸ், லீகல், டீலர், ரிஸ்க் மேனேஜ்மென்ட்) போன்ற பிரிவுகளில் பணிகள் உள்ளன. மொத்தம் 138 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 85 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு 20 முதல் 30 வயதுடையவர்களும், சில பணிகளுக்கு 25 முதல் 35 வயதுடையவர்களும், சில பணிகளுக்கு 27 முதல் 37 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எப்.ஏ., எல்.எல்.பி. மற்றும் இதர அறிவியல் கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 10-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு மார்ச் 8-ந் தேதி நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indianbank.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...

 • KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD

 • NEED MORE....CLICK HERE...விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

 • TRB ANNUAL PLANNER 2020 | DOWNLOAD
 • 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
 • நடப்பு ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27 & 28ம் தேதிகளில் நடைபெறும் உத்தேச அட்டவணை வெளியீடு
 • முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 1ல் ,  இடைநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 9ம் தேதி என்று அறிவிப்பு
 • பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 17ம் தேதி வெளியாகும்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

POLYTECHNIC TRB | பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இன்று முதல் பிப்.12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 • அரசு பாலிடெக்னிக் விரிவுரை யாளர் பணிக்கு இன்று முதல் பிப்.12-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
 • அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் விரிவுரையாளர் பணியிடங் களை நிரப்ப கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செப்டம்பரில் நடந்த தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டின்போது முறைகேடு நடந்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்தது. 
 • இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு நவ.27-ம் தேதி 1,060 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியானது. 
 • இதை யடுத்து, தற்போது அதற்கான விண்ணப்பம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 • இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு பாலிடெக்னிக் விரி வுரையாளர்கள் காலி பணியிடங் களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு நவ.27-ம் தேதி அறிவிக்கை வெளி யிடப்பட்டது. 
 • இப்பணியிடங் களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பத்தை ஜன.22 (இன்று) முதல் பதிவேற்றம் செய்யலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு வரும் பிப்.12-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
 • விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால், எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

கல்விச்செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
STUDY MATERIALS (NEW SYLLABUS)
KALVISOLAI - WHAT'S APP GROUP
KALVISOLAI - TELEGRAM GROUP

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 MATHEMATICS TM - MINIMUM MATERIALS - MARCH 2020 - CEO,VILLUPURAM


 • CLASS 10 MATHEMATICS TM - MINIMUM MATERIALS - MARCH 2020 - CEO,VILLUPURAM | Downloadவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 ENGLISH - MINIMUM MATERIALS - MARCH 2020 - CEO,VILLUPURAM


 • CLASS 10 ENGLISH - MINIMUM MATERIALS - MARCH 2020 - CEO,VILLUPURAM | Downloadவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 TAMIL - MINIMUM MATERIALS - MARCH 2020 - CEO,VILLUPURAM | Download

CLASS 10 TAMIL - MINIMUM MATERIALS - MARCH 2020 - CEO,VILLUPURAM | Download


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

CLASS 10 SCIENCE TM - EM - MINIMUM MATERIALS - MARCH 2020 - CEO,VILLUPURAM | Download

 1. CLASS 10 SCIENCE TM - MINIMUM MATERIALS - MARCH 2020 - CEO,VILLUPURAM | Download
 2. CLASS 10 SCIENCE EM - MINIMUM MATERIALS - MARCH 2020 - CEO,VILLUPURAM | Download

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.

 • TN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020  | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்.
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 80.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.
 • இணைய முகவரி : http://kpmdrb.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TANGEDGO RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.

 • TANGEDGO RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : இளநிலை உதவியாளர் .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2020.
 • இணைய முகவரி : https://www.tangedco.gov.in/
தமிழ்நாடு மின் வினியோக கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இளநிலை உதவியாளர் பணிக்கு 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். பி.காம். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்ரவரி 10-ந் தேதி விண்ணப்பப்பதிவு ஆரம்பமாகிறது. மார்ச் 9-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TANGEDGO RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.

 • TANGEDGO RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : மதிப்பீட்டாளர் .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1300 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.
 • இணைய முகவரி : https://www.tangedco.gov.in/
தமிழ்நாடு மின் வினியோக கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் மதிப்பீட்டாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மதிப்பீட்டாளர் பணிக்கு மட்டும் 1300 இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

இவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNEB RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பொறியாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2020.

 • TANGEDGO RECRUITMENT 2020 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவி பொறியாளர்.
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2020.
 • இணைய முகவரி : https://www.tangedco.gov.in/
தமிழக மின்சார வாரியமான ‘டான்ஜெட்கோ’வில் 600 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழ்நாடு மின் வினியோக கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படுகிறது.

உதவி என்ஜினீயர் பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு ஜனவரி 24-ந் தேதி முதல் விண்ணப்பதிவு தொடங்குகிறது. பிப்ரவாி 24-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதைத்தொடர்ந்து ஜனவரி 8 முதல் 10-ம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் 1,495 பேர் கலந்து கொண்டனர். அதில் தற்காலிகமாக தேர்வான பட்டதாரிகளின் பட்டியல் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 814 பணியிடங்களுக்கு 697 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 117 இடங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. பணிநியமன கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்

குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு புகார்: தவறுகள் கண்டறியப்பட்டால் பாரபட்சம் இன்றி மிகக்கடுமையான நடவடிக்கை டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்-4 தேர்வில் முறைகேடு புகார் தொடர்பாக தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது.

அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப்-4 பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் சிலருடைய பெயர் தேர்வு முடிவு தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 40 இடங்களை பிடித்து இருந்தனர்.

இதில் முறைகேடு நடந்து இருப்பதாக மற்ற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணையை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒளிவுமறைவற்ற நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயல்படும் நபர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையுடன் இருக்குமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் இருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் ராமேசுவரம், கீழக்கரையில் இருந்து தேர்வானவர்கள் 57 பேர் ஆவார்கள். அவர்களில் 40 பேர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த விண்ணப்பதாரர்கள் ராமேசுவரம் மற்றும் கீழக்கரையை சேர்ந்த வெவ்வேறு மையங்களில் வெவ்வேறு அறைகளில் தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே அறையிலிருந்தோ அல்லது ஒரே தேர்வுக்கூடத்திலிருந்தோ தேர்வு செய்யப்படவில்லை.

இந்த குற்றச்சாட்டு குறித்து மேற்கூறிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள், ஆவணங்கள் மட்டுமின்றி இத்தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் அனைத்தும் மிகுந்த கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து எவ்வித பாரபட்சமுமின்றி மேலும் விசாரணை செய்யப்பட்டு விரைவில் உண்மைநிலை அறிவிக்கப்படும். இந்த விசாரணையில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி மிகக்கடுமையான குற்றநடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்குமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.

 • JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : குரூப்-பி மற்றும் குரூப்-சி உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 162 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.
 • இணைய முகவரி : www.jipmer.edu.in
ஜவகர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக ஜிப்மர் (JIPMER) எனப்படுகிறது. தற்போது இந்த கல்வி மையத்தில் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நர்சிங் ஆபீசர், மெடிக்கல் சோசியல் ஒர்க்கர், ஜூனியர் என்ஜினீயர், ஸ்டெனோகிராபர் போன்ற பணியிடங்களுக்கு 162 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு 27-1-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு பெறுபவர்களுக்கான வயது வரம்பு தளர்வை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

ஜெனரல் நர்சிங், மிட்வைப் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் நர்சிங் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை சோசியல் ஒர்க் படிப்பு, சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படிப்புடன், தட்டச்சு திறன் பெற்றவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 27-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

மற்றொரு அறிவிப்பின்படி நர்சிங் அதிகாரி, மெடிக்கல் லேபரேட்டரி, டெக்னாலஜிஸ்ட், பிசிக்கல் இன்ஸ்ட்ரக்டர் உள்ளிட்ட பணி களுக்கு 107 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜெனரல் நர்சிங், மிட்வைப், மெடிக்கல் லேப் சயின்ஸ், இளநிலை உடற்கல்வியியல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், நியூரோ டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 20-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு பிப்ரவரி 23-ந்தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இவை பற்றிய விவரங்களை www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.

 • SBI RECRUITMENT 2019 | SBI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8134 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.
 • இணைய முகவரி : www.sbi.co.in
இந்தியாவின் பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.). ஸ்டேட் வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வங்கி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்படுகிறது. தற்போது இந்த வங்கியில் ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து134 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் சென்னைக்கு 400 இடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-1-2020-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்

பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.125 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் கட்டணம் செலுத்தவும் ஜனவரி 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி-மார்ச் மாதமும், முதன்மைத் தேர்வு ஏப்ரல் 2-வது வாரமும் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2020.

 • NABARD RECRUITMENT 2019 | NABARD  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : ஆபீஸ் அட்டன்ட் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2020.
 • இணைய முகவரி : https://www.nabard.org/
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி சுருக்கமாக நபார்டு எனப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் ஆபீஸ் அட்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவை குரூப்-சி தரத்திலான பணியிடங்களாகும். மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-12-2019-ந்தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.450 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஜனவரி 12-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.

 • RBI RECRUITMENT 2019 | RBI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவியாளர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 926 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
 • இணைய முகவரி : https://www.rbi.org.in/
ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணிக்கு 926 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

ரிசர்வ் வங்கி, வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுகிறது. இந்த வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலராக பணி புரிவது பலரின் கனவாகும். தற்போது இந்த வங்கியில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மொத்தம் 926 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னைக்கு 67 இடங்கள் உள்ளன. திருவனந்தபுரம், கொச்சிக்கு 20 இடங்களும், மும்பைக்கு அதிகபட்சமாக 419 இடங்களும் உள்ளன. நகரங்கள் வாரியான பணியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-12-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் 450 ரூபாய் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ரூ.50 செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 16-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஜனவரி 31-ந் தேதிக்குள் விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுக்கலாம். முதல்நிலை ஆன்லைன் தேர்வு பிப்ரவரி 14,15-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. முதன்மை ஆன்லைன் தேர்வு மார்ச் 2020-ந் தேதி நடத்தப்பட உள்ளது.

அதிகாரி பணிகள்

மற்றொரு அறிவிப்பின்படி சட்ட அதிகாரி, மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட பாடங்களில் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. பணி அனுபவம் அவசியம். இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, ஜனவரி 20-ந்தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.rbi.org.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ESLC EXAM 2019 | தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜன.27 முதல் விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்களுக்கானஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வரும் ஜன.27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர் வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 1.1.2020 அன்று 12 ஆண்டுகள் 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித் தேர் வர்கள் ஜன.27-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஜன.31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள் ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125,ஆன்-லைன் பதிவுக் கட்ட ணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்க ளில் நேரடியாகச் செலுத்தலாம். முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப் பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங் களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத் தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இணைத்து சமர்ப் பிக்க வேண்டும்.

ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தைத் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஏற்கெனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்-லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங் கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

கணினி ஆசிரியர் பணியிடங்கள்: சென்னையில் ஜன.8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

கணினி ஆசிரியர் பணியிடங் களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் சார்ந்து தேர்ச்சி பெறாதவர்கள், உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவர்கள் என கண்டறியப்பட் டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜன. 8, 9,10 ஆகிய மூன்று நாள்கள் சென்னையில் நடைபெறவுள்ளன.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆசிரி யர் தேர்வு வாரியம் சார்பில் கணினி பயிற்றுநர் நிலை1-க்கான (முதுநிலை ஆசிரியர்நிலை)கணினி வழியிலான தேர்வு கடந்த ஜூன் 23, ஜூன் 27 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகள் கடந்த நவ.25-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தேர்வெண் விவரப் பட்டியல் நவ.28-இல் வெளி யானது. பின்னர் உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம்செய்வதற்குடிச.2-ஆம் தேதி முதல் டிச.5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கல்வித் தகுதிகள் சார்ந்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேவையான கல்வித் தகுதி கள் சார்ந்து சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய் யாதவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜன.8, 9,10 ஆகிய மூன்று நாள்கள் சென்னையில் நடைபெறவுள்ளது. உரிய சான்றிதழ் சரிபார்ப் புக்கான அழைப்புக் கடிதங்களை (www.trb.tn.nic.in) இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறுஞ்செய்தி வழியாகவும் தகவல் அனுப்பப்படும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SSLC PRIVATE MARCH 2020 | மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் 06.01.2020 (திங்கள் கிழமை) முதல் 13.01.2020 (திங்கள் கிழமை) வரை பதிவு என அறிவிப்பு.

மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பித்தல்: 
 • மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் 06.01.2020 (திங்கள் கிழமை) முதல் 13.01.2020 (திங்கள் கிழமை) வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை Online- ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
 • ஏற்கனவே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் (Old Syllabus) எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டதிலேயே எழுதலாம். 
 • நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி | (Part I)-ல் மொழிப்பாடத்தில் தமிழ்மொழிப் பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக கண்டிப்பாகத் தேர்வெழுதுதல் வேண்டும். 
 • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தேர்வர்களின் நலன் கருதி தேர்வு நேரக்கால அளவானது 2 மணி நேரத்திலிருந்து 3.00 மணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
 • இடைநிலைக் கல்வி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடம் மற்றும் ஆங்கில மொழிப்பாடத்தில் இருந்து வந்த இரு தாள்களாக தேர்வெழுதும் நடைமுறைக்கு பதிலாக இப்பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு (100 மதிப்பெண்) நடத்தப்படும் | DOWNLOAD
முக்கிய கல்விச்செய்திகள்
வேலை வாய்ப்பு செய்திகள்
LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS)
KALVISOLAI - WHAT'S APP GROUP
KALVISOLAI - TELEGRAM GROUP

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPSC GROUP 1 RECRUITMENT 2019 | குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்.5-ல் நடைபெறும் ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜனவரி 20 முதல் ஆன்லைனில் விண் ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்டப் பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 8 வகையான உயர் பதவிகளை நேரடியாக நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

2020-ம் ஆண்டுக்கான வருடாந் திரத் தேர்வு கால அட்டவணை யில், குரூப்-1 தேர்வு ஒரே ஆண்டுக் குகள் நடத்தி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், 2020-ம் ஆண் டுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என்றும் இத்தேர்வுக்கு ஜனவரி 20 முதல் பிப்ரவரி 19 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், தேர்வாணையத் தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஜனவரி 20-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார். காலியிடங்கள் குறித்த விவரமும் அப்போது வெளியிடப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு | ஜனவரி 11, 12-ந் தேதிகளில் நடக்க்கும் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக காவல்துறையில் 969 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. வரும் 11-ந் தேதி காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கும், 12-ந் தேதி பொது விண்ணப்பதாரர்களுக்கும் இந்த தேர்வு 32 மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு இதுகுறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.