Posts

அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சராக வைகை செல்வன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பாளர்கள், பொது நூலக துறை கட்டுப்பட்டில் இயங்கும் நூலகங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்ய வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நூலகத் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.

முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு 19 முதல் 21ம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வில், சென்னையில் உள்ள சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 48 பேர் துணை கலெக்டர்களாகவும், 23 பேர் போலீஸ் துணை கண்காணிப்பாளர்களாகவும் தேர்வு பெற்றுள்ளனர்.

துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 முதல்நிலை தேர்வு (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 1¼ லட்சம் பட்டதாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

முந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்முறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் உள்ள டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர 7–ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

TNPSC GROUP I COUNSELLING | பிடித்தமான பதவியை தேர்வு செய்து கொள்ளும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறையில் முதலாவது கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் 14..2.2013 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம், 2012ம் ஆண்டு அக்டோபரில் நடத்திய கல்லூரி விரிவுரையாளர் தகுதி தேர்வு (SET) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் அரையாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு தேர்வுத்துறை இயக்ககத்தால் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது .

SSLC MARCH 2013 PRACTICAL EXAM | மார்ச் 2013 பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பள்ளி மாணவர்களுக்கு 20.02.2013 முதல் 28.02.2013 வரை நடைபெற உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வு - சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ்(தக்கல்) தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 11.02.2013 (திங்கட்கிழமை) முதல் 13.02.2013 (புதன்கிழமை) மாலை மணி 05.00 வரை தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடைப்பயிற்சிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், பயிற்சிகள் மீண்டும் நடைபெறும் தேதி மற்றும் மையம் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதம் என்று நிர்ணயம் செய்து கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதில் இந்த கோர்ட்டு தலையிட முடியாது. மேலும், பக்கத்து மாநிலங்களில் குறைவான தகுதி மதிப்பெண் உள்ளது என்ற காரணம் கூறி, தமிழகத்தில் தகுதி மதிப்பெண்ணை குறைக்க முடியாது. இதில் சலுகை காட்ட முடியாது. எனவே மனுக்களை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன் மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி அதன் வழியாக 15 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டமிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.

JUNIOR ASSISTANT APPOINTMENT ONLINE COUNSELLING | 554 இளநிலை உதவியாளர்களை பள்ளி கல்வித்துறையில் பணி நியமனம் செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு 02.02.2013 அன்று நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி யால் பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வு செய்யபட்டவர்கள் அனைவரும், தங்களது இருப்பிட முகவரி அமைந்துள்ள மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகத்திற்கு 02.02.2013 அன்று காலை, 9:00 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.