Posts

மார்ச்/ஏப்ரல் 2015-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடி தனித்தேர்வராக தேர்வெழுத விரும்புபவர் 01.12.2014 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் தங்கள் பெயர்களை செய்முறைப் பயிற்சி வகுப்பில் பதிவு செய்து பயிற்சி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார்.

Direct Recruitment for the Posts of 652 Computer Instructors | 652 கணினி ஆசிரியர்கள் நியமனம் உங்கள் பதிவுகளை சரி பாருங்கள்- சான்றிதழ் சரிபார்ப்பு 24.12.2014 முதல் 30.12.2014 வரை நடைபெறும் வகையில் TRB திட்டமிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில், வீட்டு மனை வாங்க, முன்பணமாக, 20 சதவீதம் வழங்கப்படுவதை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

Direct Recruitment of Postman / Mail Guard in Postal Divisions | தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி நாள், டிசம்பர், 7ம் தேதி.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் நவம்பர் 26 புதன்கிழமை கடைசி நாளாகும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் 24/11/2014 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில், அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி இலக்கை அடையவேண்டும் அதற்கான முழு முயற்சிகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

TNPSC DEPARTMENTAL TEST BULLETIN – 2014 | DOWNLOAD DEPARTMENTAL TEST BULLETIN – 2014

PASSPORT | வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்களில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

INCOME TAX | மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.

DSE NEWS | அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநராக (மேல்நிலைக் கல்வி) பணியாற்றி வந்த ராஜராஜேஸ்வரி, இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.) புதிய இயக்குநராக க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டார்.

CBSE | மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.

TRB NEWS | அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவருகிறது.

PART TIME TEACHERS NEWS | பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதியம் ரூபாய் 5000 இருந்து 7000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. ஊதிய உயர்வு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இனி ECS முறையில் ஊதியம் வழங்கப்படும்.

CPS | தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

NET RESULT PUBLISHED | பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப்-2 மெயின் தேர்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்பட உள்ளது.

சித்தா, யுனானி உள்பட இந்திய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கும், கூடுதல் இடங்களுக்குமான கலந்தாய்வு நவம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

TRB NEWS | அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது.

TRB போட்டித்தேர்வு மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் 25 பேர் விரைவில் நியமன செய்யப்பட உள்ளனர்.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவருகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில், 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பம். தேர்வுக்கு பயன்படும் முக்கிய வினாக்கள்....

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

குழந்தைகள் தின வாழ்த்து | குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14, குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

TRB PGT SYLLABUS DOWNLOAD | Download Syllabus for Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015.

MRB NEWS | அரசு மருத்துவமனைகளுக்கு 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்வதற்கான கவுன்சலிங் 13ம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலமாக நடக்கிறது.

ONLINE CPS STATEMENT | உங்களின் CPS விவரங்களை ஆன்லைன் மூலம் இனி எளிதாக பார்க்கலாம்.CPS எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்யுங்கள் .

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான PTA மாதிரி வினாப் புத்தகங்கள் 10.11.2014 முதல் அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும்.விரிவான விவரங்கள்...

TRB NEWS | 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வில் முதல்முறையாக குறைந்த பட்ச மதிப்பெண் முறை பின்பற்றப்படவுள்ளது.

PLUS TWO PRIVATE EXAM | 2015 மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக மாலை, 5:00 மணி வரை, சேவை மையங்களுக்கு, நேரில் சென்று மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

TRB PGT NOTIFICATION | முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB | விண்ணப்ப விநியோகம் 10.11.2014 முதல் | கடைசி தேதி 26.11.2014 | எழுத்துத் தேர்வு 10.1.2015 | மொத்த பணியிடம் 1807 | தமிழ்-277, ஆங்கிலம்-209, கணிதம்-222, இயற்பியல்-189, வேதியியல்-189, தாவரவியல்-95, விலங்கியல்-89, வரலாறு-198, பொருளியல்-177, வணிகவியல்-135, உடற்கல்வி இயக்குநர்-27 | விரிவான விவரங்கள்..

தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான கவுன்சலிங் 8ம் தேதி இணைய தளம் மூலம் நடக்கிறது.

TRB PGT EXAM NEWS | தமிழகத்தில்2014-15 கல்வி ஆண்டில் 1,800 முதுகலை ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தெரிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரம் TRB வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TRB NEWS | ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், அக்குவாகல்சர் ஆகிய பாடங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட கல்லூரி உதவி பேராசிரியர்கள் 277 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

4 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாகப்பட்டினம்,புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று (13.11.2014-வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.