உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தவும்,இனிமேல், தகுதித்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பமுறையும் அறிமுகப்படுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்துள்ளர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆகஸ்ட் 31-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும் தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2,88,588 பேர் எழுதிய முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 3,88,185 பேர் எழுதிய இரண்டாம் தாளில் 713 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 83 என்று தமிழ்நாடு ஆசிரியர் ‌தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2,88,588 பேர் எழுதிய முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 3,88,185 பேர் எழுதிய இரண்டாம் தாளில் 713 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 83 என்று தமிழ்நாடு ஆசிரியர் ‌தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மதிப்பெண் சான்றிதழை 29 மற்றும் 30 தேதிகளில் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர், அக்டோபர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை அரசு தேர்வுகள் இயக்குனரகத்தை அணுகவேண்டாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மே 2012 துறைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன


Results of Departmental Examinations - MAY 2012
(Updated on 14 August 2012)
Enter Your Register Number :                                                         
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள், தேர்வுத் துறை அனுப்பும் கேள்வித்தாள் அடிப்படையில் நடக்க இருப்பதால், விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுஉள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), வெளியிடப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

மேல்நிலை சிறப்புத் துணைத்தேர்வு ஜுன்/ஜுலை 2012 -ல் தேர்வெழுதியோர் விடைத்தாட்களின் அச்சுப்பகர்ப்பு நகல் (Photocopy of Answer scripts) மற்றும் மறுகூட்டலுக்கு ஜுன்/ஜுலை 2012 பருவம் முதல் On-line -ல் விண்ணப்பிக்கும் முறையை முதன்முதலாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிமுகப்படுத்துகிறது. எனவே தேர்வர்கள் விண்ணப்பங்கள் கோரி எந்த ஒரு கல்வி அலுவலகத்தையும் அணுக வேண்டாமெனவும், On-line முறையில் விண்ணப்பிக்குமாறும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது. விண்ணப்பித்தலுக்கான காலம் 13.08.2012 (திங்கட்கிழமை) முதல் 16.08.2012(வியாழக்கிழமை) வரை.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் இன்று (09.08.2012) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முப்பருவ மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையை, அடுத்த கல்வியாண்டில் (2013-14) 9, 10ம் வகுப்புகளுக்கு அமல்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அன்னாரின் பணி சிறக்க கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.


பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், குமளன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த தேவராஜன் 55, எம்.ஏ., - எம்.எட்., பட்டதாரி. 1995ல், போட்டித் தேர்வு மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில் பணியாற்றினார். இணை இயக்குனர் பதவி உயர்வு பெற்று, தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வந்துள்ளார். இயக்குனர் பதவி உயர்வுக்குப்பின், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகிய பதவிகளுக்குப் பின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், புதிய பாடத் திட்டங்களை மெருகேற்றியது; முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டங்கள் குறித்து பயிற்சி கையேடுகளை தயாரித்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை, தேவராஜன் சிறப்பாக செய்து முடித்தவர். கல்வியில் பின் தங்கியுள்ள வட மாவட்டங்களை முன்னேற்றுவது; ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்துவது; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தரமான, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது போன்றவை, புதிய இயக்குனர் முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

செவிலியர் பட்டயப் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.. கடந்த பொதுத் தேர்வில், 7.56 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 1 லட்சம் பேர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு, ஜூன், ஜூலையில், உடனடித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை,கல்விச்சோலை இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பள்ளிக்கல்வி இயக்குனர் திரு ப.மணி அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தரா தேவி அவர்களிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வி இயக்குனர் திரு ப.மணி அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தரா தேவி அவர்களிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.