உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

ஆசிரியர்கள் பொதுமாறுதல்-2012-2013

பள்ளிக்கல்வித்துறை- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2012-2013ம் கல்வியாண்டில் பொதுமாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 25.04.2012 முதல் 28.05.2012 க்குள் மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 30.04.2012 அன்றுக்குள் வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 14 ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25 ந்தேதி வெளியிடப்படும்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா,பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 14 ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25 ந்தேதி வெளியிடப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத் தாள் திருத்தும் பணி நிறை வடைந்து விட்டன. எஸ்.எஸ். எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது என்று கூறினார்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

2011ம் கல்வி ஆண்டுக்காக 197 தலைப்புகளில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு 1 கோடியே 33 லட்சம் புத்தகங்களும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1 கோடியே 32 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 2 முதல் 10ம் வகுப்பு வரை 4 கோடியே 49 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இணையதளத்தில் சமச்சீர்கல்வி 10ம் வகுப்பு பாடப்புத்தகம் : அரசு தகவல்

இணையதளத்தில் சமச்சீர்கல்வி 10ம் வகுப்பு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பாடப்புத்தகங்கள் ஏப்ரல் 22 அன்று வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வி டாட் இன் என்ற இணையதளத்தில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும் எனவும் அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு பள்ளிகளுக்குஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை - கடைசி வேலை நாள் ஏப்ரல் 21ம்தேதி - பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 1ம் தேதி

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தவிர, 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் 6ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, 22ம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 29,388 தொடக்கப்பள்ளிகள், 8,377 நடுநிலைப் பள்ளிகள், 3,425 உயர்நிலைப்பள்ளிகள், 3,050 மேல்நிலைப்பள்ளிகள், 3,600 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு கோடியே 25 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த ஆண்டின் கடைசி வேலை நாள், ஏப்ரல் 21ம் தேதி என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அந்த வேலை நாளுக்குள் தேர்வுகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 22ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தியா அபார வெற்றி: உலககோப்பையை வென்றது


மும்பையில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.28 ஆண்டுகளுக்கு பின் உலககோப்பையை கைப்பற்றியதால் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்கின்றனர்.உலக கோப்பை போட்டியில் இந்தியா 1983 ம் ஆண்டில் கோப்பையை பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக கோப்பை கிடைத்தது.இந்தியா- இலங்கையுடனான உலக கோப்பை இறுதிப்போட்டி மும்பையில் நடந்து வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன் எடுத்தது.இதையடுத்து 275 ரன் இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.   275 ரன் இலக்கை 10 பந்துகள் உள்ள நிலையில் எட்டியது இந்தியா.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.