Posts

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு |29.06.2014 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக தமிழ் -171,ஆங்கிலம் -42,கணிதம்- 81,அறிவியல் -155,சமூக அறிவியல் -81 என்ற எண்ணிக்கையில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது. இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.

TNEA - 2014 General Academic Counselling for Engineering Admissions scheduled to commence from 27.6.2014 stands postponed | அண்ணா பல்கலைக்கழக பொதுப்பிரிவினருக்கான பி.இ., கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் அலுவலக இணைய தளமான www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் ரயில்வே பட்ஜெட், 8ம் தேதியும், முதல் பொது பட்ஜெட் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளன.

பொறியியல் கவுன்சலிங் தொடக்கம் | பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் 23.06.2014 திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்தது. இதில் 2,521 எம்பிபிஎஸ் இடங்களும் 85 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. அடுத்தகட்ட கவுன்சலிங் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்கும் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது. www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

D.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்துவம்) மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.ஜுன் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGH SCHOOL HM NEW PANEL | 01.01.2014 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல் 12-05-2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் தமிழாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட W.P.No.16217/14, W.P.No.16218/14, W.P.No.16219/14 W.P.No.15925/14 மற்றும் இதர நீதி மன்ற வழக்கின் இறுதி தீர்ப்பிற்குட்பட்டு திருத்திய முன்னுரிமைப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.999/சி1-இ1/2014 நாள் 20-06-2014 ன் படி வெளியிடப்படுகிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட 12/05/2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியல் இரத்து செய்யப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

மருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

6.25 லட்சம் பேர் எழுத உள்ள குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த 7ஆயிரத்து 651 பேருக்கும், பிஎஸ்சி (விவசாயம் மற்றும் தோட்டக்கலை) படிப்புக்கு விண்ணப்பித்த 11 ஆயிரத்து 654 பேருக்கும், பிஎஸ்சி(நர்சிங்), பிபிடி, பிபார்ம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த 947 பேருக்கும் ரேண்டம் எண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

SSLC HALL TICKET | நடைபெறவுள்ள ஜுன் 2014, எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு உடனடித் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 19.06.2014 முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2014-15 - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 19.06.2014 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00 மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’ பெற்றுள்ளனர். பொது கலந்தாய்வு வரும் 27-ந்தேதி தொடங்குகிறது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 16.06.2014 (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 16-ம் தேதியும், மருத்துவ படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 18-ம் தேதியும் வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில், 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

DEO EXAM SURVEY 2014 | மாவட்ட கல்வி அலுவலர் (D.E.O.) பதவியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதன் தற்காலிக விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. இதில் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்க போகும் நபர்கள் யார்? யார்? உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள் ..பாருங்கள்...

வருமானவரி விலக்குரூ.5 லட்சம் | வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை (ஜூன் 14) காலை வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளம் வழி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் மாறுதல் கோரும் அனைத்து வகை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 14.06.2014க்குள் இணைய தளத்தில் பதிவு செய்யும் வகையில் செயல் பட பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார். 11.06.2013 முன்னர் பணியேற்ற ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் மாறுதல் விண்ணப்பங்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

DEO EXAM Tentative Answer Keys | மாவட்ட கல்வி அலுவலர் (D.E.O.) பதவியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதன் தற்காலிக விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்த விரிவான விவரங்கள்...

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ரேண்டம் எண்ணை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வரும் 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. முதல் கட்ட கவுன்சலிங் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

மாவட்ட கல்வி அலுவலர் (D.E.O.) பதவியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

IGNOU B.ED,M.ED ADMISSION NOTICE|IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் சேர பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது.2014-ம் ஆண்டுக்கான பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

தக்கல் திட்டத்தின் கீழ் 2014 ஜூன் திங்கள் 26-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறவுள்ள இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத 09.06.2014 மற்றும் 10.06.2014 ஆகிய இரண்டு நாட்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பில் அறிவியல் செய்முறை தேர்வுகளுக்கான சோதனைகள் 16ல் இருந்து 26 ஆக இந்தாண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 09.06.2014 பிற்பகல் 1.00 மணிக்குள் பதிவிறக்கம் செய்வதுடன் மாற்றம் இருப்பின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 18-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ் தெரிவித்தார்.

SSLC சிறப்பு துணைத் தேர்வுக்கு ‘தட்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூன், ஜூலை மாதத்தில் நடை பெறவுள்ள தேர்வுக்கு ‘தட்கல்’ திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 7-ம் தேதி (சனிக்கிழமை) ஆகிய இரு நாட்களில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் முழு விவரம்...

TNPSC VAO HALL TICKET Download | டி.என்.பி.எஸ்.சி., வி.ஏ.ஓ ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Plus Two answer script scan copy Download | மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (04.06.2014) முற்பகல் 10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விரிவான விவரம் ...

2014-2015 School Calender Download | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வுக்கு ‘தட்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

புதிய கல்வியாண்டின் வாழ்த்துக்கள் | தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குபிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்விப்பணியில் தங்களை அர்ப்பணித்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள். இக்கல்வியாண்டிலும் உங்கள் பணி அர்ப்பணிப்பு உணர்வோடு அமையட்டும். மாணவர்கள், அவர்தம் பெற்றோர்களின் கனவு நிறைவேற உங்கள் வழிகாட்டுதல்கள் இனிதாக அமையட்டும்.