உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

PGT ONLINE COUNSELLING ON 31.12.2012 10.30 AM | ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளும் முதுகலை ஆசிரியர்களுக்கான முக்கிய குறிப்புக்களை முழுமையாக படியுங்கள்.

8 comments:

 1. முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: 70%
  பேருக்கு சொந்த மாவட்டத்தில் பணி
  சென்னை: புதிதாக தேர்வு பெற்ற,
  முதுகலைஆசிரியர்களுக்கான பணி நியமன
  கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், 32
  மாவட்டங்களிலும், நேற்று நடந்தது.
  2,273 பேரில், 70.39 சதவீதம் பேர்,
  அவரவர் சொந்த மாவட்டங்களில்,
  பணி நியமனஉத்தரவுகளை பெற்றனர்.
  போட்டித் தேர்வில் தேர்வு பெற்ற
  முதுகலை ஆசிரியர்களுக்கு , கடந்த
  மாதம் , 13 ம் தேதி , சென்னையில் நடந்த
  விழாவில் , தேர்வு பெற்றதற்கான
  உத்தரவுகள் வழங்கப்பட்டன . இதைத்
  தொடர்ந்து , பணி நியமன கலந்தாய்வு , 32
  மாவட்டங்களிலும் , நேற்று நடந்தது .
  2,895 பணியிடங்களை நிரப்ப
  தேர்வு நடத்திய போதும் , 2,273
  பணியிடங்கள் மட்டும் ,
  நேற்று நிரப்பப்பட்டன . மாவட்டத்திற்குள்
  பணி நியமனம் பெறுவதற்கான
  கலந்தாய்வு , காலையிலும் ;
  வெளி மாவட்டங்களில் பணி நியமனம்
  பெறுவதற்கான கலந்தாய்வு ,
  பிற்பகலிலும் நடந்தன .
  மொத்த தேர்வர்களில் , 1,600 பேர் ,
  அவரவர் சொந்த மாவட்டங்களில் ,
  பணி நியமன உத்தரவுகளை பெற்றனர் .
  மீதமிருந்த , 673 பேர் மட்டும் , சொந்த
  மாவட்டங்களில் விரும்பிய இடங்கள்
  கிடைக்காததால் , வெளி மாவட்டங்களில்
  உள்ள பணியிடங்களை தேர்வு செய்தனர் .
  சென்னை மாவட்டத்தில் இருந்து , 50 பேர்
  தேர்வு பெற்றிருந்தனர் . ஆனால் , 18
  இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன .
  இதனால் , 32 பேர் , காஞ்சிபுரம் ,
  திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த
  காலி பணியிடங்களை , தேர்வு செய்தனர் .
  பணி நியமன உத்தரவுகளை பெற்ற
  அனைவரும் , நாளை பணியில் சேர
  வேண்டும் என
  கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது

  ReplyDelete
 2. நியமன உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் நீக்கம்: டி.ஆர்.பி.யிடம் முறையீடு- Dinamalar
  முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், பணி நியமன உத்தரவு பெற்ற முதுகலை ஆசிரியர்களில், பலர் நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்படாததால், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்து, அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
  பள்ளி கல்வித்துறையில், 2,895 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த மாதம், 13ம் தேதி, சென்னையில் முதல்வர் பங்கேற்ற விழாவில், 2,308 பேருக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
  இந்நிலையில், தகுதியற்ற பலர், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றதாக வந்த தகவலை அடுத்து, பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், தகுதியற்றவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கினர்.
  எத்தனை பேர், தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற விவரத்தை, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், முதுகலை ஆசிரியர்களுக்கானபணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கு, முன்கூட்டியே, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம், அழைப்பு விடுக்கப்பட்டது.
  அதன்படி, அவர்கள், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பலர் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றும், கலந்தாய்வுக்கு அழைப்பு வராத தேர்வர்கள், நேற்று டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்தனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள், டி.ஆர்.பி., அலுவலர்களை சந்தித்து, முறையிட்டனர்.
  அலுவலர்கள், சரியான பதிலை அளிக்கவில்லை என்றும், எதையாவது கூறி மழுப்புகின்றனர் என்றும், தேர்வர்கள் புகார் கூறினர். தாவரவியல் பிரிவில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படாததால், அந்த பிரிவைச் சேர்ந்த தேர்வர்களும், அதிகளவில் வந்தனர்.
  அவர்கள் கூறியதாவது: தாவரவியலில், 204 இடங்கள் உள்ளன. ஒரு இடம்கூட நிரப்பவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால், நிரப்பப்படவில்லை என்றும், வழக்கு முடிந்ததும் நிரப்பப்படும் என்றும் முதலில் டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளைச் சந்தித்து, வழக்கு குறித்த விவரங்களை கேட்டு, வழக்கு எண் விவரத்தை பதிவு செய்து, இணையதளத்தில் பார்த்தபோது, வழக்கு முடிந்துவிட்ட விவரம் தெரியவந்தது.
  இதைப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வழக்கு முடிந்துவிட்டது. ஆனால், இந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபின், இறுதிதேர்வு பட்டியலை வெளியிடலாம் என, கோர்ட் தெரிவித்துள்ளது. அதன்படி, சான்றிதழ்களை சரிபார்த்தபின், தேர்வுப் பட்டியலை வெளியிடுவோம்" என, தெரிவித்தனர்.
  கலந்தாய்வுக்கு நிராகரிக்கப்பட்ட தேர்வர்கள் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் கூறியதாவது: பல லட்சம் பேருக்கு தேர்வு நடத்தி, 6,000த்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்களை சரிபார்த்து, தேர்வு முடிவை வெளியிடுவது என்பது, சாதாரண வேலை கிடையாது.
  மாவட்டங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில், ஒரு சில இடங்களில், அதிகாரிகள் சரியாக கவனிக்காததால், சில தவறுகள் ஏற்பட்டன. இந்த தவறுகளை, நாங்கள் அப்படியே அனுமதிக்கவில்லை. தகுதியானதேர்வர்களின் பட்டியலை மட்டும் தான், கல்வித்துறையிடம் ஒப்படைத்தோம். அதில் இடம்பெற்றவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.
  காரணம் இல்லாமல், எந்த ஒரு தேர்வரையும், நாங்கள் நிராகரிக்கவில்லை. தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தேர்வர்களின் பெயர், நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன், இணையதளத்தில் வெளியிடுவோம். அதேபோல், இன சுழற்சி வாரியான, "கட்-ஆப்&' மதிப்பெண்கள் விவரம், பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், இணையதளத்தில் விரைவில் வெளியிடுவோம்.
  தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு, தாவரவியல் பாடத்திற்கான தேர்வுப் பட்டியல் ஆகியவற்றையும் வெளியிடுவோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

  ReplyDelete
 3. TET Exam Date June 3 - 2013 !
  அடுத்த ஆசிரியர் தகுதித்
  தேர்வு எப்பொழுது என்பதுதான் பலரின்
  கேள்வியாக உள்ளது.
  இதற்கு விடை அளிக்கும் படி கடந்த
  ஒரு வாரமாக குறுந்தகவல்களில்
  பரவி வரும் அதிகாரபூர்வமற்ற
  ஒரு தேதி சூன் 3 - 2013 அன்று.
  மற்றும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22
  வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன
  என்றும் அந்த குறுந்தகவல் செய்திகள்
  தமிழகம் முழுவதும் உலாவருகின்றன.
  ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான
  தகவல்கள் ஏதும் இன்னும்
  வெளியாகவில்லை.
  B.Ed தேர்வினை ஏப்ரல்
  மாதத்திலேயே முடிக்கும் படி மட்டும்
  தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம்
  ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பதாக
  சென்றவாரம் செய்தி வெளியாகி இருந்தது.
  மற்றபடி ஆசிரியர் தகுதித்
  தேர்வினை பற்றிய எவ்வித
  தேதி அறிவிப்பும் இன்னும்
  அதிகாரப்பூர்வமாக
  வெளிவரவில்லை என்பதை கருத்தில்
  கொள்ளவும்.
  வரும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான
  விண்ணப்பங்கள் மட்டும் ஆன்லைனில்
  விண்ணப்பிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும்
  என்று TRB ஏற்கனவே அறிவித்திருந்தது.
  இந்த நிலையில்சென்ற
  முறை அறிவிக்கப்பட்டபடியே தேதிகள்
  இந்த முறையும் இருக்கும்என்ற
  கணிப்பில்தான் இந்த
  தேதிகளையாரோ உலவ விட்டிருக்கிறார்கள் .
  உறுதியான தேதி வரும் வரை ‘ ஓடு மீன்
  ஓட வருமீன் வரும் வரைக்கும்
  வாடி இருக்குமாம் கொக்கு‘ என்பது போல
  தகுதித் தேர்விற்கு தயாராகி வருவதுதான்
  உத்தமம்... You see
  tntet2012.blogspot.com

  ReplyDelete
 4. தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
  தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இதை தவிர்க்க, அனைத்து குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்க நடப்பு கல்வி
  ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகளில், தேர்வு செய்யப்பட்ட 320 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 பிரிவுகள் ஆங்கில வழி கல்வியில் இருக்கும். இதுவரை ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. தற்போது இந்த பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். துவக்கப் பள்ளி நிலையிலேயே இந்த ஆண்டு ஆங்கில வழி தொடங்கப்பட்டதால் 24 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக ஆங்கில வழியில் படித்து வருகின்றனர்.
  இந்நிலையில், கடந்த மாதம் கோவையில் தொடக்கக் கல்வி இயக்குனரின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 24 வகையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும்குறைந்தது 10 துவக்கப் பள்ளிகளை ஆங்கில வழி இணைப்பு பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள பள்ளிகளின் முழு விவரங்களையும் ஜனவரி மாதத்திற்குள் மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அவரவர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலா 10 துவக்கப்பள்ளிகள் வீதம் மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்திற்கு 100 பள்ளிகள் என்றாலும் 32 மாவட்டத்திற்கும் 3,200 தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழி இணைப்புப் பள்ளிகளாக அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும். ‘ என்றனர்.
  இணைப்பு பள்ளி என்றால் என்ன?
  தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில், ஆங்கில வழியில் படிக்க விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அதே பள்ளியில் அவர்களுக்கு ஆங்கில வழியில் தனியாக வகுப்புகளை நடத்துவது இணைப்பு பள்ளி (பேரலல் இங்கிலீஷ்மீடியம்) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினால், பின்னர் அதே வளாகத்தில் தனியாக கட்டிடமும் கட்டப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

  ReplyDelete
 5. ஆசிரியர் தகுதித் தேர்வினை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியார்டி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் - போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாக பங்கேற்றனர்

  மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போல் தமிழக அரசு பல போராட்டங்களுக்கு பிறகும் இன்னும் வழங்கவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் பள்ளிகளை இழுத்து மூடக் கூடிய பெரிய அளவிலான போராட்டமாகத் தான் இருக்கும் என்று தூத்துக்குடியில் ஏராளமான பெண் ஆசிரியர்கள் பங்கேற்ற தொடர் முழக்க போராட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சிவன் ஆவேசமாக பேசினார்.

  மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்குவழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் மவுனம் சாதித்து மெத்தனம் காட்டிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

  அரசின் இந்த செயல் தொடக்கநிலை ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

  ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழக இடைநிலைஆசிரியர்களுக்கு 1.6.2006 முதல் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளஅனைத்து சலுகைகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

  ஆசிரியர் தகுதித் தேர்வினை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்புஅலுவலக சீனியார்டி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். கல்வித்துறை அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
  தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவன் பேசியதாவது;
  மத்திய அரசு வழங்குவது போல் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த போராட்டத்திற்கு பிறகாவது உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் மிகப் பெரிய அளவில் மறியல் போராட்டமாகவோ அல்லது பள்ளிகளை இழுத்து மூடக் கூடிய போராட்டமாகவோ இருக்கும். இதற்கான முடிவு மாநில செயற்குழுவில் எடுக்கப்படும்.
  பள்ளிக்கல்வியில் தனியார் பொது பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்றவற்றை ஆரம்பத்திலே நிறுத்தாவிட்டால் எல்லாம் தனியார் மயமாகி கல்வித்துறையை மத்திய அரசு நாசமாக்கிவிடும். இதற்காக வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி பள்ளிக்கல்வியில் தனியார் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்திடில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளன.
  பொதுக்கல்வி முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அப்படியே அமல்படுத்த வேண்டும். பணியில் உள்ள ஒப்பந்த பாரா ஆசிரியர்களுக்கு தகுதியான பயிற்சி அளித்து முழு தகுதி பெற்ற ஆசிரியர்களாக்க வேண்டும்.
  பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தி பணிக்கொடை வழங்க வேண்டும். தொடர்ந்து இந்த கோரிக்கை நிறைவேறும்வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஓயமாட்டார்கள். உறங்கமாட்டார்கள். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள் நடக்கும். இவ்வாறு சிவன் பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியன் போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாக பங்கேற்றனர

  ReplyDelete
 6. DEAR KALVISOLAI, I AM SELECTED AS PG ASSISTANT IN CHEMISTRY FOR BC,MBC DEPARTMENT FROM REVISED LIST..QUESTION IS IF I JOINED IN THAT DEPT MAY I ELIGIBLE FOR TRANSFER TO DSE SCHOOL DEPARTMENT? OR WHAT R THE CRITERIA TO TRANSFER?PLS GIVE THE SUGGESTION SIR


  DEIVARAJ.K M.SC.,B.ED.,M.PHIL

  ReplyDelete
 7. DEAR KALVISOLAI., I AM SELECTED AS PG ASSISTANT IN CHEMISTRY FOR BC,MBC DEPARTMENT RECENTLY..IF I JOIN THAT DEPARTMENT MAY I ELIGIBLE FOR TRANSFER TO DSE SCHOOL DEPARTMENT?WHAT R THE CRITERIA FOR TRNSFER? PLS GIVE ME THE SUGGESTION SIR?

  DEIVARAJ.K M.SC.,B.ED.,M.PHIL

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.