உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதம் என்று நிர்ணயம் செய்து கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதில் இந்த கோர்ட்டு தலையிட முடியாது. மேலும், பக்கத்து மாநிலங்களில் குறைவான தகுதி மதிப்பெண் உள்ளது என்ற காரணம் கூறி, தமிழகத்தில் தகுதி மதிப்பெண்ணை குறைக்க முடியாது. இதில் சலுகை காட்ட முடியாது. எனவே மனுக்களை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

3 comments:

 1. அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,063 பேராசிரியர்கள் நியமனம்: முறைகேடுகளைத் தடுக்க போட்டித்தேர்வு வேண்டும்:விரிவுரையாளர்கள் கோரிக்கை
  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றுவிரிவுரையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்வலியுறுத்தினர்.
  இப்போதுள்ள முறையின் படி நேர்முகத் தேர்வுக்கும், அனுபவத்துக்கும் அதிக மதிப்பெண் இருப்பதால் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  புதிய முறையில் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (நெட்), மாநில விரிவுரையாளர்தகுதித் தேர்வு (செட்) ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர்.
  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,063 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்க நிலையில், இந்தத் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகமான காலிப்பணியிடங்கள் இருந்ததால் அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய தேர்வு முறையை தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் அரசுக்குப் பரிந்துரை செய்தது.
  அதன்படி, பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும், பி.எச்டி பட்டத்துக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
  பி.எச்டி. பட்டம் பெறாமல் எம்.பில். பட்டத்துடன் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு, மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்ணும், தகுதித் தேர்வுகளில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
  அரசுக் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில் கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட இந்தத் தேர்வு முறையால் தரமான ஆசிரியர்கள் அதிகம் தேர்வாகவில்லை என தமிழ்நாடு அரசுக் கல்லூரிஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் கோ.க.பழனிகூறினார்.
  இந்த மதிப்பெண் முறையால் நெட், ஸ்லெட் (செட்) தேர்வுகளில் தகுதி பெற்றவர்களும் அதிகமான அளவில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு பெறவில்லை. நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் அனுபவச் சான்றிதழ் போன்றவற்றால் நிறைய பேர் தேர்வானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
  சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் பெற்றுக்கொண்டு போலியான அனுபவச் சான்றிதழ்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், புத்தகம் வெளியிட்டிருந்தால் மதிப்பெண் என்ற பிரிவுஇருந்தது. இதற்காகவும் நிறைய பேர் பணம் செலுத்தி புத்தகம் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
  இந்த காரணங்களால் புதிய மதிப்பெண் முறையை பரிந்துரைத்த தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகமே அதை எடுத்துவிட்டு போட்டித் தேர்வு நடத்துமாறு அரசுக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.
  ஆனால், அந்தப் பரிந்துரை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று விரிவுரையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
  இதில் போட்டித் தேர்வு மதிப்பெண்ணோடு, அனுபவத்துக்கு 2 மதிப்பெண்ணும், உயர் கல்விக்கு 8 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் விரிவுரையாளர்களை நியமிக்க இதுவே சிறந்த வழிமுறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
  கடந்த 2009-10-ம் ஆண்டில் 1,022 விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக ஊழல் கண்காணிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
  நெட், செட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள பி.எச்டி. மாணவரான வேல்முருகன் கூறும்போது,"இப்போதுள்ள தேர்வு முறையில் இளைஞர்களும், தகுதியானவர்களும் வருவதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. தகுதித் தேர்வுகளுக்கும், இதில் பெறும் மதிப்பெண்ணுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
  நியாயமாக தேர்வு செய்தால்போதும்: ஏற்கெனவேநெட், செட் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு வைக்கக் கூடாது. இப்போதுள்ள மதிப்பெண் முறைகளைப் பின்பற்றி, விரிவுரையாளர் நியமனத்தை நேர்மையாக நடத்த வேண்டும்என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.பிச்சாண்டி கூறினார்.
  நெட், செட் தேர்வுகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் தேர்வு பெறுவதால் மற்றுமொரு தேர்வை வைத்தால் தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 21 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி,முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டபோதும் முறைகேடு புகார்கள் எழவில்லை. ஆனால், இப்போதுள்ள முறையில் 1,063உதவிப் பேராசிரியர்கள் நியமனம் நடைபெற்றால் முறைகேடுகள் நடைபெறும் என்கிறஅச்சம் தகுதியானவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

  ReplyDelete
 2. முதலில் வேலை, பின்னர் தகுதித்தேர்வு பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எல்.ஏ ஆபீசில் மனு
  தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வந்தனர். அங்குள்ள ஊழியரிடம் மனு அளித்தனர். அதில், கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஆசிரியர் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட் டாய கல்வி உரி மைச் சட்டத்தில் தகு தித் தேர்வு தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் அனுமதியளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்து விட்டு, ஐந்து ஆண்டுகளில் அவர் களை தகுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண் டும். இதற்கு முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
  இது குறித்து சங்க தலைவர் சுந்தர் கூறுகையில், கட்டாய கல்வி உரிமை சட்டப்படியான தகுதித் தேர் வை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருப்போருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பணி நியமனம் பெற்ற 5 ஆண்டுகளில் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, பணி நியமனம் கிடைக் கும் என்று காத்திருக்கும் பல்லாயிரம் பேருக்கு நம்பிக்கை ஏற்படும். இதற்காக மனு கொடுத்துள்ளோம் என்றார்.

  ReplyDelete

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.