உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

TNPSC குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு முறைகளில் மாற்றம். பாடத்திட்டம் மற்றும் வினாத்தாளும் மாறுகின்றன டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

 • குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு முறைகள், பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் முறைகளில் மாற்றம் செய்து டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. 
 • இந்த முறை வரும் தேர்வில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. 
 • அந்த வகையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 என பல்வேறு நிலைகளுக்கும் தனித்தனியே தேர்வு நடத்தப்படுகிறது. 
 • இதற்காக ஒவ்வொரு நிலைகளுக்கும் கல்வி, வயது தகுதிகள் மற்றும் பாடத்திட்டங்கள் என்ற வழிமுறைகளை நிர்ணயம் செய்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. 
 • இந்தநிலையில் குரூப்-2 நிலைகளில் உள்ள பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாதது (குரூப்-2 ஏ) என்ற 2 வகைகளில் தேர்வு நடத்தப்படுகிறது. 
 • இதில் குரூப்-2 பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு இருக்கும். குரூப்-2 ஏ பணிகளுக்கு ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் இருக்கும். 
 • தற்போது அந்த முறையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மாற்றியுள்ளது. மேலும், அந்த பணிகளுக்கான பாடத்திட்டம், வினாத்தாள் முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது. 
 • பொதுவாக குரூப்-2 பணிகளுக்கு முதல்நிலை தேர்வில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு, மனக்கணக்கு, திறனறிவு என்ற அடிப்படையில் 200 வினாக்கள் கேட்கப்படும். 
 • ஆனால் இனிமேல் அந்த முறை கிடையாது. அதாவது இதில் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் எடுக்கப்பட்டு, பொது அறிவில் மட்டுமே 175 வினாக்களும் (பட்டப்படிப்பு தரம்), மனக்கணக்கு, திறனறிவு, நுண்ணறிவு (10-ம் வகுப்பு தரம்) தொடர்பாக 25 வினாக்களும் என 200 வினாக்கள் கேட்கப்படும். இவையனைத்தும் கொள்குறி வகை வினாக்களாக இருக்கும். அதேபோல், முதன்மை தேர்வில் பாடத்திட்டத்திலும், வினாக்கள் வடிவமைப்பிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. 
 • அதன்படி, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் பிரிவுகளில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இது முதல் பிரிவு ஆகும். 
 • 2-வது பிரிவில், சுருக்கி எழுதுதல், பொருள் உணர்ந்து பதில் அளித்தல், சுருக்க குறிப்பில் இருந்து விரிவாக எழுதுதல், திருக்குறள் தொடர்பாக கட்டுரை எழுதுதல், கடிதம் எழுதுதல் (அலுவலகம் சார்ந்தது) என 200 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். 
 • இவை கொள்குறி வகையாக இருக்காது, பள்ளி வகுப்புகளில் இருக்கும் தேர்வு போல எழுத வேண்டும். முதல் பிரிவில் 100 மதிப்பெண்ணுக்கு கண்டிப்பாக 25 மதிப்பெண் எடுத்தாக வேண்டும். அப்படி இல்லை என்றால், 2-வது பிரிவு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இந்த தேர்வை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதலாம். 
 • பிரிவு-1, பிரிவு-2 இரண்டிலும் பெறும் மதிப்பெண் தான் கணக்கில் கொள்ளப்படும். முதன்மை தேர்வின் 300 மதிப்பெண், நேர்முகத்தேர்வு 40 மதிப்பெண் ஆகியவை சேர்ந்த மொத்த மதிப்பெண்ணான 340-ல், அனைத்து வகுப்பினரும் குறைந்தபட்சம் 102 மதிப்பெண் எடுக்க வேண்டும். 
 • குரூப்-2 ஏ பணிகளுக்கு ஒரே தேர்வு முறை முன்பு இருந்தது. தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டு குரூப்-2 பணிகளுக்கு போன்று முதல்நிலை, முதன்மை தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். நேர்முகத்தேர்வு கிடையாது. முதன்மை தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு அனைத்து வகுப்பினரும் குறைந்தபட்சம் 90 மதிப்பெண் எடுத்தாக வேண்டும். 
 • புதிய பாடத்திட்டம் குறித்து tnpsc.gov.in/new_syllabus.html என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். 
 • இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கே.நந்தகுமார் கூறுகையில், ‘குரூப்-2 முதன்மை தேர்வில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. முன்பு பாட அறிவை வளர்க்கும் விதமாக வினாக்கள் கேட்கப்பட்டன. 
 • தற்போது மொழி அறிவை வளர்க்கும் விதமாக பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்பட இருக்கின்றன. குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பணிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 
 • அந்த தேர்வில் இருந்து இந்த முறை அமல்படுத்தப்படும்’ என்றார்.
Read More News - Download

No comments:

Post a Comment

1. www.news.kalvisolai.com

2. www.studymaterial.kalvisolai.com

3. www.tamilgk.kalvisolai.com

4. www.onlinetest.kalvisolai.com

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.