தமிழக அரசு நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல் நிலை தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக பணியாளர் நலத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய தேர்வாணையக் குழு முதல் நிலைத் தேர்வுகளில் (31-5-2020) வெற்றிபெற, தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரி, முது நிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு, கட்டணம் ஏதுமின்றி ஆறுமாத கால உண்டு உறைவிட பயிற்சியை அளிக்கிறது. இப்பயிற்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ‘அகில இந்திய குடிமைப்பணித்தேர்வு பயிற்சி மையத்தில்’ அளிக்கப் படும். இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு அக். 13-ல் தமிழகத்தில் 20 மையங்களில் நடைபெறும். இணையதளத்தில் இப்பயிற்சிக்கு செப்.16-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை ‘www.civilservicecoaching.com’ என்ற இணைய தளத்தில் இருந்து பெறலாம்.
Read More News - Download

Comments