CLASS 12 BIOLOGY & ZOOLOGY - CHAPTER 2 மனித இனப்பெருக்கம் | HUMAN REPRODUCTION | BOOK BACK | 2,3 & 5 MARK QUESTION AND ANSWER.

1 ➤ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் - வேறுபடுத்துக.
➤Mention the differences between spermiogenesis and spermatogenesis.

➤ஸ்பெர்மியோஜெனிசில் : ஸ்பெர்மெட்டியிலிருந்து செயலாற்றும் விந்து செல்லாக மாறும் செயல்.
➤ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் : ஆண் இனச்செல்கள் (அ) விந்துக்கள் உற்பத்தி செய்யப்படுதல்.

➤spermatogenesis in which the haploid spermatids are transformed into mature sperm.
➤Spermatogenesis is the formation of male gametes or the sperms

2 ➤புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?
➤At what stage of development are the gametes formed in new born male and female?

➤பூப்பெய்தும் காலத்தில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது.

➤Development of gametes starts at the age of puberty.

3 ➤விரிவாக்கம் தருக. அ) FSH ஆ) LH இ) hCG ஈ ) hPL
➤Expand the acronyms a. FSH b. LH c. hCG d. hPL

➤அ) FSH - நுண்பைசெல் தூண்டும் ஹார்மோன்
➤ஆ) LH - லூட்டினைசிங் ஹார்மோன்
➤இ) hCG - மனித கோரியானிக் கொனடோடிரோபின்
➤ஈ) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜென்

➤a. FSH - Follicular Stimulating Hormone
➤b.LH - Leutinising Hormone
➤c.hCG - Human Chorionic Gonadotropin
➤d.hPL - Human Placental Lactogen.

4 ➤மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?
➤How is polyspermy avoided in humans?

➤கார்டிகல் துகள்கள் ஒன்றிணைந்து கருவுறுதல் சவ்வு என்னும் தடுப்புச்சவ்வை உருவாகிறது.
➤கருவுறுதல் சவ்வு மூலம் பல விந்தணுக்கள் கருவுறுதலில் ஈடுபடுவது தடுக்கப்படுகிறது.

➤cortical granules from the cytoplasm of the ovum form a barrier called the fertilization membrane around the ovum.
➤This prevents further penetration of other sperms.

5 ➤தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித்திசு – நியாயப்படுத்து.
➤Placenta is an endocrine tissue. Justify.

➤hCG, hCS, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான், ரிலாக்ஸின் போன்ற ஹார்மோன்களை, தாய் சேய் இணைப்பு திசு சுரப்பதால், இது ஒரு நாளமில்லா சுரப்பித் திசு என அழைக்கப்படுகிறது.

➤During pregnancy, the placenta acts as a temporary endocrine gland and produces hCG, hCS, Oestrogens, progesterone and Relaxin.

6 ➤முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி.
➤Draw a labeled sketch of a spermatozoan.

➤விந்தணு.
➤SPERM

7 ➤இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை?
➤What is inhibin? State its functions.

➤விந்தக நுண் குழலில் உள்ள செர்டோலி செல்களால் சுரக்கப்படுவது இன்ஹிபின் எனும் ஹார்மோனாகும்.
➤இந்த ஹார்மோன் எதிர்மறை பின்னூட்ட கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றன.

➤Inhibin is a hormone secreted by the sertoli cells in the stratified epithelium of the seminiferous tubule in the testis.
➤Function : It is involved in the negative feedback control of sperm production.

8 ➤விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.
➤Mention the importance of the position of the testes in humans.

➤இயல்பான மனித உடல் வெப்பத்தில் வீரியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய இயலாது.
➤விதைப்பையானது வயிற்றறையின் வெளியில் இயல்பான உடல் வெப்ப நிலையைவிட 2-3°C குறைவான வெப்பநிலையை விந்தகங்களுக்கு அளித்து விந்து செல் உற்பத்தியை நெறிபடுத்துகிறது.

➤Viable sperms cannot be produced at normal body temperature
➤The scrotum is placed outside the abdominal cavity to provide a temperature 2-3°C lower than the normal internal body temperature

9 ➤விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?
➤What is the composition of semen?

➤சிட்ரேட்
➤நொதிகள்
➤ஆன்டிஜென்கள்
➤ஃப்ரக்டோஸ்
➤அஸ்கார்பிக் அமிலம்
➤புரோஸ்டகிளான்டின்கள்
➤வெஸிகுலேஸ்

➤Citrate
➤ Enzymes
➤Prostate specific antigens
➤Fructose sugar
➤Ascorbic acid
➤Prostaglandins
➤Vesiculase.

10 ➤கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
➤Name the hormones produced from the placenta during pregnancy.

➤hCG
➤hPL
➤ரிலாக்ஸின்
➤ஈஸ்ட்ரோஜன்
➤புரோஜெஸ்டிரோன்
➤புரோலாக்டின்

➤hCG
➤hPL
➤Oestrogens
➤Progesterone
➤Relaxin
➤Prolactin.

11 ➤இனச்செல்உருவாக்கம் - வரையறு?
➤Define gametogenesis.

➤உயிரிகளில் பாலுறுப்புகளிலிருந்து விந்துக்களும் அண்டமும் உருவாகும் நிகழ்ச்சி இனச்செல் உருவாக்கம் எனப்படும்.

➤Gametogenesis is the process of formation of gametes i.e., sperms and ovary from the primary sex organs in all sexually reproducing organisms.

12 ➤அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி.
➤Describe the structure of the human ovum with a neat labelled diagram.

➤நுண்ணிய, ஓடற்ற, கரு உணவு அற்ற தன்மையுடைய செல்.
➤இதன் சைட்டோபிளாசம் 'ஊபிளாசம்' (Ooplasm) என்று அழைக்கப்படும்.
➤இதனுள் காணப்படும் பெரிய உட்கருவிற்கு 'வளர்ச்சிப்பை ' (Germinal Vesicle) என்று பெயர்.
➤அண்ட செல் மூன்று உறைகளைக் கொண்டது.
➤ உட்புறம்-விட்டலின் சவ்வு, நடுப்பகுதி-சோனா பெலூசிடா, வெளிப்புறம் - கரோனோ ரேடியேட்டா.
➤விட்டலின் சவ்வுக்கும் சோனா பெலூசிடாவுக்கும் இடையில் ஒரு குறுகிய 'விட்டலின் புற இடைவெளி' (Perivitelline space) காணப்படுகிறது.
➤அண்ட செல்

➤Non cleidoic, alecithal and microscopic in nature.
➤Its cytoplasm called ooplasm contains a large nucleus called the germinal vesicle.
➤The ovum is surrounded by three coverings
➤an inner thin transparent -vitelline membrane, middle-zona pellucida and outer-corona radiata.
➤Between the vitelline membrane and zona pellucida is a narrow perivitelline space.
➤HUMAN OVUM

13 ➤மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.
➤Give a schematic representation of spermatogenesis and oogenesis in humans.

➤மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.

➤Give a schematic representation of spermatogenesis and oogenesis in humans.

14 ➤கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து 'அ', 'ஆ' 'இ' மற்றும் 'ஈ' எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.
➤Identify the given image and label its parts marked as a, b, c and d

➤கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து 'அ', 'ஆ' 'இ' மற்றும் 'ஈ' எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.
➤IDENTIFY THE GIVEN IMAGE AND LABEL ITS PARTS MARKED AS A, B, C AND D. ➤அ) விட்டலின் சவ்வு
➤ஆ) இனச்செல் பை
➤இ) சோனா பெலூசிடா
➤ஈ) கரோனா ரேடியேட்டா

➤a.Vitelline membrane,
➤b.Germinal vasicle
➤c. Zona pellucida
➤d.Corona radiata

6 comments:

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

TRB PG RECRUITMENT 2021 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : PGT/PD/Computer Instructor Grade I விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2021. | Click Here
kalvisolai-kalviseihi-padasalai-kalvikural-kaninikkalvi-

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.